ஜபம்-பதிவு-713
(சாவேயில்லாத
சிகண்டி-47)
(காசி நகரத்தை
விட்டு வெளியே
வந்த அம்பை
யோசித்தாள்.
காதலனும் கைவிட்டான்.
பெற்றோர்களும்
கைவிட்டார்கள்.
அனாதையாக நின்று
கொண்டிருக்கும்
தன்னுடைய இந்த
இழிநிலைக்கு காரணமான
பீஷ்மனைக்
கொன்றே
ஆக வேண்டும்.
அதற்காக தவம்
கற்றுக் கொள்ள
வேண்டும் என்ற
எண்ணத்துடன்
நகரத்திற்கு வெளியில்
பரிசுத்தமான
ஒழூக்கத்தையுடையவர்களும்
மகாத்மாக்களுமான
தவசிகளுடைய
ஆசிரமத்தை அடைந்தார்.
அந்த ஆசிரத்தில்
மகானும், கடுமையான
விரதமுடையவரும்,
தவத்தில் சிறந்தவரும்,
சாஸ்திர விஷயத்திலும்,
உபநிஷத் விஷயத்திலும்
குருவுமான
சைகாவத்யர் பார்த்தார்.
அம்பையிடம் பேசினார்.)
சைகாவத்யர் :
தலைவிரி
கோலத்துடனும்
அழுக்கடைந்த
உடையுடனும்
சாப்பிடாமல்
இருந்தததால்
மெலிந்த உடலுடனும்
தூங்காமல்
விழித்திருந்ததால்
பாதிப்படைந்த
கண்களுடனும்
காணப்படும் பெண்ணே
நீ யார்
அம்பை :
நான்
காசி நாட்டின்
மன்னன் பீமதேவனின்
மூத்த மகள்
என்னுடைய
பெயர் அம்பை
சைகாவத்யர் :
பீஷ்மரால் சிறை
எடுக்கப்பட்டவள்
அம்பை :
இல்லை
பீஷ்மரால்
வாழ்வை இழந்தவள்
சைகாவத்யர் :
எதற்காக இங்கே
வந்திருக்கிறீர்கள்
அம்பை :
பீஷ்மரைக்
கொல்ல வேண்டும்
அதற்காக
வந்திருக்கிறேன்
சைகாவத்யர் :
தவறான
இடத்திற்கு
வந்திருக்கிறீர்கள்
அம்பை :
சரியான இடத்திற்குத்
தான் வந்திருக்கிறேன்
சாதாரண பெண்ணாக
இருக்கும் என்னால்
சக்தி படைத்த
பீஷ்மரைக்
கொல்ல முடியாது
தவம் செய்து
சக்தி பெற்று
பீஷ்மரைக்
கொல்ல வேண்டும்
அதற்காக தவம்
கற்றுக் கொள்ள
வந்திருக்கிறேன்
இந்த உலக
வாழ்க்கையைத்
துறந்து விட்டு
வந்திருக்கிறேன்
வன வாழ்க்கையை
மேற்கொள்வதற்காக
வந்திருக்கிறேன்
என்னுடைய
லட்சியத்தை
நிறைவேற்றுவதற்காக
தவம் செய்வது
எப்படி என்பதை
எனக்குக்
கற்றுத் தருவீர்களா
சைகாவத்யர் :
ஒருவரைக்
கொல்வதற்காக
தவம் செய்வது
தவறல்லவா
அம்பை :
தவறு கிடையாது
ஒருவரைக்
கொல்வதற்காக
தவம் செய்வது
தவறு கிடையாது
தவறாக இருந்தால்
மந்திரத்தின் மூலம்
ஒருவரைக்
கொல்வதற்காக
மாரணம்
என்ற ஒன்றை
அஷ்டகர்ம
பிரயோகத்தில்
வைத்திருப்பார்களா
தனக்கும்
தன்னைச்
சார்ந்தவர்களுக்கும்
கெடுதல்
விளைவிப்பவர்களை
மாரணத்தைப்
பயன்படுத்தி
கொல்வதற்காகத் தானே
அஷ்டகர்ம
பிரயோகத்தில்
மாரணம் என்ற
ஒன்றை
வைத்திருக்கிறார்கள்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
------25-03-2022
-----வெள்ளிக் கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment