May 12, 2022

பதிவு-1-துன்பம் உறவரினும் -திறக்குறள்

 பதிவு-1-துன்பம்

உறவரினும்

-திறக்குறள்

 

“””துன்பம் உறவரினும்

செய்க துணிவாற்றி

இன்பம்

பயக்கும் வினை”””

 

----------திருவள்ளுவர்

----------திருக்குறள்-669

 

இன்பம் தரக்கூடிய

செயல் என்பது,

துன்பம் வந்தாலும்

அதனைப்

பொருட்படுத்தாமல்

துணிவுடன்

நிறைவேற்றி

முடிக்கக்

கூடியதேயாகும்

என்பதே

இத்திருக்குறளுக்கு

பொதுவாகச்

சொல்லக்கூடிய

விளக்கமாகும்.

 

இத்திருக்குறளுக்கு

கீழ்க்கண்டவாறும்

விளக்கம்

சொல்லலாம்

 

துன்பம் உறவரினும்

செய்க துணிவாற்றி

என்றால்

எத்தகைய

துன்பம் வந்தாலும்

அதாவது

சாவே வந்தாலும்

சாவைக்கண்டு

பயப்படாமல்

செயலைச் செய்தல்

என்று பொருள்

 

இன்பம்

பயக்கும் வினை

என்றால்

இன்பம்

தரக்கூடிய

சாதனையை

படைக்க முடியும்

என்று பொருள்

 

துன்பம் உறவரினும்

செய்த துணிவாற்றி

இன்பம் பயக்கும்

வினை என்றால்

சாவைக் கண்டு

பயப்படாமல்

செயலைச்

செய்பவனால்

மட்டுமே

சாதனை

படைக்க முடியும்

சாவைக் கண்டு

பயப்படுபவன்

சாதனை

செய்ய மாட்டான்

என்றும்

இத்திருக்குறளுக்கு

விளக்கம்

சொல்லலாம்

 

இந்த உலகத்தை

உழைப்பாளிகள்

படைப்பாளிகள்

என்று

இரண்டாகப்

பிரித்து விடலாம்

 

கஷ்டப்பட்டு

உழைத்தால்

முன்னேறலாம்

என்று சிலர்

சொல்கிறார்கள்

இஷ்டப்பட்டு

உழைத்தால்

முன்னேறலாம்

என்று சிலர்

சொல்கிறார்கள்

 

கஷ்டப்பட்டு

உழைத்தாலும் சரி

இஷ்டப்பட்டு

உழைத்தாலும் சரி

முன்னேற முடியாது

படைப்பாளியாக

இருந்தால் மட்டுமே

முன்னேற முடியும்

 

படைப்பாளி என்றால்

எழுதுவது பேசுவது

கிடையாது

சாவைக்

கண்டு யார்

பயப்படவில்லையோ

அவன் தான்

படைப்பாளி

ஏனென்றால்

அவன் தான்

யாரும்

செய்யாததையும்

யாராலும் செய்ய

முடியாததையும்

செய்வான்

 

உழைப்பாளியால்

ஒன்றை உருவாக்க

முடியாது

யாரேனும் உருவாக்கி

வைத்ததைக் கொண்டு

உழைப்பாளியால்

உழைக்கத் தான்

முடியும்

அதனால் தான்

உழைப்பாளி

கஷ்டப்பட்டு

உழைத்தாலும்

இஷ்டப்பட்டு

உழைத்தாலும்

உழைப்பாளியால்

இந்த உலகத்தில்

முன்னேற

முடிவதில்லை

ஆனால்

படைப்பாளியால்

ஒன்றை உருவாக்க

முடியும்

படைப்பாளியால்

ஒன்றை உருவாக்கத்

தெரிந்த

காரணத்தினால் தான்

படைப்பாளியால்

இந்த உலகத்தில்

முன்னேற முடிகிறது

 

படைப்பாளியால்

மட்டுமே

இந்த உலகத்தில்

முன்னேற முடியும்

 

அலெக்ஸாண்டரை

எடுத்துக் கொண்டால்

அலெக்ஸாண்டர்

செய்த போர்கள்

அனைத்துமே

நாட்டுக்காகவும்

நாட்டு

மக்களுக்காவும்

செய்த போர்கள்

கிடையாது

நாடு பிடிக்கும்

ஆசையில்

செய்தவைகள் தான்

அனைத்து

போர்களும்

 

-------என்றும் அன்புடன்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

---------12-05-2022

---------வியாழக் கிழமை

 

/////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment