January 22, 2022

பதிவு-6-வினைவலியும்- திருக்குறள்

 பதிவு-6-வினைவலியும்-

திருக்குறள்-

 

கிளியோபாட்ராவுக்கு

பல்வேறு மொழிகள்

சரளமாகப் பேசத்

தெரியும் என்பதால்

மொழி பெயர்ப்பாளர்கள்

யாரையும் தன்னுடன்

வைத்துக்

கொள்ளவில்லை

 

கிளியோபாட்ரா

அரசியல் ராஜதந்திரி

 

எதிரிகளை

சமாளிக்கும் வித்தை

தெரிந்தவர்

எதிரிகளை

இல்லாமல் செய்யும்

செயல்களைச்

செய்வதில் வல்லவர்

எதிரிகளை சமாளிக்க

எதிரிகளை வைத்தே

விளையாடத்

தெரிந்தவர்

 

அரசியல் அவர்

இரத்தத்துடன் பிறந்தது

ராஜதந்திரம்

அவர் உயிருடன்

கலந்தது

அரசியல் சூழ்ச்சி

அவரது சிந்தனையாக

இருந்தது

அரசியல் களம்

அவரது விளையாட்டு

மைதானமாக

இருந்தது

தனக்கு எதிரியாக

இருப்பவர்களை

இல்லாமல் செய்வது

அவரது செயலாக

இருந்தது

 

அன்பு

காட்டியவர்களை

ஆதரிக்கும் பண்பும்

ஆணவத்தைக் காட்டி

தன்னை அழிக்க

நினைப்பவர்களை

அழிக்கும் திறமையும்

அவரிடம் இருந்தது

 

எதற்கும்

கலங்காத துணிவு

யாருக்கும்

அஞ்சாத நெஞ்சம்

எதிர்ப்புகளை

சுக்கு நூறாக்கும்

திறமை

சோதனைகளை

சாதனையாக்கும்

வலிமை

எதிர்காலத்தை

கணிக்கும் சிந்தனை

செயல்படுத்த

முடியாதததையும்

செயல்படுத்தக்

கூடிய உழைப்பு

இரும்பு இதயம்

அன்பொழுகும்

பேச்சு

ஆதரவுக்கரம்

நீட்டும் கைகள்

ஓடி ஓடி

உழைக்கும் கால்கள்

எகிப்துக்காகவே

அர்ப்பணித்த உயிர்

ஆகியவற்றைக்

கொண்டவர்

 

ராஜதந்திரத்தில்

பிறந்து

ராஜதந்திரத்தில்

வளர்ந்து

ராஜதந்திரத்தையே

சுவாசித்து

உடல், உயிர்,

நாடி, நரம்புகள்,

எல்லாவற்றிலும்

ராஜதந்திரம்

ரத்தம் ஓடும்

அழகுப்பாவை

 

எதிரிகளே

கண்டு

ஆச்சரியப்படும்

ராஜதந்திரியின்

அறிவுக்கூர்மை

துணிச்சல்

வீரம் திறமை

தொழில் பக்தி

மனோதைரியம்

ஆகியவற்றைக்

கொண்டவர்.

 

ஆணாதிக்கம் கொண்ட

அரசியல் களத்தில்

பெண்கள் உள்ளே

நுழைய முடியாத

அரசியல் களத்தில்

தனி ஒரு பெண்ணாக

அரசியல் களத்தின்

உள்ளே நுழைந்து

அரசியல் களத்தில்

சதுரங்க

வேட்டை ஆடி

ரோமபுரி நாட்டின்

மாவீரர்களான

ஜுலியஸ் சீசரையும்

ஆன்ட்டனியையும்

தன்னுடைய

காலடியில்

விழ வைத்து

சதுரங்க வேட்டையில்

அசைக்கவே முடியாத

ராணியாகத்

திகழ்ந்து அரசியல்

நடத்தியவர்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------22-01-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment