May 09, 2020

பரம்பொருள்-பதிவு-231


               ஜபம்-பதிவு-479
             (பரம்பொருள்-231)

“நாம்
கடவுளை
வணங்குவதற்காக
கோயிலுக்குள்
செல்லும்
போது
ஒவ்வொருவருடைய
ஆன்ம
வளர்ச்சிக்கேற்ப
கோயிலுக்குள்
இருக்கும்
சக்தியை
பெற்றுக்கொண்டோ
(அல்லது)
தங்களுடைய
ஆன்ம சக்தியை
கோயிலுக்கு
அளித்துக்
கொண்டோ
செல்வர் “

“ஆன்ம
வளர்ச்சி
குறைவாக
இருப்பவர்கள்
தங்களுக்கு
தேவையான
சக்தியை
கோயிலில்
இருந்து
பெற்றுக்
கொண்டு
செல்வர் “

“ஆன்ம
வளர்ச்சி
அதிகமாக
இருப்பவர்கள்
தங்கள்
சக்தியை
அந்த
கோயிலுக்கு
அளித்து
விட்டு செல்வர் “

“ஆகம
சாஸ்திரத்தின்படி
கட்டப்பட்ட
இந்து மதக்
கோயில்கள்
என்பவை
சக்தியின்
களமாக
இருக்கும்படி
உருவாக்கப்பட்டவை “

“சக்தியை
சேமித்து
வைத்துக்
கொண்டு
இயங்கிக்
கொண்டிருப்பவை “

“சக்தியை
அளித்தும்
ஏற்றும்
செயல்பட்டுக்
கொண்டிருப்பவை”

“அந்தக்
காலம் முதல்
இந்தக்
காலம் வரை
இந்து மதக்
கோயில்கள்
இப்படித்தான்
இயங்கிக்
கொண்டிருக்கின்றன”

“இந்து மதக்
கோயில்களில்
500 ஆண்டுகள்
முதல்
1000
ஆண்டுகளுக்கும்
மேலாக
சக்தியை
உற்பத்தி
செய்தல் ;
சக்தியை
குவித்து
வைத்தல் ;
சக்தியை
பரிமாற்றம்
செய்தல் ;
என்ற மூன்று
செயல்கள்
நடைபெற்று
சக்தியின்
மிகப்பெரிய
களமாக
இந்து மதக்
கோயில்கள்
உருவாக்கி
வைக்கப்
பட்டிருக்கின்றன “

“மேலும்
கடவுள்
சிலைகளில்
பூஜைகளும்,
மந்திரங்களும்
யந்திரங்களும்
தந்திரங்களும்
செயல்படுத்தப்பட்டு
சக்தியின்
களமாக
உருவாக்கி
வைக்கப்
பட்டிருக்கின்றன “

“அந்த
சக்தி களத்தில்
சக்தி
குறைந்தவர்கள்
சென்றால்
அவர்கள்
அந்த
சக்தி களத்தில்
இருந்து
தங்களுக்கு
தேவையான
அளவிற்கு
அந்த சக்தியை
ஆத்மாவும்,
உடலும்
ஏற்றும்
கொள்ளும்
வகையில்
கிரகித்துக்கொண்டு
செல்லும்
வகையில்
இந்து மதக்
கோயில்கள்
அமைக்கப்
பட்டிருக்கின்றன “

“தவம்
செய்பவர்கள் ;
தியானம்
செய்பவர்கள் ;
மந்திரம்
சொல்பவர்கள் ;
ஆகியோர்
இந்த சக்தி
களத்திற்குள்
வரும் போது
அவர்கள்
தங்களுடைய
நல்ல சக்தியை
இந்த சக்தி
களத்திற்குள்
விட்டு விட்டு
சென்று
இருப்பார்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 09-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-230


               ஜபம்-பதிவு-478
             (பரம்பொருள்-230)

(2)சக்தியை
குவித்து
வைத்தல் :

“கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டும்
நகர்ந்து
கொண்டும்
இருக்கக்கூடிய
கடவுள்
சக்தியில்
உள்ள
கடவுள்
தன்மையானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
குவித்து
வைக்கப்படும்
போதும்
இருக்க
வேண்டும்
என்பதற்காக
கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்பட்ட
கடவுள்
சக்தியைக்
கொண்டு
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும்
படியான
சக்தி
வட்டத்தை
உருவாக்கி
வைத்தனர் “

“கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்பட்டு
இயங்கிக்
கொண்டும்
நகர்ந்து
கொண்டும்
இருக்கக்கூடிய
கடவுள்
சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக்
கொண்டே
வருவதற்கும் ;
கடவுள்
சக்தியானது
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
வட்ட வடிவில்
ஒரு சக்தி
வட்டத்தை
உருவாக்குவதற்கும் ;
கடவுள்
சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
குவித்து
வைப்பதற்கும் ;
மூன்று
வெவ்வேறு
தன்மையுள்ள
9-பலிபீடங்கள்
பயன்
படுத்தப்
படுகின்றன “

"கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
கடவுள்
சக்தியானது
சுற்றிக்
கொண்டே
இருப்பதால்
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சக்தி
வட்டமானது
உருவாக்கப்
படுகிறது "

"கோயிலுக்குள்
உருவாக்கப்படும்
இந்த
சக்தி
வட்டமானது
கோயிலுக்கு
வரும்
பக்தர்களுடைய
தேவையை
பூர்த்தி
செய்யும்
வேலையை
செய்வதோடு
மட்டுமல்லாமல் ;
வெளியில்
உள்ள எந்த
ஒரு எதிர்ப்பு
சக்தியையும்
கோயிலுக்கு
உள்ளே
விடாமல்
தடுத்து
நிறுத்தும்
மிகப்பெரிய
வேலையையும்
செய்து
கொண்டிருக்கின்றன ;"

(3)சக்தியை
பரிமாற்றம்
செய்தல் :

“கோயிலுக்குள்
குவித்து
வைக்கப்பட்டிருக்கும்
சக்திக்குள்
வருபவர்களைப்
பொறுத்து
ஏற்றுக்
கொள்வதும்
அளிப்பதும்
என்ற
இரண்டு
நிலைகளில்
சக்தியானது
பரிமாற்றம்
செய்யப்படும்
செயலானது
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 09-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-229


               ஜபம்-பதிவு-477
             (பரம்பொருள்-229)

“நம்முடைய
உடலில்
நம்முடைய
சிரசுக்குள்
கடவுள் எந்த
இடத்தில்
இருக்கிறான் ?"

“கடவுளை
அடையக்கூடிய
வழி எது ? "

“கடவுளை
அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது
எது? "

“என்பதை
உணர
முடியாமல்
இருப்பவர்கள்
கடவுளுடன்
இணைந்து
தனக்கு
தேவையானதை
பெற்றுக்
கொண்டு
தன்னுடைய
ஆசையை
பூர்த்தி செய்து
கொள்ள
வேண்டும்
என்ற
உயர்ந்த
நோக்கத்துடன்
இந்த
மூன்று
விஷயங்களையும்
அடிப்படையாக
வைத்து
இந்துமதக்
கோயில்கள்
அன்று முதல்
இன்று வரை
கட்டப்பட்டு
வருகின்றன “

“இந்த மூன்று
விஷயங்களை
அடிப்படையாக
வைத்து
உலகில்
உள்ள
அனைத்து
இந்து மதக்
கோயில்களும்
கட்டப்பட்டு
இருந்தாலும்
முக்கியமான
மூன்று
விஷயங்களான

ஒன்று :
சக்தியை
உற்பத்தி
செய்தல்

இரண்டு :
சக்தியை
குவித்து
வைத்தல்

மூன்று :
சக்தியை
பரிமாற்றம்
செய்தல்

ஆகிய மூன்று
செயல்களை
சூட்சுமமாக
தன்னுள்
கொண்டு
இந்துமதக்
கோயில்கள்
செயல்பட்டு
இயங்கிக்
கொண்டு
இருக்கின்றன “

“உலகில்
உள்ள
அனைத்து
இந்து மதக்
கோயில்களையும்
எடுத்துக்
கொண்டால்
இந்துமதக்
கோயில்கள்
ஒவ்வொன்றும்
ஒரு குறிப்பிட்ட
சக்தியை
உற்பத்தி
செய்து ;
அந்த
சக்தியை
குவித்து
வைத்து ;
அந்த
சக்தியை
பரிமாற்றம்
செய்து
கொண்டிருக்கும் ;
மிகவும்
சக்தி
வாய்ந்த
சக்தி
மையங்களாகத்
திகழ்ந்து
கொண்டு
இருக்கின்றன ;
என்பதைத்
தெரிந்து
கொள்ளலாம்”

(1)சக்தியை
உற்பத்தி
செய்தல் :

(அ)பிரஞ்சத்தின்
மூலம்
பெறப்படும்
சக்தி

(ஆ)கடவுள்
சிலைகளின்
மூலம்
பெறப்படும்
சக்தி

ஆகிய
இரண்டு
முறைகளின்
மூலம்
பெறப்படும்
சக்தியானது
கோயிலுக்குள்
உற்பத்தி
செய்யப்படுகிறது

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 09-05-2020
//////////////////////////////////////////

May 07, 2020

அரவான்-நன்றி தெரிவிக்கும் மடல்


அன்பிற்கினியவர்களே !

“ஶ்ரீ வேத வியாசரால்
அருளப்பட்டு
விநாயகப் பெருமானால்
எழுதப்பட்டு
சகல விஷயங்களும்
அடங்கப் பெற்று
ஐந்தாவது வேதமாக
விளங்குவது
மகாபாரதம் “

“வடமொழியில்
எழுதப்பட்ட இந்த
மகாபாரதம்
சகலவிதமான
வேத சாஸ்திர
நுட்பங்களையும்
தன்னுள் கொண்டது “

“ஶ்ரீநிவாஸாசாரியார்
கணபதி சாஸ்திரிகள்
கிருஷ்ண சாஸ்திரிகள்
வெங்கடேசாசாரியார்
ஆகியோரால்
மொழி பெயர்க்கப்பட்டு
சிவராம கிருஷ்ணன்
அவர்களால்
கும்பகோணம் &
மஹாபாரதம்
பிரஸ்ஸில்அச்சிட்டு
வெளிவந்த
18 பர்வங்களையும்
இவரின் பேரன்
வெங்கட ரமணன்
அவர்களால்
வெளியிடப்பட்டதை
அறிந்த நான்
அரவான் கதை
எழுதுவதற்கு குறிப்புகள்
எடுக்க வேண்டும்
என்பதற்காக - அந்த
புத்தகம் எங்கு
கிடைக்கும் என்று
தேடித் தர வேண்டும்
என்று நான் கேட்டுக்
கொண்டதற்கிணங்க
அந்த புத்தகத்தை
தேடி கண்டுபிடித்து
மகாபாரதம் புத்தகத்தை
நான் வாங்குவதற்கு
காரணமாக இருந்தவர்கள்
(1)
இரா.மு.வெங்கட சுப்பிரமணி
நிர்வாக இயக்குநர்
பெஸ்ட் காயில் ஸ்பிரிங்ஸ்
ராணிப்பேட்டை
(2)
அ.செய்யது ரியாஸ்
BUSINESS ANALYST
(3)
என்.கார்த்தி
VISA EXECUTIVE
Pricol Travel Private
Limited
(4)
ரா.கிரிஷ் கிருஷ்ணன்
எழுத்தாளர், இயக்குநர்
இசை அமைப்பாளர்
சென்னை

“18 பர்வங்களும்
சேர்த்து ரூ,6000/-
என்று கேள்விப்பட்ட
என்னுடைய
மனைவியின் சகோதரி
திருமதி உஷா
அவர்கள் அந்த
பணத்தை தானே
தருகிறேன் நீங்கள்
வாங்கிக் கொள்ளுங்கள்
என்று எனக்கு
பணத்தை அனுப்பி
9000
பக்கங்கள் கொண்ட
9 புத்தங்கள்
அடங்கிய தொகுப்பை
நான் வாங்குவதற்கு
காரணமாக இருந்தவர்
(1)திருமதி
உஷா ராஜேந்திரன்
SENIOR ASSOCIATE
CTS, MEPZ
அவர்கள்
 

அதுமட்டுமல்ல
“அமர் சித்திரக்
கதா பிரைவேட்
லிமிடெட்”
அவர்களால்
படங்கள் மூலமாக
வெளியிடப்பட்ட
மூன்று தொகுப்புகள்
அடங்கிய மகாபாரதம்
சித்திரம் புத்தகம்
ரூ2000/- கொடுத்து
அரவான் கதை
எழுதுவதற்காக
வாங்கிக் கொடுத்தவர்
(1)என்.கார்த்தி
VISA EXECUTIVE
Pricol Travel Private
Limited

அரவான் கதை
எழுதுவதற்காக
இவர்கள் அனைவரும்
எனக்கு செய்த
உதவிக்கு என்னுடைய
நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

--------என்றும் அன்புடன்
---------K.பாலகங்காதரன்

--------07-05-2000
///////////////////////////////////////////////