ஜபம்-பதிவு-715
(சாவேயில்லாத
சிகண்டி-49)
ஆனால்
முதன் முறையாக
ஒருவரைக்
கொல்ல வேண்டும்
என்பதற்காக
தவம் கற்றுக் கொள்ள
வந்தது நீங்கள் தான்
பீஷ்மரைக்
கொல்ல வேண்டும்
என்பதற்காகவே
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கும்
உங்களைப்
பார்க்கும் போது
எனக்கு
அதிர்ச்சியளிக்கிறது
அம்பை :
எனக்கு தவம்
கற்றுக் கொடுக்க
மாட்டீர்களா
சைகாவத்யர் :
தவம் என்னுடைய
தனிப்பட்ட
சொத்து கிடையாது
பொதுச் சொத்து
இறைவனுடைய சொத்து
கற்றுக் கொடுக்க
மாட்டேன் என்று
சொல்லும் உரிமை
எனக்குக் கிடையாது
உடலில் உயிர்
உள்ளவர்கள் அனைவரும்
தவம் கற்றுக்
கொள்ள தகுதி
உடையவர்கள்
நல்லவர் கெட்டவர்
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
ஏழை பணக்காரன்
என்ற பேதம்
எல்லாம் தவம்
செய்வதற்கு கிடையாது
தவத்தைப் பற்றிய
அடிப்படை
ஞானம் கூட
இல்லாதவர்களாக
இருந்தாலும்
தவம் கற்றுக்
கொள்ள மாட்டேன்
என்று சொன்னாலும்
தவம் செய்ய
மாட்டேன்
என்று சொன்னாலும்
தகுதி யாருக்கு
இருக்கிறதோ
தவம் செய்ய
வேண்டிய காலம்
யாருக்கு வந்துவிட்டதோ
அவருக்கு
தவம் செய்தாலும்
தவம்
செய்யாவிட்டாலும்
காலம்
வந்து விட்டால்
அவர் கேட்டாலும்
கேட்காவிட்டாலும்
தவம் சொல்லித்
தர வேண்டும்
அது தான்
தவம் செய்பவர்களின்
கடமை
தவம் செய்வதற்கு
என்று சில
முறைகள் இருக்கின்றன
அம்பை :
தவம் செய்பவர்கள்
அசைவ உணவு
சாப்பிடக்கூடாது
சைவ உணவு மட்டும்
தான் சாப்பிட
வேண்டும்
என்கிறீர்களா
சைகாவத்யர் :
நான் உணவைப்
பற்றி சொல்ல
வரவில்லை
அம்பை :
உணவு
தவம்
சம்பந்தப்பட்டது தானே
சைகாவத்யர் :
உண்ணும் உணவிற்கும்
செய்யும் தவத்திற்கும்
சம்பந்தமில்லை
உண்ணும் உணவு
உடலுக்குச் செல்கிறது
செய்யும் தவம்
உயிருக்குச் செல்கிறது
அம்பை :
அசைவ உணவு
சாப்பிட்டால் உணர்வுகள்
தூண்டப்படும்
அது தவம் செய்வதற்கு
இடையூறாக அமையும்
அதனால்
அசைவ உணவு
சாப்பிடக் கூடாது
என்கிறார்களே
சைகாவத்யர் :
அசைவ உணவு
சாப்பிட்டால்
மட்டும் தான்
உணர்வுகள்
தூண்டப்படுமா
சைவ உணவு
சாப்பிட்டால்
உணர்வுகள்
தூண்டப்படாதா
உணர்வை கட்டுப்படுத்தி
வைக்கக்கூடாது
அறிந்து அதனைக்
கடந்து செல்ல வேண்டும்
அம்பை :
சைவ உணவைச்
சாப்பிட்டால் தான்
ஆன்மீகத்தில் உயர்நிலை
அடைய முடியும்
அசைவ உணவு
சாப்பிட்டால் ஆன்மீகத்தில்
உயர்நிலை
அடைய முடியாது
என்கிறார்களே
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
------25-03-2022
-----வெள்ளிக் கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment