ஜபம்-பதிவு-717
(சாவேயில்லாத
சிகண்டி-51)
அம்பை
குறிப்பிட்ட நாளில்
குறிப்பிட்ட கிழமையில்
குறிப்பிட்ட கடவுளுக்காக
அசைவ உணவு
சாப்பிடாமல்
இருக்கிறார்களே
அவ்வாறு இருந்தால்
கடவுள்
அருள் கிடைக்குமா
சைகாவத்யர் :
கடவுளின் அருளைப்
பெறுவதற்கு
உடல் தூய்மை
முக்கியமில்லை
உள்ளத் தூய்மை
தான் முக்கியம்
உள்ளத்தை
தூய்மையாக
வைக்காமல் உடலை
தூய்மையாக
வைத்தால்
கடவுள் அருள்
புரிவாரா
பிறர்
வாழ்க்கையை
அழிக்க நினைப்பது
பிறர் மனம்
வருத்தப்படும்படி
நடந்து கொள்வது
ஏமாற்றுவது
திருட்டுத்தனம்
செய்வது
பொய் பேசுவது
யாரும்
பார்க்கவில்லை
என்று செய்யக்கூடாத
தவறுகள்
அனைத்தையும்
செய்வது
போன்ற தகாத
செயல்களைச்
செய்து விட்டு
குறிப்பிட்ட நாளில்
குறிப்பிட்ட கிழமையில்
குறிப்பிட்ட கடவுளுக்காக
அசைவ உணவு
சாப்பிடாமல்
இருந்தால் கடவுள்
அருள் கொடுத்து
விடுவாரா
வீட்டிற்கு வெளியே
வெள்ளை அடித்து
சுத்தமாக வைத்து
விட்டு
வீட்டிற்குள்
குப்பையை போட்டு
வைத்தால் யாராவது
வீட்டிற்குள் வந்து
தங்குவார்களா
அதைப்போல் தான்
உடலைத் தூய்மையாக
வைத்து விட்டு
உள்ளத்தை
களங்கத்துடன்
வைத்தால்
இறைவன் எப்படி
உள்ளத்தில் வந்து
தங்குவான்
நமக்கு அருள்
புரிவான்
உடல் அழுக்காக
இருந்தாலும்
பரவாயில்லை
அசைவம்
சாப்பிட்டாலும்
பரவாயில்லை
குறிப்பிட்ட நாளில்
குறிப்பிட்ட கிழமையில்
குறிப்பிட்ட கடவுளுக்காக
அசைவ உணவு
சாப்பிடாமல்
இருக்க வேண்டிய
அவசியமும் இல்லை
உள்ளம் தூய்மையாக
இருந்தால்
போதும்
இறைவன் வந்து
அருள் புரிவான்
அம்பை :
தவம் செய்பவர்கள்
என்ன செய்ய
வேண்டும்
என்ன செய்யக்கூடாது
என்பதை
என்ற உண்மையை
எனக்குச் சொன்னீர்கள்
தவம் செய்வது
எப்படி என்பதை
எனக்கு கற்றுத்
தாருங்கள்
சைகாவத்யர் :
நாளை
ஹோத்திரவாஹனர்
இந்த ஆசிரமத்திற்கு
வருகிறார்
தவத்தில்
சிறந்தவர் அவர்
அவரிடம்
கற்றுக் கொண்டால்
நன்றாக இருக்கும்
அவர் வரட்டும்
அவரிடம் கேட்போம்
அவர் என்ன
சொல்கிறார்
என்று பார்ப்போம்
இப்பொழுது சென்று
மகிழ்ச்சியாக
உணவருந்துங்கள்
அமைதியாக
ஓய்வெடுங்கள்
நிம்மதியாக
உறக்கம் கொள்ளுங்கள்
நாளை பார்ப்போம்
(சைகாவத்யர்
சென்று விடுகிறார்.
அந்த ஆசிரமத்தில்
உள்ள பெண்கள்
உணவு உண்பதற்காக
அம்பையை
அழைத்து செல்கின்றனர்.
ஆனால் அம்பை
உணவு எதுவும்
உண்ணவில்லை
இரவு முழுவதும்
உறங்கவில்லை.
ஒரு
பாறையின் மேல்
அமர்ந்து கொண்டு
இரவு முழுவதும்
வானத்தையே
பார்த்துக் கொண்டு
எதையோ ‘
எண்ணிக் கொண்டு
இருந்தாள் அம்பை.)
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
------25-03-2022
-----வெள்ளிக் கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment