January 22, 2022

பதிவு-3-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-3-வினைவலியும்-

திருக்குறள்-

 

அந்தத் தொழிலைச்

செய்வதற்குரிய

அனுபவம்

நம்மிடம் இருக்கிறதா

 

அந்தத் தொழிலைச்

செய்வதற்குரிய

பணம் நம்மிடம்

இருக்கிறதா

 

அந்தத் தொழிலைச்

செய்யும் போது

நஷ்டம் ஏற்பட்டால்

அதைச்

சமாளிக்கும் திறமை

நம்மிடம் இருக்கிறதா

 

என்பதை ஆராய்ந்து

பார்க்க வேண்டும்.

 

மாற்றான் வலி :

நாம் செய்யும்

தொழிலை

செய்ய விடாமல்

தடுக்கக் கூடிய

நம்முடைய எதிரிகள்

யார் என்பதைக்

கண்டறிய வேண்டும்

 

எதிரி நம்மால்

சமாளிக்கக் கூடிய

வகையில் இருப்பவரா

அல்லது

எதிரி நம்மால்

சமாளிக்க முடியாத

வகையில் இருப்பவரா

என்பதைக்

கண்டறிய வேண்டும்.

 

நம்மால் சமாளிக்கும்

வகையில் இருக்கும்

எதிரி என்றால்

கவலையில்லை

 

நம்மால் சமாளிக்க

முடியாத வகையில்

எதிரி இருந்தால்

அந்த எதிரியை

எப்படி சமாளிக்க

வேண்டும்,

எந்த வகையில்

சமாளிக்க வேண்டும்

எந்த முறையில்

சமாளிக்க வேண்டும்

எதைக் கொண்டு

சமாளிக்க வேண்டும்,

யாரைக் கொண்டு

சமாளிக்க வேண்டும்,

எதைக் கொடுத்து

சமாளிக்க வேண்டும்

என்பதை ஆராய்ந்து

பார்க்க வேண்டும்,.

 

துணை வலி :

ஒரு தொழிலைச்

செய்யும்போது

தொழிலில் இலாபம்

வரும் போது

நம்முடன்

இருந்து விட்டு

தொழிலில் நஷ்டம்

ஏற்படும் போது

நம்மை விட்டு

விலகிச் செல்பவர்கள்

யார் என்பதைக்

கண்டறிந்து

அவர்களை நம்முடன்

சேர்க்கக் கூடாது

நமக்கு துணையாக

வைத்துக்

கொள்ளக் கூடாது

 

ஒரு தொழிலைச்

செய்யும்போது

இலாபம்

வரும் போதும்

நஷ்டம்

வரும் போதும்

நம்முடன்

இருப்பவர்கள் யார்

 

நம்முடைய

தொழிலுக்கு துணையாக

இருப்பவர்கள் யார்

 

நமக்கு உதவியாக

இருப்பவர்கள் யார்

 

நமக்கு எதிரியாக

வருபவர்களை

சமாளிக்கும் திறன்

படைத்தவர்கள் யார்

 

நம்முடைய எதிரி

பணம் பதவி அதிகாரம்

ஆகியவற்றை காட்டி

நம்மை

பயமுறுத்தினால்

அதனை எதிர்த்து

அனைத்தையும்

முறியடித்து

நம்முடைய தொழிலை

திறம்படச் செய்ய

உதவிகரமாக

இருப்பவர்கள் யார்

 

என்பதை

ஆராய்ந்து பார்த்து

அத்தகையவர்களை

நமக்கு துணையாக

வைத்துக்

கொள்ள வேண்டும்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment