பதிவு-5-வினைவலியும்-
திருக்குறள்-
கர்மவினையின்
விளைவானது
தோல்வியைக்
கொடுக்கும் என்று
இருக்கும் போது
சோதிட சாஸ்திரம்
பஞ்சபட்சி சாஸ்திரம்
சர சாஸ்திரம்
ஆகியவற்றின்
மூலமாக
நல்ல நாள் அந்த
நல்ல நாளில்
நல்ல நேரம்
ஆகியவற்றைக்
கணித்து
அந்த நல்ல நாள்
அந்த நல்ல
நாளில்
நல்ல நேரத்தில்
தொழிலைத்
தொடங்கினால்
தோல்வி அடையக்
கூடிய தொழிலும்
வெற்றி அடையும்
கணிக்காமல்
தொழிலைத்
தொடங்கினால்
தோல்வி அடையக்
கூடிய தொழில்
தோல்வியில்
தான் முடியும்
வெற்றி அடையாது
இரண்டு :
கிளியோபாட்ரா
அல்லி மேனி
பவள செவ்வாய்
கார் கூந்தல்
மயக்கும் நடை
இரத்த அதரங்கள்
கொண்ட
ஜொலிக்கும் வைரம்
சிற்பி செதுக்காத
பொற்சிலை
காண்போரை
கவர்ந்திழுக்கும்
அழகு ராணி
தென்றல் தவழும்
பூஞ்சோலை
கறுப்பு தங்கம்
இன்றளவும்
பார்போற்றும்
உலக அழகி
இத்தகைய
சிறப்புகளைக் கொண்ட
கிளியோபாட்ரா
அழகு தேவதை
மட்டுமல்ல
அறிவு, அழகு,
வீரம், திறமை,
ராஜதந்திரம்,
அரசியல் சூழ்ச்சி,
அனைத்தையும்
சமாளிக்கும் திறமை,
தொலைநோக்கு
பார்வை,
ஆகியவை
மட்டுமல்ல
இன்னும்
பல்வேறு சிறப்பு
அம்சங்களையும்
தன்னகத்தே
கொண்டவர்.
கிளியோபாட்ராக்கு
வானியலும் தெரியும்
சோதிடமும் தெரியும்
கிளியோபாட்ராவுக்கு
செம்பு, தகரம் போன்ற
மதிப்புக் குறைந்த
உலோகங்களை
மதிப்பு மிக்க
தங்கமாக மாற்றும்
முறையான
ரசவாதமும் தெரியும்
கணிதம், மருத்துவம்,
தத்துவம்
ஆகியவையும்
தெரியும்.
நிர்வாகம்,
போர்முறைகள்,
குதிரை சவாரி,
வாள் வீச்சு,
ஈட்டி எறிதல்,
ஆகியவற்றிலும்
தேர்ச்சி பெற்று
அனைத்தையும்
கையாளத் தெரிந்தவர்
கிளியோபாட்ராவுக்கு
கிரேக்கம்,
காப்டிக் (COPTIC),
சிரியாக்(SYRIAC).
அரபிக்,
ஹீப்ரு,
மெடியன்(MEDEAN),
பார்த்தியன் (PARTHIAN),
அம்ஹாரிக் (AMHARIC),
ட்ரோக்ளோடைட்
(TROGLODYTE)
ஆகிய மொழிகளில்
உரையாடத் தெரியும்
கிளியோபாட்ரா
கற்றுக் கொண்ட
எந்த ஒரு மொழியிலும்
சரளமாகப் பேசத்
தெரிந்தவர்
ஒரு மொழியில்
சரளமாகப்
பேசிக்கொண்டிருக்கும்
போதே இன்னொரு
மொழிக்கு மாறி
சரளமாகப் பேசத்
தெரிந்தவர்
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment