பதிவு-4-துன்பம்
உறவரினும்
-திறக்குறள்
பல்வேறு
தலைமுறைகளாக
தங்குவதற்கு
நிரந்தரமாக
ஒரு இடம் கூட
இல்லாமல்
ஊர் ஊராக
நாடோடியாக
அலைந்து
கொண்டிருந்தவர்களை
கிடைத்த
இடத்தில்
கூடாரம்
அமைத்துக்
கொண்டு
வாழ்ந்து
கொண்டிருந்தவர்களை
சாப்பிட்டிற்கு
வழியில்லாமல்
அணில்களையும்
எலிகளையும்
நாய்களையும்
உணவாக
உட்கொண்டவர்களை
நாகரிகம்
கலாச்சாரம்
பண்பாடு என்றால்
என்னவென்றே
தெரியாது
திரிந்து கொண்டு
இருந்தவர்களை
ஒற்றுமை
என்றால்
என்ன என்பதை
அவர்களுக்கு
உணர வைத்து
குடும்பம் என்றால்
என்ன என்பதை
அவர்களுக்கு
புரிய வைத்து
மங்கோலியர்கள்
என்ற
அடையாளமே
இல்லாமல்
வாழ்ந்து
கொண்டிருந்தவர்களை
ஒன்றாகச் சேர்த்து
தன்மானத்தை
அவர்கள் இரத்தத்தில்
கலக்க வைத்து
வீரத்தை அவர்கள்
எண்ணத்தில்
நிறைய வைத்து
நாட்டுப்பற்றை
அவர்கள்
உடலில்
உறைய வைத்து
தங்களை விட
உயர்ந்தவர்கள்
இந்த உலகத்தில்
யாரும் இல்லை
என்ற உணர்வை
அவர்கள் மனதில்
வளர்த்து வைத்து
எங்கள் நாடுகளை
வெற்றி பெற
முடியாது என்று
ஆணவத்துடன்
கொக்கரித்த
நாடுகளை
எல்லாம் வென்று
50 க்கும் மேற்பட்ட
குழுக்களாக
சிதறிக் கிடந்த
பல்வேறு மக்களை
மங்கோலியர்கள்
என்ற ஒரே
இனமாக உருவாக்கி
ஒன்றும்
இல்லாததிலிருந்து
யாராலும் நினைத்து
கூட பார்க்க
முடியாத
மிகப்பெரிய
அனைத்தும் கொண்ட
மங்கோலியா
என்ற மாபெரும்
மங்கோலிய
சாம்ராஜ்ஜியதை
செங்கிஸ்கான்
உருவாக்கி
கிபி 1206 முதல்
கிபி1227 வரை
21 ஆண்டுகள் ஆட்சி
செய்தார் என்றால்
அது சாதாரண
விஷயம் இல்லை
செங்கிஸ்கான்
செய்திருக்கும்
இந்த சாதனை
யாரும் செய்யாத
சாதனை
யாராலும் செய்ய
முடியாத சாதனை
மாவீரர்கள்
என்று போற்றப்படும்
அலெக்ஸாண்டர்
நெப்போலியன்
ஜுலியஸ் சீசர் கூட
இத்தகைய
சாதனையை செய்தது
கிடையாது
செங்கிஸ்கான்
அருகில்
நிற்பதற்குக் கூட
தகுதி இல்லாத
இவர்களைத் தான்
உலகத்தின் ஒரு
சில வரலாற்று
ஆசிரியர்களும்
ஒரு சில மக்களும்
மாவீரர்கள் என்று
போற்றுகிறார்கள்
உண்மையை
மறைத்து
பொய்யை இந்த
உலகத்தில் உலவ
விட்டு
இருக்கிறார்கள்
கி.பி.1206 முதல்
கி.பி.1227
வரையிலான
21 ஆண்டுகளில்
செங்கிஸ்கான்
உருவாக்கிய
சாம்ராஜ்யத்தின்
நிலப்பரப்பு
நான்கு
இந்தியாக்களை
ஒன்று சேர்த்தால்
வரும்
நிலப்பரப்பளவு
இது உலக
நிலப்பரப்பில்
பத்து சதவீதம்
செங்கிஸ்கானுக்கு
அடி பணிந்து
நின்ற
மக்கள் 11 கோடி
இது அன்றைய
உலக மக்கள்
தொகையில்
நான்கில்
ஒரு பங்கு
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
---------12-05-2022
---------வியாழக் கிழமை
/////////////////////////////////////
No comments:
Post a Comment