January 22, 2022

பதிவு-1-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-1-வினைவலியும்-

திருக்குறள்-

 

""வினைவலியும்

தன்வலியும்

மாற்றான்வலியும்

துணைவலியும்

தூக்கிச் செயல்""

 

-------திருக்குறள்-471

-------திருவள்ளுவர்.

 

"""செயலின்

வலிமையையும் ;

நம்முடைய

வலிமையையும் ;

எதிரியின்

வலிமையையும் ;

நமக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமையையும் ;

நம்முடைய

எதிரிக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமையையும் ;

ஆராய்ந்து பார்த்து

செயலைச் செய்ய

வேண்டும்."""

 

என்பதே இந்தத்

திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும்

கருத்து.

 

இந்தத்

திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

அர்த்தம் சொல்லலாம்

 

ஒரு செயலைச்

செய்யத்

தொடங்குவதற்கு

முன்னர்

தன்னுடைய வலிமை

எதிரியினுடைய

வலிமை

எதிரிக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமை

நமக்கு துணையாக

இருப்பவர்களுடைய

வலிமை

ஆகியவற்றை

ஆராய்ந்த பிறகு

கர்மவினையினால்

ஏற்படக்கூடிய

விளைவினைக்

கண்டறிந்து

நல்ல நாள்

அந்த நல்ல நாளில்

நல்ல நேரம்

ஆகியவற்றைக்

கணித்து

செயலைச்

செய்தால் மட்டுமே

செய்யத் தொடங்கும்

வேலையில்

வெற்றி பெற

முடியும்""""

 

என்றும் சொல்லலாம்

 

இந்தத் திருக்குறளின்

அர்த்தத்தை

கீழ்க்கண்டவாறு

விளக்கமாகக்

காணலாம்

 

திருக்குறள்

முதலாவதாகக்

குறிப்பிடும்

வினை வலி என்பது

செயலின்

வலிமையைக்

குறிக்கவில்லை

கர்மவினையினால்

ஏற்படக்கூடிய

விளைவினைக்

குறிக்கிறது.

 

வினை வலி

என்பது

நாம் ஒரு

செயலைச் செய்யத்

தொடங்குவதற்கு

முன்னர்

கர்மவினையினால்

ஏற்படக்கூடிய

விளைவினைக்

கண்டறிந்து

காலம், நேரம்

பார்த்து செயலைச்

செய்வதைக்

குறிக்கிறது.

 

கர்ம வினை

என்பது

நாம் செய்த

பாவம்

மற்றும்

புண்ணியங்களின்

தொகுப்பைக்

குறிக்கிறது

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment