December 27, 2018

திருக்குறள்-பதிவு-75


                     திருக்குறள்-பதிவு-75

ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
எதிராக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரைப் பிடிக்காதவர்கள்
காழ்ப்புணர்ச்சியின்
காரணமாக சொல்லப்பட்ட
வார்த்தைகளாக இருந்தும் ;
மதவெறியின் காரணமாக
அவர் மீது
சுமத்தப்பட்ட போலிக்
குற்றச்சாட்டுக்களாக
இருந்தும் ;  அவைகள்
உண்மையானவைகளா
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் ஜியார்டானோ
புருனோ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டார் என்ற
காரணத்திற்காக அவைகள்
அனைத்தும் ஆதாரங்களாக
எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆனால், ஜியார்டானோ
புருனோவினுடைய
வாழ்க்கையில் மக்களால்
நடந்ததாக சொல்லப்பட்ட
ஜியார்டானோ புருனோவிற்கு
ஆதரவாக சொல்லப்பட்ட
பெரும்பாலான சம்பவங்களின்
வார்த்தைகள் அனைத்தும்
அவரது ஆதரவாளர்களால்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
என முடிவு செய்யப்பட்டு
அந்த சம்பவங்களில்
சொல்லப்பட்ட வார்த்தைகள்
உண்மையானவைகளாக
இருந்தாலும் அவைகள்
அனைத்தும் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை
அவைகள் அனைத்தும்
புறக்கணிக்கப் பட்டன.

இவ்வாறு மக்களுடைய
மனநிலை எந்த
நிலையில் இருக்கிறது
என்பதை ரகசியமாக
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த சமயத்தில்
செனட் சபை கூட்டப்பட்டு
செனட் சபை
உறுப்பினர்கள் கலந்து
கொண்ட கூட்டத்தில்
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்கான
தீர்மானத்தின் மீது
விவாதம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது,

ஜியார்டானோ புருனோவின்
மீது பல்வேறு
குற்றச்சாட்டுக்களை சுமத்தி
ஜியார்டானோ புருனோவை
ஒரு குற்றவாளியாக
முத்திரை குத்தி
அவரை தாக்கியே
அனைவரும் விவாதத்தில்
பேசிக் கொண்டு இருந்தனர்
ஒரு தீர்மானத்தின் மீது
எதிர்த்துப் பேச
ஆளில்லாமல்
ஒருதலைப் பட்சமாக
ஜியார்டானோ புருனோவை
தாக்கிப் பேசிக்
கொண்டிருந்தது அங்கு
தான் நடந்து
கொண்டு இருந்தது

விவாதத்தின் முடிவில்
ஜியார்டானோ புருனோ
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாரணைக்கு
அனுப்பட வேண்டும்
என்ற தீர்மானத்தின்
மீது வாக்கெடுப்பு
நடத்தப்பட்டது

தீர்மானத்தின் மீது
நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்
மொத்தமுள்ள 172 செனட்
உறுப்பினர்களில்
தீர்மானத்திற்கு ஆதரவாக
142 உறுப்பினர்களும்
தீர்மானத்திற்கு எதிராக
10 உறுப்பினர்களும்
வாக்களித்து இருந்தனர்,
20 உறுப்பினர்கள்
வாக்களிக்கவில்லை.

////////////////////////////////////////////////////
வாக்கெடுப்பின் முடிவு
 மொத்த ஓட்டுகள் – 172
           ஆதரவு – 142
           எதிர்ப்பு -  10
 வாக்களிக்காதவர்கள் -20
////////////////////////////////////////////////////////

தீர்மானத்தின் மீது
நடைபெற்ற
வாக்கெடுப்பைத் தொடர்ந்து
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்கு
அனுப்புவதற்குத் தேவையான
அனைத்து பணிகளும்
செய்யப்பட்டன.

ஜியார்டானோ
புருனோவை ரோம்
நகருக்கு கைதியாக
தொடர் விசாரணைக்காக
அழைத்துச் செல்வதற்காக
நிறுத்தி வைக்கப்பட்டு
இருந்த கப்பலை
நோக்கி காவலர்கள்
ஜியார்டானோ
புருனோவை அழைத்துச்
சென்று கொண்டிருந்தனர்.

ஜியார்டானோ
புருனோ ஏறுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட
கப்பலில் இருந்து
சற்று தொலைவில்
ஒரு பெண் நின்று
கொண்டிருந்தாள்.

ஜியார்டானோ
புருனோ கப்பலில்
ஏறுவதற்கு முன் அந்தப்
பெண்ணைப் பார்த்தார்
ஆயிரம் அர்த்தங்கள்
கொண்ட சிறிய
புன்முறுவலை உதிர்த்தார் ;
அந்த புன்முறுவலின்
அர்த்தத்தை அந்த
பெண்ணால் மட்டும் தான்
உணர்ந்து கொள்ள
முடியும் ; ஆம் இந்த
உலகத்தில் ஜியார்டானோ
புருனோ உயிருடன்
வாழ்ந்த காலத்தில்
ஜியார்டானோ
புருனோவை முழுவதுமாக
அறிந்து வைத்திருந்த
ஒரே நபர் அந்த
பெண் மட்டுமே !!

Madonna of Venice
என்று அழைக்கப்பட்ட
அந்தப் பெண்
ஒரு முறை
ஜியார்டானோ புருனோவை
அணுகி மோசஸ்,
இயேசு கிறிஸ்து
போன்று தாங்கள்
அற்புதங்கள் செய்வீர்கள்
என்று கேள்விப்பட்டேன்
தாங்கள் எனக்கு
அந்த அற்புதங்களை
செய்து காட்ட முடியுமா
அந்த அற்புதங்களை
செய்வது எப்படி
என்ற முறையினை
எனக்கு சொல்லித்
தர முடியுமா என்று
கேட்டாள்.

அதற்கு ஜியார்டானோ
புருனோ அற்புதங்கள்
என்றால் என்ன
என்று தெரியுமா?
என்றார்..

---------  இன்னும் வரும்
---------  27-12-2018
/////////////////////////////////////////////////


திருக்குறள்-பதிவு-74


                       திருக்குறள்-பதிவு-74

வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ஜியார்டானோ
புருனோவின் மீது முதல்
கட்ட விசாரணையை
நடத்தி முடித்து விட்டது.

இந்த நிலையில் ரோம்
நகரத்தின் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
ஜியார்டானோ புருனோவின்
மீது மேற்கொண்டு
தொடர் விசாரணை ரோம்
நகரத்தில் நடத்தப்பட
வேண்டும் என்று முடிவு
செய்து ஜியார்டானோ
புருனோவை ரோம்
நகருக்கு அனுப்பி
வைக்க வேண்டும் என்று
வெனிஸ் நகரத்தின்
ஆட்சியாளர்களை
கேட்டுக் கொண்டதுடன்
வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
கேட்டுக் கொண்டது.

ரோம் நகரம்
வெனிஸ் நகரத்தை
கேட்டுக் கொண்டதுடன்
நிறுத்தாமல் ஜியார்டானோ
புருனோவை வெனிஸ்
நகரத்திலிருந்து ரோம்
நகரத்திற்கு அழைத்து
வருவதற்காக கப்பலையும்
அனுப்பி வைத்தது

வெனிஸ் நகரத்தின்
ஆட்சியாளர்களும்
வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினரும்
ஜியார்டானோ
புருனோவை ரோமுக்கு
அனுப்பி வைப்பதற்கு
எந்தவிதமான நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டும்
என்று கலந்து
ஆலோசித்தனர்

ஜியார்டானோ புருனோ
சாதாரண மனிதர் இல்லை ;
பல்வேறு புத்தகங்களை
எழுதி அனைவர்
மனதிலும் நிறைந்தவர் ;
உலகத்தில் உள்ள அனைத்து
மக்களாலும் அறியப்பட்டவர் ;
உலகம் முழுவதும
அறியப்பட்ட ஒரு
தத்துவமேதை ;
ரோம் கேட்டுக் கொண்டது
என்பதற்காக அவரை உடனே
அனுப்பி வைக்க முடியாது ;
சட்டப்படி என்ன
என்ன நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டுமோ
அவைகளை கடைப்பிடித்து
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு
அனுப்பி வைப்பதற்கான
முயற்சிகளை
மேற்கொள்ளலாம் என்று
முடிவு எடுக்கப்பட்டது

அதன்படி,
முதற்கட்டமாக
மக்களிடையே கருத்து
கேட்பது என்றும் ,
இரண்டாம் கட்டமாக
வெனிஸ் நகரத்தின்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையில் ஜியார்டானோ
புருனோவிற்கு எதிராக
வாக்கெடுப்பு நடத்தி
வாக்கெடுப்பு வெற்றி
பெறும் பட்சத்தில்
ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு அனுப்பி
வைப்பது என்றும் முடிவு
செய்யப்பட்டது

ஜியார்டானோ
புருனோவை எதிர்ப்பவர்கள்
சொன்ன பல்வேறு
காரணங்களில் இரண்டு
காரணங்கள் ஜியார்டானோ
புருனோவிற்கு எதிரான
முக்கிய சாட்சியங்களாக
எடுத்துக் கொள்ளப்பட்டன,.

காரணம் – 1 :
ஆண்டவனால் சொல்லப்பட்டு
பைபிளில் எழுதப்பட்ட
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது என்ற
கோட்பாடு தவறு என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்ற நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கோட்பாடே சரியானது
என்றும் ஜியார்டானோ
புருனோ சொல்லியதன்
மூலம் ஆண்டவன்
வாக்கை இழிவு
செய்வதுடன் ;
பைபிளையும் அவமதிக்கும்
விதத்தில் நடந்து
கொண்டு இருக்கிறார் ;
அவரை ரோம் நகருக்கு
அனுப்ப வேண்டும்
அங்கு அவரைக் கொல்ல
வேண்டும் என்றார்கள்

காரணம் – 2 :
கன்னி மேரியின்
புனிதத் தன்மையைப்
பற்றியும் ;
இயேசு கிறிஸ்துவின்
பிறப்பைப் பற்றியும் ;
இழிவு படுத்தும்
விதத்தில் பேசினார்
ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்
நீங்கள் ஒரு கிறிஸ்தவர்
குடும்பத்தில் பிறந்தவர்
கிறிஸ்தவராக வளர்ந்தவர்
கிறிஸ்தவர்
பள்ளியில் படித்தவர்
கிறிஸ்தவர் கல்லூரியில்
வகுப்பு நடத்தியவர்
கிறிஸ்தவ மதத்தைப் பற்றி
நன்கு அறிந்து இருப்பவர்
கிறிஸ்தவ மதத்தின்
மத போதகராக இருப்பவர்
கிறிஸ்தவ மதத்தின்
மதபோதகர்களில்
சிறந்தவராகக் கருதப்படுபவர்
கிறிஸ்தவ மதத்தில்
FATHER ஆக இருப்பவர்
ஏன் இப்படி பேசுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
நீங்கள் பேசுவது மதம்
நான் பேசுவது தத்துவம்
மற்றும் அறிவியல்
என்கிறார் மதம் என்ற
கண்ணாடியை அணிந்து
கொண்டு பார்த்தால்
உங்களுக்கு தத்துவம்
என்றால் என்ன என்றும்
அறிவியல் என்றால்
என்ன என்றும் தெரியாது
மதம் என்ற கண்ணாடியை
கழட்டிவிட்டு பாருங்கள்
உங்களுக்கு நான் சொன்னது
புரியும் என்று பேசுகிறார்
இவ்வாறு கிறிஸ்தவ
மதத்தை இழிவுபடுத்தி
பேசியதற்காக ஜியார்டானோ
புருனோவைக் கொல்ல
வேண்டும் என்றார்
ஒரு பெண்மணி

இந்த இரண்டு காரணங்களும்
ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்று
நிரூபிக்க போதுமானதாக
இருந்தது.

---------  இன்னும் வரும்
---------  26-12-2018
///////////////////////////////////////////////////////////


December 24, 2018

கிறிஸ்துமஸ் தின வாழ்த்து மடல்-25-12-2018


            கிறிஸ்துமஸ் தின வாழ்த்து மடல்-25-12-2018

அன்பிற்கினியவர்களே,

""பகைவனையும் நேசி"""

என்ற வார்த்தை
இயேசு கிறிஸ்துவால்
சொல்லப்பட்ட வார்த்தை ;
பிரபஞ்ச ஒருங்கிணைப்புத்
தத்துவத்தை
வலியுறுத்தும் வார்த்தை. ;

பிறரை நேசிப்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்துவிடலாம் :

ஒன்று :
பகைவராக இல்லாதவரை
நேசிப்பவர்கள்

இரண்டு :
பகைவரை நேசிப்பவர்கள்

பகைவராக இல்லாதவரை
நேசிப்பதற்கு எந்தவித
சிறப்பு குணங்களும்
தேவையில்லை
ஆனால் பகைவனை
நேசிப்பதற்கு
அன்பு, கருணை என்ற
இரண்டு குணங்கள்
கண்டிப்பாக தேவை.

இந்த இரண்டு குணங்கள்
மட்டும் இருந்தால் போதாது
அந்த குணமாகவே
மாறினால் மட்டுமே
பகைவனை நேசிக்க முடியும்

பகைவனை நேசிக்கும்
போது இரண்டு விதமான
நிகழ்வுகள் நடைபெறுகிறது

ஒன்று :
முதலில் நாம் திருந்துகிறோம்

இரண்டு :
பிறரை திருத்துகிறோம்

பொய் , சூது ,
கொலை , கொள்ளை ,
கற்புநெறி பிறழ்தல் ,
என்ற பஞ்சமா
பாதகங்களை செய்து
கொண்டிருக்கும் நாம்
இந்த தவறுகளுக்கு
எல்லாம் மூல காரணம்
நம்மிடம் உள்ள ஆறு
வகை தீய குணங்களான
பேராசை, சினம்,
கடும்பற்று,
முறையற்ற
பால் கவர்ச்சி,
உயர்வு- தாழ்வு
மனப்பான்மை ,
வஞ்சம் ஆகியவை தான்
என்பதை உணர்ந்து
அவற்றை நம்மிடையே
இருந்து படிப்படியாக
நீக்குவதற்கான
முயற்சிகளை நாம்
மேற்கொள்ளும்போது
அறுவகை தீய
குணங்களும் நம்மை
விட்டு படிப்படியாக
விலகிச் செல்ல செல்ல
அன்பும், கருணையும்
நம்மிடம் படிப்படியாக
வளர்ந்து கொண்டே
வருகிறது நம்மிடம் உள்ள
ஆறுவகை தீய குணங்களும்
நம்மை விட்டு முற்றிலுமாக
நீங்கும் போது நாம்
அன்பும், கருணையுமாகவே
மாறி விடுகிறோம்
இந்த நிலைக்கு நாம்
மாறிவிடும்போது நாம்
பகைவனையும் நேசிக்கத்
துவங்கி விடுகிறோம்

அதாவது பகைவனை
நேசிப்பதற்கு முதலில்
நாம் திருந்துகிறோம்

நாம் அன்பும்
கருணையுமாக மாறி
பகைவனை நேசிக்கத்
துவங்கும் போது பகைவன்
நமக்கு எதிராக எந்த
செயல்களைச் செய்தாலும்
அதனை பெரிதாக
எடுத்துக் கொள்ளாமல்
பகைவனை மன்னிக்கும்
உயர்ந்த குணத்தை
பெற்று விடுகிறோம்

நம்முடைய உயர்ந்த
குணங்களை காணும்
பகைவன் நாம் எவ்வளவு
கெடுதல் செய்கிறோம்
இவர் நம்மை மன்னித்து
நமக்கு எதிராக எந்த
ஒரு கெடுதலான
செயல்களையும்
செய்வதில்லை என்று
பகைவன் உணரும்போது
பகைவனுடைய மனதில்
உள்ள ஆறு வகை
தீய குணங்களும்
பகைவனை விட்டு
படிப்படியாக விலகிச்
செல்ல செல்ல
அன்பும், கருணையும்
பகைவனிடம் படிப்படியாக
வளர்ந்து கொண்டே
வருகிறது

பகைவனிடம் உள்ள
ஆறுவகை தீய குணங்களும்
பகைவனை விட்டு
முற்றிலுமாக நீங்கும் போது
பகைவன் அன்பும்,
கருணையுமாகவே
மாறி விடுகிறான்
இந்த நிலைக்கு பகைவன்
மாறிவிடும்போது
பகைவன் எதிரியாக
நினைத்த நம்மையும்
நேசிக்கத் துவங்கி
விடுகிறான்

நம்முடைய உயர்ந்த
குணங்களால் பகைவன்
திருத்தப்படுகிறான்

முதலில் நாம்
திருந்துகிறோம்
பிறகு பகைவனை
திருந்தச் செய்கிறோம்

இத்தகைய நிலையை
இந்த உலகத்தில் உள்ள
ஒவ்வொருவரும்
கைக்கொள்ளுபோது
இந்த உலகம்
முழுவதும் அன்பும்,
கருணையுமாக நிரம்பி
அனைவரும் ஒன்றுபட்டு
ஒற்றுமையாக
ஒருவருக்கொருவர்
ஒத்தும் உதவியும்
வாழக்கூடிய அமைதியான
ஒரு உலகம் ஏற்படும்
அதாவது பிரபஞ்ச
ஒருங்கிணைப்பு ஏற்படும்
என்பதை உணர்ந்து தான்
இயேசு கிறிஸ்து
பகைவனையும் நேசி
என்றார்

இவ்வளவு உயர்ந்த
தத்துவத்தை இரண்டு
வார்த்தைகளில்
சொல்லிச் சென்ற
இயேசு கிறிஸ்துவின்
வார்த்தைகளில்
உள்ள அர்த்தங்களை
மனதில் கொண்டு
இயேசு கிறிஸ்துவின்
பிறந்த நாளான
கிறிஸ்துமஸ் தினத்தன்று
பகைவனை நேசிக்கத்
துவங்குவோம்
சமதர்ம உலகத்தை
உருவாக்குவோம்

25-12-2018-ஆம் ஆண்டு
கிறிஸ்துமஸ்
தின வாழ்த்துக்கள்

--------என்றும் அன்புடன்
--------K.பாலகங்காதரன்
--------25-12-2018
///////////////////////