பதிவு-2-வினைவலியும்-
திருக்குறள்-
காலம் என்பது
நாம் ஒரு
செயலைச் செய்யத்
தொடங்குவதற்குரிய
நல்ல நாளைக்
குறிக்கிறது
நேரம் என்பது
நாம் ஒரு
செயலைச் செய்யத்
தொடங்குவதற்குரிய
நல்ல நாளில் உள்ள
நல்ல நேரத்தைக்
குறிக்கிறது.
திருக்குறள்
இரண்டாவதாகக்
குறிப்பிடும்
தன்வலி என்பது
நம்முடைய
வலிமையைக்
குறிக்கிறது.
திருக்குறள்
மூன்றாவதாகக்
குறிப்பிடும்
மாற்றான் வலி
என்பது
நம்முடைய
எதிரியின்
வலிமையைக்
குறிக்கிறது.
திருக்குறள்
நான்காவதாகக்
குறிப்பிடும்
துணை வலி
என்பது
நமக்கு துணையாக
இருப்பவர்களுடைய
வலிமையையும்,
நமக்கு எதிரியாக
இருப்பவர்களுக்கு
துணையாக
இருப்பவர்களுடைய
வலிமையையும்
குறிக்கிறது.
இந்த உலகத்தில்
உள்ளவர்களை
எடுத்துக் கொண்டால்
ஒரு செயலைச்
செய்யத்
தொடங்குவதற்கு
முன்னர்
இரண்டு வேறுபட்ட
முறைகளைக்
கையாள்கின்றனர்.
ஒன்று :
ஒரு செயலைச்
செய்யத்
தொடங்குவதற்கு
முன்னர்
தன்னுடைய வலிமை
எதிரியின் வலிமை
துணையின் வலிமை
ஆகியவற்றை
ஆராய்ந்த பிறகு
கர்மவினையினால்
ஏற்படக்கூடிய
விளைவினைக்
கண்டறிந்து
காலம் நேரம்
பார்த்து செயலைச்
செய்கின்றனர்
இரண்டு :
ஒரு செயலைச்
செய்யத்
தொடங்குவதற்கு
முன்னர்
தன்னுடைய வலிமை
எதிரியின் வலிமை
துணையின் வலிமை
ஆகியவற்றை
ஆராய்ந்த பிறகு
கர்மவினையினால்
ஏற்படக்கூடிய
விளைவினைக்
கண்டறியாமல்
காலம் நேரம்
பார்க்காமல்
செயலைச்
செய்கின்றனர்
தன்வலி :
நாம் ஒரு
தொழிலைத்
தொடங்கலாம்
என்று முடிவு
எடுக்கிறோம்
அந்தத் தொழிலைத்
தொடங்குவதற்கு
முன்னர்
அந்தத் தொழிலைச்
செய்வதற்குரிய
திறமை நம்மிடம்
இருக்கிறதா
அந்தத் தொழிலைச்
செய்வதற்குரிய
அறிவு நம்மிடம்
இருக்கிறதா
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------22-01-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment