பதிவு-3-துன்பம்
உறவரினும்
-திறக்குறள்
செங்கிஸ்கான்
பிறந்த போது
மங்கோலியா என்ற
தேசமே கிடையாது
ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட
போர்வீரர்களைக் கொண்ட
ஒரு பெரும்
படையை
தன்னந்தனியாக
தனி ஒருவனாக
அந்தக் காலத்திலேயே
ஒருவன் உருவாக்கினான்
என்றால் அது
செங்கிஸ்கான்
மட்டும் தான்
ஒரு தலைவனுக்கு
இருக்க வேண்டிய
ஐந்து பண்புகளான
பொறுமை
நிதானம்
தொலைநோக்கு
பார்வை
அனைத்தையும்
சமாளிக்கும் திறன்
அனைவரையும்
கட்டுப்படுத்தும் திறமை
ஆகிய ஐந்தும்
செங்கிஸ்கானிடம்
இருந்தது
அதனால் தான்
செங்கிஸ்கானால்
ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட
வலிமை மிக்க
போர் வீரர்களை
இறப்பைக் கண்டு
அஞ்சாத
போர் வீரர்களை
தன் மேல் மதிப்பு
வைத்திருந்த
போர் வீரர்களை
தனக்காக உயிரையும்
கொடுக்கக் கூடிய
போர் வீரர்களை
தன்னுடைய
கட்டளைக்குக்
கீழ்படிந்து நடக்க
வைக்க முடிந்தது
தன்னுடைய
தலைமையின் கீழ்
இருந்து போரிட
வைக்க முடிந்தது
செங்கிஸ்கானின்
அனைத்து
வெற்றிகளுக்கும்
அவனுடைய
தலைமைப்பண்பு தான்
காரணம்
அதுமட்டுமல்ல
அனைவரையும்
ஒன்றாக இணைத்து
கட்டுக் கோப்புடன்
படையை
வழிநடத்திச் செல்வது
தன்னுடைய
தலைமையின் கீழ்
அனைவரையும்
ஒற்றுமையாகச்
செயல்பட வைப்பது
எந்த பொறுப்புகளை
யாரிடம் ஒப்படைக்க
வேண்டும் என்ற
திறனைப்
பெற்று இருப்பது
எதிரிகளால்
யோசிக்கக் கூட
முடியாத போர்த்
தந்திரங்களை
போரின் போது
பயன்படுத்துவது
எதிரிகளைக் குழப்பி
அவர்களைத் திணற
அடித்து அவர்களைக்
கொல்வது
யாரும்
பயன்படுத்தாத போர்
வியூகங்களைப்
பயன்படுத்துவது
போரின் போது
ஆளுமைத் திறனை
எப்படி எல்லாம்
பயன்படுத்த
முடியுமோ
அப்படி எல்லாம்
பயன்படுத்துவது
கற்பனைக்கு
எட்டாத வேகத்தில்
ஒரு இடத்தில்
இருந்து மற்றொரு
இடத்திற்கு செல்வது
திறமையான
உளவாளிகள் மூலம்
சிறப்பான
தகவல்களை
உடனுக்குடன்
பெறுவது
என்று
பல்வேறு திறன்களை
செங்கிஸ்கான்
பெற்றிருந்த
காரணத்தினால் தான்
எழுதப்படிக்கத்
தெரியாத
செங்கிஸ்கான்
பணம் பதவி
அதிகாரம் என்று
எந்த ஒரு
பின்புலமும் இல்லாத
செங்கிஸ்கான்
நாடோடியாக
அலைந்து திரிந்த
செங்கிஸ்கான்
தங்குவதற்கு
ஒரு இடம் கூட
இல்லாமல் வாழ்ந்த
செங்கிஸ்கான்
சாப்பாட்டிற்கு
வழியில்லாமல்
எலிகளையும்
நாய்களையும் தின்ற
செங்கிஸ்கான்
சமுதாயத்தில்
தாழ்ந்தஜாதி என்று
ஒதுக்கி வைக்கப்பட்ட
செங்கிஸ்கான்
50-க்கும் மேற்பட்ட
பிரிவுகளாகப்
பிரிந்து
கிடந்தவர்களை
ஒருவருக்கொருவர்
சண்டையிட்டுக்
கொண்டு பல்வேறு
குழுக்களாகச்
சிதறிக்
கிடந்தவர்களை
எழுதப் படிக்கத்
தெரியாது
கல்வியறிவு
இல்லாமல்
அலைந்து கொண்டு
இருந்தவர்களை
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
---------12-05-2022
---------வியாழக் கிழமை
/////////////////////////////////////
No comments:
Post a Comment