January 22, 2022

பதிவு-10-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-10-வினைவலியும்-

திருக்குறள்-

 

எதிரிகளே

பாராட்டக்கூடிய

அரசியல்

சூழ்ச்சியையும்

எதிரிகளே

பிரமிக்கத் தக்க

ராஜதந்திரத்தையும்

கொண்ட

கிளியோபாட்ராவை

எகிப்து நாட்டின்

அரசியாகக்

கூடாது என்று

தடுத்தவர்களில்

முக்கியமானவர்கள்

தியோடோடோஸ்

(THEODOTOS)

போதினெஸ்

அக்கிலஸ்

(ACHILLAS)

அவரது தம்பி

பதிமூன்றாம் தாலமி

தங்கை அர்சினோ

ஆகியோர் ஆவர்

 

இவர்களுடைய

சதிவேலையில்

இருந்து தன்னை

காத்துக் கொண்டு

எகிப்து நாட்டின்

அரசியாக வேண்டும்

என்றால்

தனக்கு துணையாக

இருப்பவர்

வல்லமை

பொருந்தியவராக

இருக்க வேண்டும்

என்பதையும்

எதையும்

சமாளிக்கக்கூடிய

திறமை படைத்தவராக

இருக்க வேண்டும்

என்பதையும்

யோசித்த

கிளியோபாட்ரா

ரோமபுரி நாட்டின்

ஜுலியஸ் சீசர்

தான் தன்னுடைய

எண்ணங்களை

நிறைவேற்றக்

கூடியவர் என்பதை

உணர்ந்து அவரை

தனக்கு துணையாக

வைத்துக் கொள்ள

வேண்டும் என்று

முடிவு எடுத்தார்

கிளியோபாட்ரா

 

ஜுலியஸ் சீசர்,

தனக்கு உதவியாக

இருக்கச் சொல்ல

வேண்டும்

தனக்கு துணையாக

இருக்கச் சொல்ல

வேண்டும்

தனது எண்ணங்களை

நிறைவேற்றச்

சொல்ல வேண்டும்

தனக்கு ஆதரவு

அளிக்கச் சொல்ல

வேண்டும்

தனக்கு

உதவியாக நிற்கச்

சொல்ல வேண்டும்

அதற்காக

ஜுலியஸ் சீசரை

எப்படியாவது

நேரில் சந்தித்தாக

வேண்டும் என்று

கிளியோபாட்ரா

முடிவு எடுத்தார்

 

ஜுலியஸ் சீசரை

பார்க்க வேண்டும்

என்று

கிளியோபாட்ரா

எப்போது முடிவு

எடுத்தாரோ

அப்போதே

ஜுலியஸ் சீசரைப்

பற்றிய அனைத்து

விவரங்களையும்

சேகரிக்க ஆரம்பித்தார்

 

ஜுலியஸ் சீசருக்கு

என்ன பிடிக்கும்

என்ன பிடிக்காது

யாரைப் பிடிக்கும்

யாரைப் பிடிக்காது

எந்த செயல்களைச்

செய்வார்

எந்த செயல்களைச்

செய்ய மாட்டார்

எதற்கு கட்டுப்படுவார்

எதற்கு கட்டுப்பட

மாட்டார்

எதற்கு

அடிமையாக இருப்பார்

எதற்கு அடிமையாக

இருக்க மாட்டார்

யாரை நம்புவார்

யாரை நம்ப மாட்டார்

யாரை எதிர்ப்பார்

யாரை எதிர்க்க

மாட்டார்

அவருடைய

நிறைகள் எது

அவருடைய

குறைகள் எது

அவரை எதை வைத்து

வீழ்த்தலாம் அவரை

எதை வைத்து

வீழ்த்த முடியாது

என்று பல்வேறு

நிலைகளில் நின்று

ஜுலியஸ் சீசரைப்

பற்றிய அனைத்து

விவரங்களையும்

சேகரித்தார்

கிளியோபாட்ரா

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment