January 22, 2022

பதிவு-11-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-11-வினைவலியும்-

திருக்குறள்-

 

ஜுலியஸ் சீசரைப்

பற்றி

ஆய்வு செய்ததில்

ஜுலியஸ் சீசரிடம்

உள்ள குறை எது

என்பதைக் கண்டு

பிடித்து விட்டார்

கிளியோபாட்ரா

 

ஜுலியஸ் சீசர்

ஒரு பெண் பித்தர்

என்பதையும்,

பெண் என்றால்

பேயாய் அலைபவர்

என்பதையும்,

பல பெண்களுடன்

தொடர்பில்

இருப்பவர்

என்பதையும்

பல பெண்களை

சுவைத்தவர்

என்பதையும்

தெரிந்து கொண்டாள்

கிளியோபாட்ரா

 

காமத்தை பல

வழிகளில் சுவைத்தவர்

ஜுலியஸ் சீசர்

என்ற காரணத்தினால்

ஜுலியஸ் சீசரை

காமத்தால் வீழ்த்த

முடியாது என்று

தெரிந்து கொண்டாள்

கிளியோபாட்ரா

 

காமத்தால்

ஒருவரை

வீழ்த்துவது எளிது

காமத்தால்

வீழ்த்தப்பட்டவர்

நம்முடன்

நீண்ட நாட்கள்

இருக்க மாட்டார்

காமம்

எழும் போது

நம் நினைவு வரும்

காமம்

தீரும் போது

நம் நினைவு

மறந்து விடும்

 

காதலால் வீழ்த்தினால்

உடலில்

உயிர் இருக்கும்

வரை அவர்

நம்மை விட்டு

பிரிய மாட்டார்

காதலால்

வீழ்த்தப்பட்டவருக்கு

நம்முடைய சிந்தனை

எப்போதும் இருக்கும்

மறக்க மாட்டார்

 

காதலுக்கும்

காமத்துக்கும்

உள்ள வேறுபாட்டை

புரிந்து கொண்ட

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரை

காதலால்

வீழ்த்த முடிவு

எடுத்தார்

அதற்காக

தெளிவான திட்டம்

ஒன்றைத் தீட்டினார்

 

நான் உங்களைத்

தனிமையில்

சந்திக்க வேண்டும்

நம்முடைய

சந்திப்பு ரகசியமாக

இருக்க வேண்டும்

யாருக்கும்

தெரியக் கூடாது

என்று

ஜுலியஸ் சீசருக்கு

ரகசியத் தூதன்

மூலம் செய்தி

அனுப்பினார்

 

அதற்கு

ஜுலியஸ் சீசர்

பதில் அனுப்பினார்

நீங்கள் எப்போது

வேண்டுமானாலும்

வரலாம்

நீங்கள் வருவதும்

போவதும் யாருக்கும்

தெரியாமல்

ரகசியமாக

வைக்கப்படும்

நீங்கள் வந்து

செல்வது ரகசியமாக

வைக்கப்படும்

 

ஜுலியஸ் சீசரிடமிருந்து

பதில் பெற்ற

கிளியோபாட்ரா

ஜுலியஸ் சீசரை

சந்திக்க தரைவழி

சென்றால்  தனக்கு

பாதுகாப்பில்லை

தன்னுடைய எதிரிகளால்

தன்னுடைய

உயிருக்கு ஆபத்து

எனவே

கடல்வழியாகத் தான்

செல்ல வேண்டும்

என்று முடிவு எடுத்து

தன்னுடைய முழு

நம்பிக்கைக்குரிய

பாதுகாவலன்

அப்போலோடோரஸ்

(APPOLLODORUS)

அழைத்துக் கொண்டு

கடல் வழியில்

படகில் பயணம்

மேற்கொண்டார்

கிளியோபாட்ரா

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment