April 23, 2017

இயேசுகிறிஸ்து-காகபுசுண்டர்-இருந்திட்-பதிவு80-6

        (6)இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(6)

                                  """"பதிவு எண்பதை விரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

காகபுசுண்டர்:

நான் காகத்தின் உருவமாக இருந்தேன்
என்னைக் கண்ட மகிழ்ச்சியில்
வசிஷ்டர் என் முன்னே வந்து நின்று
என்னிடத்தில் பேசலானார்.
கோடியுகம் இந்த உலகத்தில்
வாழ்ந்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில்
நடந்ததைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நிகழ்ந்த
அதிசயங்களை பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
நல்லவை, கெட்டவைகளைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
அதிசயங்களைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
இழப்புக்களைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
சிறப்புகளைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
அற்புதங்களைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
பிற சித்தர்களின் சிறப்புகளைப் பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
பிற சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்களைப்
பார்த்து இருக்கிறீர்கள்;
கோடியுகம் இந்த உலகத்தில் நடந்த
சித்தர்கள் காட்டிய அற்புதங்களைக்
கேட்டு இருக்கிறீர்கள்;
தாங்கள் பார்த்தவைகளை,
தாங்கள் அறிந்தவைகளை,
தாங்கள் உணர்ந்தவைகளை,
தாங்கள் புரிந்தவைகளை,
தாங்கள் சிந்தித்தவைகளை,
உயர்ந்த நிகழ்வுகளை,
ஆன்மீகத்தின் உயர் நிலைகளை,
ஆன்மீகத்தின் ரகசியங்களை,
ஆன்கத்தின் சிறப்புகளை,
எனக்கு சொல்ல வேண்டும் - என்று
வசிஷ்டர் கேட்க,
நான் உண்மைகளை
உள்ளதை உள்ளபடி,
நான் கண்டதை கண்டபடி,
நான் அனுபவித்ததை அனுபவித்தபடி,
நான் உணர்ந்ததை உணர்ந்தபடி,
ஆன்மீக ரகசியங்கள் மட்டுமின்றி,
வாழ்க்கை நெறிமுறைகள்,
வாழ்க்கை தத்துவங்கள்,
ஆகியவற்றை
வார்த்தைகளால் சொல்கின்றேன்
என்கிறார் காகபுஜண்டர்.

உலகில் உள்ள வார்த்தைகளை எல்லாம்
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

                ஒன்று     :   ஓசையுள்ள வார்த்தை
            இரண்டு     :   ஓசையற்ற வார்த்தை

ஓசையுள்ள வார்த்தை என்பது
பேசப் பயன்படுத்தும் வார்த்தை;
ஓசையற்ற வார்த்தை என்பது
வெளியில் பேசாத போது
உள்ளே மனவெளியில்
பேசப் பயன்படுத்தப்படும் வார்த்தை;

ஓசையுள்ள வார்த்தை என்பது
புறவெளியில் தொடர்பு கொள்வது;
ஓசையற்ற வார்த்தை என்பது
அகவெளியில் தொடர்பு கொள்வது;

ஓசையுள்ள வார்த்தை
புறத்தில் தொடர்பு கொள்வது;
ஓசையற்ற வார்த்தை
அகத்தில் தொடர்பு கொள்வது;

ஓசையுள்ள வார்த்தை
எண்ணங்களை பகிர்ந்து கொள்வது;
ஓசையற்ற வார்த்தை
ரகசியங்களை பகிர்ந்து கொள்வது;

ஓசையுள்ள வார்த்தை
உடல் வரை செல்லும்;
ஓசையற்ற வார்த்தை
உயிர் வரை செல்லும்;

ஓசையுள்ள வார்த்தையைக் கொண்டு
பெரும்பாலான மக்களிடம்
தொடர்பு கொள்ளலாம்;
ஓசையற்ற வார்த்தையைக் கொண்டு
ஒரு சில மக்களிடம் தொடர்பு கொள்வதே அரிது;

ஓசையுள்ள வார்த்தையைக் கொண்டு
தொடர்பு கொள்ளும் உறவுகளை
பல்வேறு நிலைகளில் பிரித்தாலும்
முக்கியமான உறவு
ஆசிரியர் மாணவர் உறவு;
ஓசையற்ற வார்த்தையைக் கொண்டு
தொடர்பு கொள்ளும் உறவு
ஒரே ஒரு உறவு;
அது தான் குரு சீடன் உறவு;

ஆசிரியர் மாணவர் உறவு
ஓசையுள்ள வார்த்தைகளுடன்
தொடர்பு கொள்ளும் உறவு;
குரு சீடன் உறவு
ஓசையற்ற வார்த்தைகளுடன்
தொடர்பு கொள்ளும் உறவு;

ஓசையுள்ள வார்த்தை
உடல் வரை செல்லும்;
ஓசையற்ற வார்த்தை
உயிர் வரை செல்லும்;

ஓசையுள்ள வார்த்தையுடன்
தொடர்பு கொள்ளும்
ஆசிரியர் மாணவர் உறவு - என்பது
அறிவு சம்பந்தப்பட்டது;
ஓசையற்ற வார்த்தையுடன்
தொடர்பு கொள்ளும்
குரு சீடன் உறவு - என்பது
ஞானம் சம்பந்தப்பட்டது;

ஓசையுள்ள வார்த்தைகளுடன்
சொல்லக்கூடியவைகளை
ஓசையற்ற வார்த்தைகளால்
சொல்லலாம்;
ஓசையுள்ள வார்த்தை எங்கே
முடிவடைகிறதோ
அங்கே தான் ஓசையற்ற
வார்த்தை தொடங்குகிறது;

ஓசையுள்ள வார்த்தைகளால்
தன் கருத்தை சொல்லக் கூடியவர்கள்
எண்ணிக்கையில் அதிகம்;
ஓசையற்ற வார்த்தைகளால்
தன் கருத்தை சொல்லக்கூடியவர்கள்
கிடைப்பது மிகவும் அரிது;

குரு சீடன் பரம்பரையில்
ஓசைகளற்ற வார்த்தையை
பயன்படுத்துவது ஒரு
உயர்ந்த நிலை;
குரு சீடன் பரம்பரையில்
ஓசைகளற்ற வார்த்தையைத் தான்
பயன்படுத்த வேண்டும்;

எவைகளை எல்லாம்
வார்த்தைகளால் சொல்ல முடியுமோ
அவைகளை வார்த்தைகளால்
சொல்லலாம்;
எவைகளை வார்த்தைகளால்
சொல்ல முடியாதோ
அவைகளை சொல்வதற்கு
வார்த்தைகளற்ற வார்த்தைகளைப்
பயன் படுத்த வேண்டும்;

வார்த்தைகளற்ற வார்த்தையைப்
பயன்படுத்துவது என்பது
ஆன்மீகத்தில் ஒரு உயர்ந்த நிலை;
குருவுக்கும் சீடனுக்கும்
ஒரு ஒத்ததிர்வு இருந்தால் மட்டுமே
இந்த வார்த்தைகளற்ற வார்த்தைகளைப்
பயன்படுத்த முடியும்;

வார்த்தைகளற்ற வார்த்தைகளை
புரிந்து கொள்ள வேண்டுமென்றால்
குருவுக்கும் சீடனுக்கும்
ஒரு உயிர்க்கலப்பு இருக்க வேண்டும்;
மனவெளியில் தொடர்பு கொள்ளக்கூடிய
ஒரு நிலை இருக்க வேண்டும்;
வார்த்தைகளற்ற வார்த்தைகளைப்
புரிந்து கொள்ளக்கூடிய
தன்மை இருக்க வேண்டும்;
வார்த்தைகளற்ற வார்த்தையை
ஏற்றுக் கொண்டு பின்பற்றும்
தன்மை இருக்க வேண்டும்;
அத்தகைய
ஒரு நிலை இருந்தால் மட்டுமே
வார்த்தைகளற்ற வார்த்தையை
குரு பயன்படுத்த
சீடன் அந்த வார்த்தைகளற்ற
வார்த்தையை புரிந்து
பின்பற்றி உயர்வடைய முடியும்;

குருவும் , சீடனும்
ஒரே ஒத்ததிர்வில் இருந்தால் மட்டுமே
வார்த்தைகளற்ற வார்த்தையை
குரு பயன்படுத்த
சீடன் அதைப் புரிந்து
கொள்ள முடியும்;
குருவுக்கும், சீடனுக்கும்
ஒரே விதத்தில் ஒத்ததிர்வு இல்லை என்றால்
குரு வார்த்தைகளற்ற வார்த்தையை
பயன்படுத்த முடியாது;
குரு வார்த்தைகளற்ற வார்த்தையை
பயன்படுத்தினாலும்
சீடன் அதை புரிந்து கொள்ள முடியாது;
வார்த்தைகளற்ற வார்த்தை
எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
மூலத்தின் ரகசியத்தையும்;
ஆதியின் சூட்சுமத்தையும்;
மறைபொருள் விளக்கத்தையும்;
கடவுள் நிலையையும்;
பிரபஞ்ச தோற்றத்தையும்;
மனிதனின் நிலையையும்;
கர்மாவின் ரகசியத்தையும்;
மறுஜென்ம ரகசியத்தையும்;
பிறவி எடுப்பதையும்;
இன்ப, துன்ப மாறுபாட்டையும்;
விதி, மதி வேறுபாட்டையும்;
மனிதர்களின் மனமாற்றத்தையும்;
மனதின் இயக்கத்தையும்;
உயிரின் உன்னதத்தையும்;
உடலின் சாராம்சத்தையும்;
தெரிந்து கொள்வதற்கு
வார்த்தைகளற்ற வார்த்தை
பயன்படுத்தப் படுகிறது.

இந்த வார்த்தைகளற்ற வார்த்தையை
பயன்படுத்த வேண்டுமானால்
குரு, சீடன் உறவு
எப்படி இருக்க வேண்டும்
என்பதைத் தெரிந்து இருக்க வேண்டும்.

ஓசைகளற்ற வார்த்தைகளை
குரு பயன்படுத்தும் போது
சீடன் புரிந்து கொள்ள வேண்டும் என்றால்
சீடன்   இரண்டு விதமான
தன்மைகளைப் பெற்றிருக்க வேண்டும்
                ஒன்று          :     பொறுமை
                இரண்டு      :      நிதானம்

பொறுமை, நிதானம்
எந்த சீடனுக்கு இருக்கிறதோ
அந்த சீடனுக்கே அமைதியாக
இருக்கக்கூடிய பக்குவம் வரும்.

அமைதியாக இருக்கக்கூடிய
பக்குவம் இருந்தால் மட்டுமே,
இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய மனமானது   
தனது சுழற்சியை குறைத்துக் கொண்டு
குறைத்துக் கொண்டே வந்து,
எதிலிருந்து பிறந்ததோ,
எதிலிருந்து வந்ததோ,
எதிலிருந்து படர்க்கை நிலை அடைந்ததோ,
அதனுடன் இணைந்து
வெளியில் இரண்டறக் கலக்கும்
நிலையை அடைகிறது.

குரு சீடன் நிலையில்
பொறுமைநிதானம்
முக்கிய பங்கு வகிக்கிறது
சீடன் கற்றுக் கொள்வதற்காக
குருவிடம் வருகிறார்;
ஓரு குறிப்பிட்ட காலத்திற்குள்
கற்றுக் கொள்ள வேண்டும்
என்ற நினைப்பில் வருகிறார்;
ஆனால் குரு கற்றுக் கொடுக்காமல்
குறிப்பிட்ட காலத்தில்
கற்றுக் கொடுக்காமல்
காலம் தாழ்த்துகிறார்;
எதிர்பார்ப்புடன் வந்த சீடனுக்கு
பொறுமை இல்லாததால்
சீடன் குருவை விட்டு சென்று விடுகிறான்;

குறிப்பிட்ட காலத்திற்குள்
குரு எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்;
அதை நான் கற்றுக் கொள்ள வேண்டும்;
என்று சீடன் வந்தால்,
அதாவது பொறுமை இல்லாமல் வந்தால்
சீடனால் கற்றுக் கொள்ள முடியாது;
பொறுமையுடன் காத்துக்
கொண்டிருக்க வேண்டும்;

எந்த சீடன் பொறுமையுடன்
காத்துக் கொண்டு இருக்கிறானோ
அவனால் மட்டுமே குருவிடம் இருந்து
கற்றுக் கொள்ள முடியும்;
பொறுமை இல்லாத
சீடனால் குருவிடம் இருந்து
எதையும் கற்றுக் கொள்ள முடியாது;
பொறுமை இல்லாமல் இருக்கும் சீடனால்
எந்த குருவிடம் சென்றாலும்
கற்றுக் கொள்ள முடியாது;

சீடனுக்கு நிதானம் என்பது
அடுத்து தேவைப்படும் ஒன்று
குரு சீடனுக்கு எப்போது
கற்றுக் கொடுக்க வேண்டும்
என்று நினைக்கிறாரோ
காலம் கனிந்து விட்டால்
கற்றுக் கொடுப்பார்;
பொறுமையுடன் இருக்கும்
சீடனால் தான்
காலத்தைப் பார்க்காது,
பொறுமையுடன் இருக்கும்
சீடனால் தான்
எதையும் கற்றுக் கொள்ள முடியும்;
பொறுமையில்லாத சீடனால்
எதுவும் கற்றுக் கொள்ள முடியாது;
எந்த குருவிடம் சென்றாலும்
பொறுமையுடன்  இருக்கும் சீடனால்
தான் எதையும் கற்றுக் கொள்ள முடியும்.

நிதானம் அதிகம்
முக்கியத்துவம் வாய்ந்தது
வாழ்க்கைக்கே நிதானம்
முக்கியமானது என்றால்,
ஆன்மீகத்திற்கு நிதானம்
எவ்வளவு முக்கியமானது
என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில் நிதானத்துடன் இருப்பவர்களுக்கு
எல்லாம் கிடைக்கும்;
நிதானம் தவறியவர்களுக்கு
எதுவும் கிடைக்காது;

சீடன் பொறுமையாக இருந்து
குருவின் அருளைப் பெற்று
கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான்.
சீடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்த பிறகு
கற்றுக் கொண்ட
ஒவ்வொரு கலையையும்
நிதானமாக காலத்தைப் பார்க்காமல்
செய்து பழக வேண்டும்.
ஒவ்வொரு கலையையும்
நிதானமாக செய்து பழக வேண்டும்.
ஒவ்வொரு கலையும் தரும் பயனையும்
உடனே பார்க்க வேண்டும்
உடனே கிடைக்க வேண்டும் - என்று
நினைக்கக் கூடாது.
ஒவ்வொரு கலையும்
தன் பயனை
நிதானமாகத் தான் தரும்.
நிதானமாக செயல்படாதவர்களுக்கு
எந்த கலை கற்றாலும் பயன் இல்லை.

நிதானமாக கற்றுக் கொண்ட கலைகளை
தொடர்ந்து செய்து கொண்டு
பலன் கிடைத்தாலும்,
கிடைக்கா விட்டாலும்,
விடா முயற்சியுடன்
செய்து வருபவர்களுக்கு,
பழகி வருபவர்களுக்கு,
பழகிய கலை பலன் கொடுக்கும்.

உடனே கிடைக்கும் என்று  எதிர் பாரக்கக்கூடாது
எவ்வளவு நாள் ஆனாலும் காத்திருக்க வேண்டும்;
எவ்வளவு மாதம் ஆனாலும் காத்திருக்க வேண்டும்;
எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும்
காத்திருக்க வேண்டும்;
அவ்வாறு நிதானமாக காத்திருப்பவர்களுக்கு
கற்றுக் கொண்ட  கலையின் பலன் கிடைக்கும்;
உடனே கிடைக்கும் அல்லது நாள் பட்டு கிடைக்கும்
ஆனால் கண்டிப்பாக கிடைக்கும்;
ஏனென்றால் குரு
சீடனிடம் கலையை  விதைத்து விட்டால்
கண்டிப்பாக மரமாக வளர்ந்து
அது அதன் பயனைக் கொடுத்துத் தான்
ஆக வேண்டும்.

குருவுக்கும், சீடனுக்கும் உள்ள உயிர் தொடர்பு
அதிகரிக்க அதிகரிக்க
ஓசையுள்ள வார்த்தையால் பேசிக் கொண்டிருந்த
குருவும், சீடனும்
குரு  ஓசையற்ற வார்த்தைகளால்
பேச ஆரம்பிப்பார்
குருவின் ஒத்ததிர்வுடன்
சீடனின் ஒத்ததிர்வு  இருந்தால் மட்டுமே
குரு ஓசைகளற்ற வார்த்தையால் பேசும் போது
சீடன் கேட்பார்.

குருவின் ஒத்ததிர்வுடன்
சீடனின் ஒத்ததிர்வு இல்லையென்றால்
சீடன் குருவின் ஓசைகளற்ற வார்த்தைகளை
கேட்க முடியாது.

குரு அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்;
சீடன் பெறும் விதத்தில் இருக்க வேண்டும்;
குரு எந்த அளவிற்கு நல்ல  இதயத்துடன்
உயர்ந்த நிலையில் இருக்கிறாரோ
அந்த அளவிற்கு சீடனும்
தூய்மையாகவும், உண்மையாகவும்,
நேர்மையாகவும், எளிமையாகவும்,
அடக்கமாகவும்,
இருக்க வேண்டும்.

அத்தகையவர்களுக்கே
ஒழுக்கநிலையில் இருக்கும் குரு அளிப்பார்;
ஒழுக்கநிலையில்  சீடன்  இருந்தால் மட்டுமே
சீடனும் அதை ஏற்றுக் கொள்வார்;

இத்தகைய உயர்ந்த நிலையில்
குரு இல்லை என்றால்,
குருவால் அளிக்க முடியாது;
அதே உயர்ந்த நிலையில்
சீடனும் இல்லை என்றால்
சீடனும் பெற முடியாது.

குருவின் உயர்ந்த நிலை என்பது
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை;
சீடனின் உயர்ந்த நிலை என்பது
ஒழுக்கத்தில் உயர்ந்த நிலை;
ஒழுக்கம் உள்ள குருவும்
ஓழுக்கம் உள்ள சீடனும் இருந்தால் மட்டுமே
ஓசைகளற்ற வார்த்தையை குரு பேச
ஓசைகளற்ற வார்த்தைகளை
சீடன் கேட்க முடியும்.

குருவும், சீடனும்  ஒழுக்க நிலையில்
இல்லை என்றால்
குருவும் அளிக்க முடியாது;
சீடனும் பெற முடியாது;

ஞானம் என்றால் என்ன என்று
தெளிவாகச் சொல்ல வேண்டும்
என்று வசிஷ்டர் கேட்டார்;
அவருடன் சேர்ந்து
ஏனைய சித்தர்களும்  தங்களுக்கும்
ஞானம் என்றால் என்ன என்று
சொல்ல வேண்டும் என்றும்,
தங்களை கடைத்தேற வழி
சொல்ல வேண்டும் என்றும்,
கடைத்தேற செய்ய வேண்டும்
என்றும்  கேட்டார்கள்;
இவர்கள் இவ்வாறு கேட்டதால்
ஞானம் என்றால் என்ன என்று
வசிஷ்டருக்கு சொன்னேன்
என்கிறார் காகபுஜண்டர்.

உலகில் ஆன்மீகம் என்ற பெயரில்
ஆன்மீகத்தைக் கற்றுக் கொள்ள
விரும்புபவர்களை
இரண்டு நிலைகளில்  பிரித்து விடலாம்.

                ஒன்று       :        உண்மையான ஆன்மீகம்
                இரண்டு   :        உண்மை அல்லாத ஆன்மீகம்

உண்மையான
ஆன்மீகம் என்பது,
ஆன்மாவை அறிந்து,
ஆன்மாவின் பேராற்றலை அறிந்து,
அதில் உள்ள இருப்பை அறிந்து,
கொள்வது தான் ஆன்மீகம்.
அது மட்டுமல்ல
உண்மையான ஆன்மீகம் என்பது,
ஆன்மாவை அறிந்து கொள்வது,
மனதை அறிந்து கொள்வது,
உயிரை அறிந்து கொள்வது,
இயக்கமற்ற நிலையை அறிந்து கொள்வது,
இயக்க நிலையை அறிந்து கொள்வது,
ஞானம் என்பதை அறிந்து கொள்வது,
சாமாதி நிலையை அறிந்து கொள்வது,
ஜீவசமாதி நிலையை அறிந்து கொள்வது,
முக்தி நிலையை அறிந்து கொள்வது,
ஆகியவற்றைக் குறிக்கும்.

இதனால் தான்
உண்மையான ஆன்மீகத்தை
கற்றுக் கொள்ள விரும்புபவர்கள்;
உண்மையான ஆன்மீகத்தை
பின்பற்ற நினைப்பவர்கள்;
உண்மையான ஆன்மீகத்தை
கடைபிடிக்க விரும்புபவர்கள்;
உண்மையான ஆன்மீகத்தின்
வழி செல்ல விரும்புபவர்கள்;
உண்மையான ஆன்மீகத்தை
கற்றுக் கொள்ள விரும்புவார்கள்;
உண்மையான ஆன்மீகத்தை கற்றுக் கொண்டு
உண்மையை அறிய முற்படுவார்கள்.

உண்மையல்லாத ஆன்மீகம் என்பது
உயிர், மனம்,
ஞானம், சமாதி, ஜீவசமாதி, முக்தி,
ஆகியவை என்றால் என்ன என்று
தெரிந்து கொள்ள ஆசைப்படாமல்,
விபூதி வரவழைப்பது,
குங்குமம் வரவழைப்பது,
சித்து வேலைகள் செய்து
மக்களை ஆச்சரியப்பட வைத்து
தனக்கு அடிமையாக வைப்பது,
வசியம் பண்ணி பிறரை மயக்குவது,
மக்களை அடிமையாக வைத்து,
தன் சொற்படி கேட்க வைப்பது,
சித்து வேலைகள் காட்டி,
மக்களை அடிமையாக
வைக்க ஆசைப்படுவது,
ஆகியவை
 உண்மையான ஆன்மீகத்தில் வராது;
இவைகள் உண்மை அல்லாத
ஆன்மீகத்தில் வரும்;
உண்மையுடன் இருக்காதவர்கள் தான்
உண்மை அல்லாத  ஆன்மீகத்தை நாடுவார்கள்;
உண்மையுடன் இருப்பவர்கள்
உண்மையான ஆன்மீகத்தை  நாடுவார்கள்;

அழியாத ஒன்றை அறிய  ஆசைப்படுபவர்கள்
உண்மையான ஆன்மீகத்தை  நாடுவார்கள்;
அழியும் ஒன்றை அறிய ஆசைப்படுபவர்கள்
உண்மை அல்லாத ஆன்மீகத்தை
நாடுவார்கள்;

உண்மையான ஆன்மீகத்தை அறிய
விரும்புபவர்களுக்கு,
உண்மையான ஆன்மீகத்தை போதிக்க
உண்மையான குரு வருவார்.
உண்மை அல்லாத ஆன்மீகத்தை
அறிய விரும்புபவர்களுக்கு
உண்மையான குரு வருவார்
என்று எதிர்பார்க்க முடியாது.

வசிஷ்டர் சொல்ல வேண்டும் என்று கேட்க
காகபுஜண்டராகிய நான்
எதை வெளியாகப் பேச வேண்டும் என்று கேட்க
எதுவும் பாக்கியில்லாமல்
தாங்கள் கண்ட உண்மைகளை
தாங்கள் அறிந்த உண்மைகளை
ஒன்றும் பாக்கியில்லாமல்
மனிதனின் பிறப்பு முதல்
இறப்பு வரை உள்ளவைகளையும்
ஆதி முதல் அந்தம் வரை
உள்ளவைகளையும்
சொல்ல வேண்டும்
என்று வசிஷ்டர் கேட்க
நான் சொன்னேன் என்று
காகபுஜண்டர் சொன்னார்
இது தான் உண்மையான ஆன்மீகம்;
இந்த உண்மையான ஆன்மீகத்தைத் தான்,
நாம் அறிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்;
தெரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்;
அறிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்;
உணர்ந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்;
புரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்;
அறிந்து, உணர்ந்து,
உண்மையான ஆன்மீகம் வழி
செல்ல வேண்டும்.

உண்மையான ஆன்மீகத்தை
சீடன் அறிந்து கொள்ள வேண்டும்
என்று நினைப்பதால்,
உண்மையான ஆன்மீகத்தை அறிந்த
உண்மையான குரு
உண்மையான ஆன்மீகத்தை
போதிக்கிறேன் என்றார்.

உண்மையான ஆன்மீகத்தை
சீடன் அறிந்து கொள்ள  ஆசைப்படாமல்
உண்மை அல்லாத ஆன்மீகத்தை
அறிந்து கொள்ள ஆசைப்பட்டால்
எக்காலத்திலும்  உண்மையான
ஆன்மீகத்தை அறிந்து கொள்ள
உண்மையான குரு கிடைக்க மாட்டார் - என்பதை
நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

அஃறிணை என்று எடுத்துக் கொண்டாலும்,
உயர்திணை என்று எடுத்துக் கொண்டாலும்,
குரு, சீடன் உறவு என்று எடுத்துக் கொண்டாலும்
அவை ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன.
பிரபஞ்சத்தில் உள்ள
எந்த பொருளும் தனித்து இல்லை;
அவைகள் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருக்கின்றன;
உணவாக இருக்கலாம்;
இயக்கமாக இருக்கலாம்;
வேறு ஏதேனும் ஒன்றாகக் கூட இருக்கலாம்;
ஆக மொத்தம்
பிரபஞ்சத்தில்  உள்ள
எந்த ஒன்றும் தனித்து இல்லை
ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன;

ஒவ்வொரு மனிதனும்
இப்பிரஞ்சத்தில் தான் தனித்து இல்லை
ஏதேனும் ஒன்றுக்காக தான்
பிறரை, பிறவற்றை சார்ந்து தான்
இருக்க வேண்டும் - என்று
ஒவ்வொரு மனிதனுக்கும்
சிந்தனை வந்தால்
அவன் தன்னைப் போல
பிற உயிரை விரும்புவான்
இல்லையென்றால்
மனிதன் எப்போதும் மிருகமாகத்
தான் இருப்பான்.



இயேசு கிறிஸ்து - காகபுசுண்டர்

இயேசு கிறிஸ்துவுக்கும்
அவரது சீடர்களுக்கும்
ஒரு ஒத்ததிர்வு இருந்த காரணத்தினால்
மறைபொருள் ரகசியங்களை
இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு
வழங்கினார்.

அதைப்போல்,
காகபுசுண்டருக்கும்
வசிஷ்டருக்கும்
ஒரு ஒத்ததிர்வு இருந்த காரணத்தினால்
மறைபொருள் ரகசியங்களை
குரு சீடன் என்ற முறையில்
காகபுசுண்டர் வசிஷ்டருக்கு
வழங்கினார்.





""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஎண் பதுந்தான்முற்றே""""


No comments:

Post a Comment