பதிவு-8-வினைவலியும்-
திருக்குறள்-
ஜுலியஸ் சீசரையும்
ஆன்ட்டனியையும்
கிளியோபாட்ரா
காமத்தால் வீழ்த்தினார்
என்று சொல்வார்கள்
அது தவறு
கிளியோபாட்ரா
ஜுலியஸ் சீசரையும்
ஆன்ட்டனியையும்
காமத்தால்
வீழ்த்தவில்லை
காதலால்
வீழ்த்தினாள்
காமம்
நிலையில்லாதது
காமம்
காலத்திற்கு
ஏற்றவாறு
மாறக்கூடியது
காமம்
அனைவருக்கும்
ஒரே மாதிரி
இருக்காது
காமம்
மனதைப் பொறுத்து
உருவம்
பெறக்கூடியது
காமம்
மனிதர்களைப்
பொறுத்து
வித்தியாசப்படுவது
காமம்
மனிதர்களைப்
பொறுத்து
அவர்களுடைய
தேவையைப்
பொறுத்து
மாறிக் கொண்டே
இருப்பது
காமம்
சிறிது நேரம் தான்
உயிர்த் தன்மையுடன்
இருக்கும்
காமத்தில்
உயிர்த்தன்மை
தொடர்ந்து இருக்காது
குறிப்பிட்ட காலம்
வரை தான்
இருக்கும்
காமம்
தன் தேவை
முடியும் வரை தான்
உயிர்த்தன்மையுடன்
இருக்கும்
காமத்தின்
தேவை முடிந்தவுடன்
காமம்
தன்
உயிர்த்தன்மையை
இழந்து விடும்
ஆனால்
காதல்
பிரபஞ்சத்தின்
உயிர்த்தன்மை
கொண்ட உணர்வு
காதல்
இந்த
பிரபஞ்சத்தையே
இயங்க வைக்கிறது
காதல்
என்றும் இருப்பது
காதல்
அழிவில்லாதது
காதல்
இறவா வரம்
பெற்றது
காதல்
இறக்காது
காதலை
யாராலும்
அழிக்க முடியாது
காதல்
வற்றாமல்
இருப்பது
காதல்
அள்ள அள்ளக்
குறையாது
காதல்
சுவைக்க சுவைக்க
திகட்டாது
காதல்
அனுபவிக்க
அனுபவிக்க
பிரமிப்பை
ஏற்படுத்தக் கூடியது
காதல்
என்றும்
உயிர்த் தன்மையுடன்
இருப்பது
காதலுக்கு
முடிவு என்ற
ஒன்று கிடையாது
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment