April 23, 2017

இயேசுகிறிஸ்து-காகபுசுண்டர்-இருந்திட்-பதிவு-80-3


         இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(3)

                                  """"பதிவு எண்பதை விரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

பரம்பரைத் தொழில்
பரம்பரை அல்லாத தொழில் என்ற
இரு வேறு பட்ட தொழில்கள் இருந்தாலும்,
இரண்டிலும் சாராத,
இரண்டிலும் இணையாத,
இரண்டிலும் வேறுபட்ட,
இரண்டிலும் ஒத்துவராத,
இரண்டிலும் மாறுபட்ட,
புதிய தொழில் ஒன்று உண்டு.
அதுதான் தெய்வீக தொழில்


தெய்வீக தொழில்

தெய்வீக தொழில் என்பது
எதையும் சாராதது,
தனித்து இயங்குவது,
முற்றிலும் புதியதானது,
முற்றிலும் புதியதாக தோன்றுவது,
ஒன்று மூடி மற்றொன்று திறப்பது;
ஒன்று இறந்து மற்றொன்று பிறப்பது;
ஒன்று மறைந்து மற்றொன்று உருவாவது;
ஒன்று அழிந்து மற்றொன்று உற்பத்தியாவது;
பழையது முடிந்து புதியது பிறப்பது,
பழையது அழிக்கப்பட்டு புதியது பிறப்பது,
பழையது சாயலின் இல்லாமல்
புதியதாக உருவாவது,
ஒரு முனையில் இருந்து
மற்றொரு முனைக்கு செல்வது,
இரண்டு எதிர் எதிர்
முனைகளை கொண்டது,
இத்தகைய தொழில் செய்ய வேண்டுமானால்
இறைவனின் அருள் வேண்டும்.

பரம்பரை தொழில்
பரம்பரை அல்லாத தொழில் - என்ற
இரு வேறுபட்ட தொழில்கள் இருந்தாலும்,
இரண்டிலும் சேராத,
இரண்டிலும் சாராத,
இரண்டிலும் இணையாத,
இரண்டிலும் வேறுபட்ட,
இரண்டிலும் ஒத்துவராத,
இரண்டிலும் மாறுபட்ட,
புதிய தொழில் ஒன்று உண்டு.
அதுதான் தெய்வீக தொழில்.

தெய்வீக தொழில் என்பது
எதையும் சாராதது;
தனித்து இயங்குவது;
ஒன்ற மூடி ஒன்று திறப்பது;
ஒன்று இறந்து ஒன்று பிறப்பது;
ஒன்று முடிந்து ஒன்று உருவாவது;
பழையது அழிந்து முற்றிலும்
புதியதாக தோன்றுவது;
பழையதின்  சாயல் ஏதும் இல்லாமல்
முற்றிலுமாக புதியதாக தோன்றுவது;
ஒரு முனையில் இருந்து
மற்றொரு முனைக்கு செல்வது;
இரண்டு விதமான எதிர் எதிர்
முனைகளை கொண்டது;
இரண்டு விதமான எதிர் எதிர்
துருவங்களை கொண்டது;
முற்றிலும் புதியதானது;
பழையது அழிக்கப்பட்டு
புதியது பிறப்பது;
இத்தகைய தொழில் செய்ய வேண்டுமானால்
இறைவனின் அருள் வேண்டும்.

அதனால் இயேசு,
மீன் பிடிப்பவர்களை நோக்கி வாருங்கள்
மனிதர்களை பிடிப்பவர்களாக
ஆக்குகிறேன் என்றார்.
மனிதர்களை பிடிப்பது தான்
தெய்வீக தொழில்.
மனிதர்களை பிடிப்பது
அவ்வளவு ஒன்றும் எளிதான
காரியம் அல்ல.

பிரசங்கம் முடிந்த பின்பு
இயேசு,
சீமோனை நோக்கி,
ஆழத்திலேயே தள்ளிக் கொண்டு போய்
மீன் பிடிக்கும் படி
வலைகளை போடுங்கள் என்றார்.
அதற்கு சீமோன்
இயேசுவை நோக்கி,
இரவு முழுவதும் கஷ்டப்பட்டு
எங்களுக்கு ஒன்றும்
கிடைக்கவில்லை இருந்தாலும்,
நீங்கள் சொல்வதை கேட்டு
உங்கள் மேல் நம்பிக்கை வைத்து,
மீன் கிடைக்கும் என்ற நினைப்பில்,
மீன் வலையில் மாட்டும் என்ற நினைப்பில்,
மீனைப் பிடிக்கும் வலையை போடுகிறோம்
என்று சொல்லியபடியே
இயேசு சொல்லியபடியே
மீன் பிடிக்க வலையை போட்டு
மீன் வலை கிழிந்து போகும் அளவிற்கு
அதிக அளவில் மீன்களைப் பிடித்தார்கள்.

அப்பொழுது அவர்கள்
மற்ற படகுகளிலிருந்தவர்களை அழைத்து
தங்களுக்கு உதவும்படி கூறினார்கள்;
அவர்களும் வந்து உதவி செய்து
இரண்டு படகுகளும்
நிரம்பி வழியும் விதத்தில் நிரப்பினார்கள்;
நடந்த நிகழ்வுகளை கண்டு,
நடந்த அதிசயத்தை கண்டு,
சீமோன் அவர் பாதத்தில் விழுந்து
நானே பாவி
நீர் என்னை விட்டு
போக வேண்டும் என்றான்

அவன் அதிகமான மீன்கள்
பிடித்த காரணத்தாலேயே,
தங்கள் உடன் கூட இருந்தவர்கள்
பிரமித்த காரணத்தினாலேயே,
சுற்றி  இருந்தவர்கள்
அதிசயித்த காரணத்தினாலேயே,
அவன் அவ்வாறு கூறினான்.

உலகில் உள்ள
பாவங்களை எல்லாம்
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்;
அதைப் போல்
உலகில் உள்ள
புண்ணியங்களை எல்லாம்
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்;

ஒருவர் பாவத்தை
இரண்டே இரண்டு நிலைகளில் தான்
செய்ய முடியும்;
அதைப் போல் ஒருவர்
புண்ணியத்தை
இரண்டே இரண்டு நிலைகளில் தான்
செய்ய முடியும்;

பாவத்தை செய்யும் நிலைகளை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

      ஒன்று                 :     தானே செய்வது
      மற்றொன்று  :    புறத் தூண்டுதலால் செய்வது

அதைப்போல
புண்ணியத்தை செய்யும் செயல்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

      ஒன்று                 :         தானே செய்வது
      மற்றொன்று  :        புறத் தூண்டுதலால் செய்வது

பாவங்கள் அனைத்தும் கழிய வேண்டுமானால்
புண்ணியம் பெருக வேண்டும்
புண்ணியம் பெருகினாலே
பாவம் குறைந்து விடும்
இயேசு சீமோனே நோக்கி,
உங்களை இது முதல்
உங்களை மனிதர்களை பிடிப்பவர்களாக
ஆக்குவேன் என்றார்.

மனிதர்களை பிடிக்க வேண்டுமானால்
மனதில் அன்பும், கருணையும்
பெருக வேண்டும்;
மனதில் அன்பும் கருணையும்
பெருக வேண்டுமானால்
பாவங்கள் கழிய வேண்டும்;
யார் இடத்தில் பாவங்கள் கழிந்து
அன்பும், கருணையும் பெருகுகிறதோ
அவர்களால் மட்டுமே
மனிதர்களை பிடிக்க முடியும்;
மனிதர்களை பிடிப்பது
சாதாரண வேலை அல்ல
அது ஒன்று அழிந்து ஒன்று பிறப்பது;
ஒன்று மறைந்து புதிய ஒன்று தோன்றுவது;

மீன் பிடிப்பது என்பது ஒரு வேலை
அது சாதாரணமான வேலை
அது சாதாரணமான மீனவர்களால்
செய்யப்படும் வேலை;
மனிதர்களை பிடிப்பது என்பது
உயர்ந்தவர்களால் செய்யப்படும் வேலை;
இரண்டு தொழிலும் மாறுபாடு உடையது;
இரண்டும் நேர் எதிர் தன்மை உடையது;
இரண்டும் வெவ்வேறு தன்மை உடையது;
இரண்டும் வெவ்வேறு
தன்மை உடையவர்களால்
செய்யக்கூடியது;
மீன்பிடி தொழில்
ஒரு சிலரால் மட்டுமே செய்யமுடியும்;
மனிதர்களை பிடிப்பது
எல்லோராலும் செய்ய முடியாது;
மனிதர்களை பிடிப்பது உயர்ந்த நிலை;
அது யாருக்கும் கிடைக்காத
உயர்ந்த நிலை;
யாரும் அடைய முடியாத
மிகச் சிறந்த  உயர்ந்த நிலை;

யாரிடம் பாவம் குறைந்து
அன்பும், கருணையும் பெருகுகின்றதோ
அவரால் மட்டுமே மனிதர்களை
பிடிக்க முடியும்;
மனிதர்களை பிடிப்பது என்பது
மனிதர்களின் இதயத்தில் இடம் பிடிப்பது;
மனிதர்களின் சிந்தனையில் இடம் பிடிப்பது;
யார் ஒருவர் பிறர் உடைய
மனதில் இடம் பிடிக்கிறாரோ,
பிறர் உடைய அன்பை பெறுகிறாரோ,
அவர்தான் மனிதரை பிடிக்க முடியும்;
மனிதரை பிடிப்பது என்பது
மனிதரை பிடிப்பது அல்ல,
மனிதரின் மனதில் இடம் பெறுவது;
மனிதரின் அன்பை பெறுவது;

யார் ஒருவர்
பிறரின் அன்பைப் பெறுகிறாரோ
அவரால் மட்டும் தான்
மனிதர்களைப் பிடிக்க முடியும்;
முதல் நபர்
இரண்டாவது நபரின்
அன்பைப் பெற்றால்,
முதல் நபர்
இரண்டாவது நபரைப் போல
பல்வேறு நபரின்
அன்பைப் பெற்றால்,
முதல் நபர் தான்
மனிதர்களைப் பிடிக்கும்
தகுதியைப் பெறுகிறார்.

முதல் நபர்
இரண்டாவது நபரின் அன்பைப் பெற்றால்
முதல் நபர்
உயர்ந்த நிலையில்
இருப்பதாகக் கருதப்படுவார்;
முதல் நபர்
சிறந்தவராகக் கருதப்படுவர்;
முதல் நபர்
வேறுபட்ட தன்மையுடையவராகக்
கருதப்படுவார்;
முதல் நபர்
மாறுபட்ட
தன்மையுடையராகக் கருதப்படுவார்;
முதல் நபர்
தனித்தகுதி
உடையராகக் கருதப்படுவார்;
முதல் நபர்
உயர்நிலை
அடைந்தவராகக் கருதப்படுவார்;
முதல் நபர்
சிறப்பான தகுதி
உடையவராகக் கருதப்படுவார்;
முதல் நபர்
தனித்தன்மை
உடையராகக் கருதப்படுவார்;

அப்பொழுது தான்
முதல் நபர் சொல்வதை
இரண்டாம் நபர் கேட்பார்;
முதல் நபர் விளக்குவதை
இரண்டாம் நபர் கேட்பார்;
முதல் நபர் பேசுவதை
இரண்டாம் நபர் கேட்பார்;
முதல் நபர் வார்த்தைகளுக்கு
இரண்டாம் நபர் கட்டுப்படுவார்;
முதல் நபர் சொல்வதை
இரண்டாம் நபர் செய்வார்;
இது தான் மனிதர்களைப் பிடிப்பது
அதாவது அன்பால்
மனிதர்களைப் பிடிப்பது
இதற்கு இறைவனின்
அருள் இருந்தால் மட்டுமே முடியும்;
இரண்டாம் நபர் போல
இன்னும் பல நபர்கள் கூடினால்
முதல் நபர் பேச்சை
அத்தனை பேரும் கேட்பார்கள்;
செயல்படுத்துவார்கள்;
சொல் பேச்சை கேட்பார்கள்;
சொல் வழி நடப்பார்கள்;
இது தான் மனிதர்களைப் பிடிப்பது
இது இறைவனால் மட்டுமே முடியும்;
இறைவனால் மட்டுமே
மனிதர்களை பிடிப்பவர்களாக்க முடியும்;
அதனால் தான் இயேசு
வாருங்கள் உங்களை
மனிதர்களை பிடிப்பவர்களாக்குவேன்
என்றார்.

சாதாரன தொழில் செய்பவனையும்
அதாவது மீன் பிடிப்பவனையும்
மனிதர்களை பிடிப்பவர்களாக்க
இறைவனால் மட்டுமே,
இறைமகனால் மட்டுமே,
இயேசுவால் மட்டுமே,
முடியும்.

ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு செல்வதற்கும்,
ஒன்று மறைந்து
மற்றொன்று பிறப்பதற்கும்,
ஒன்று அழிந்து
ஒன்று புதியதாக உருவாவதற்கும்,
இறைவன் மட்டுமே
வழி காட்ட முடியும்;
இறைமகனால் மட்டுமே
வழி காட்ட முடியும்;
இயேசுவால் மட்டுமே
வழி காட்ட முடியும்;
பிதாகுமாரனால் மட்டுமே
வழி காட்ட முடியும்;
அதனால் தான் இயேசு
உன்னை மனிதர்களைப்
பிடிக்கிறவனாய் மாற்றுவேன் என்றார்.

பரம்பரைத் தொழில்
பரம்பரை அல்லாத தொழில் - என்ற
இருமாறுபட்ட நிலைகள் இருந்தாலும்
இதில் இரண்டிலும் சேராத
இந்த இரண்டிலும்
இணையாத நிலை தான்
மனிதர்களை பிடிப்பது;
இது இறை அருளால்
மட்டும் தான் முடியும்;
இறைவனால் தான் மட்டும் முடியும்;
இறைமகனால் மட்டும் தான் முடியும்;
இயேசுவால் மட்டும் தான் முடியும்;
இயேசுவின்
அருள் பெற்றவர்களால் தான் முடியும்;
இயேசுவின் அன்புக்கு பாத்திரமானவர்களால்
மட்டும் தான் முடியும்;
இயேசுவை பின் தொடர்பவர்களால்
மட்டும் தான் முடியும்;
இயேசுவின் வழி நடப்பவர்களால்
மட்டும் தான் முடியும்;
இயேசுவின் சொற்படி நடப்பவர்களால்
மட்டும் தான் முடியும்;
இயேசுவின் வார்த்தைகளுக்கு
கட்டுப்பட்டவர்களால் தான் முடியும்;
இயேசுவின்
ஆதரவைப் பெற்றவர்களால் தான் முடியும்;
என்பதை உணர்ந்து கொண்டால்
மனிதர்களை பிடிப்பவர்களாக
மாற வேண்டும் என்றால்
இயேசுவின் அருள் வேண்டும்
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

---------இதன் தொடர்ச்சி
        இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(4)

----------பார்க்கவும், படிக்கவும்


No comments:

Post a Comment