April 23, 2017

இயேசு கிறிஸ்து-காகபுசுண்டர்-இருந்திட்-பதிவு-80-5

     இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(5)

                                  """"பதிவு எண்பதை விரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

காகபுசுண்டர்:

உயர்திணையில் உள்ள ஒன்றில்
அதன் இயல்பு வெளிப்படுவதை
நான்கு நிலைகளில் பிரித்து விடலாம்

1.உயர்திணையில் உள்ள ஒன்றில்
                 அதன் தன்மை
                புறத்தூண்டுதல் இல்லாமல்
                தானாகவே வெளிப்படும்போது
                நல்லது உண்டாகும்.

          2.உயர்திணையில் உள்ள ஒன்றில்
             அதன் தன்மை
             புறத்தூண்டுதல் இல்லாமல்
             தானாகவே வெளிப்படும்போது
             கெட்டது உண்டாகும்.

        3.உயர்திணையில் உள்ள ஒன்றில்
           அதன் தன்மை
           புறத்தூண்டுதல் மூலம்
           வெளிப்படுத்தப் படும்போது
           நல்லது உண்டாகும்

    4.உயர்திணையில் உள்ள ஒன்றில்
       அதன் தன்மை
      புறத்தூண்டுதல் மூலம்
     வெளிப்படுத்தப் படும்போது
     கெட்டது உண்டாகும்.

அஃறிணைக்கும், உயர்திணைக்கும்
உள்ள வேறுபாட்டினை
தெரிந்து கொண்டால்
தானாகவே வெளிப்படுவதற்கும்,
புறஉதவி மூலம் வெளிப்படுவதற்கும்,
புறத்தூண்டுதல் மூலம் வெளிப்படுவதற்கும்,
உள்ள வேறுபாட்டினையும்,
அவற்றிற்கிடையே உள்ள தொடர்பினையும்;
அவற்றிற்கிடையே உள்ள நெருக்கத்தையும்;
அவற்றிற்கிடையே உள்ள கருத்தினையும்;
அவற்றிற்கிடையே உள்ள தத்துவத்தினையும்;
அவற்றிற்கிடையே உள்ள விளக்கத்தினையும்;
நாம் தெரிந்து கொள்ளலாம்.


1.உயர்திணையில் உள்ள ஒன்றில்
அதன் தன்மை
புறத்தூண்டுதல் இல்லாமல்
தானாகவே வெளிப்படும்போது
நல்லது உண்டாகும்.

சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள்
புறத்தூண்டுதல் மூலமாகத் தான்
தங்கள் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்;
தானாகவே தங்கள் திறமையை
வெளிப்படுத்துபவர்கள் மிகக் குறைவு;
மேலும் தானாகவே தங்கள்
தன்மையை வெளிப்படுத்தும் போது,
அது அவர்களுடைய உண்மையான
தன்மையா என்று கண்டு பிடிப்பது கடினம்.

தன்னுள் இருக்கும் திறமையை
சுயமாக வெளிப்படுத்த
எல்லோராலும் முடியாது;
கோடியில் கோடியில்
கோடியில் ஒருவரால்
மட்டும் தான் முடியும்;

உலகில் உள்ள மக்கள் பயனடைய வேண்டும்
என்று கண்டுபிடிக்கப் பட்டவைகள்;
மக்கள் இன்பமாக இருக்க வேண்டும்
என்று கண்டுபிடிக்கப் பட்டவைகள்;
மக்கள் நோய் நீங்க  வேண்டும்
என்று கண்டுபிடிக்கப் பட்டவைகள்;
அனைத்தும் சுயமாக
கண்டு பிடிக்கப்பட்டவைகள்;
என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எப்படி இவைகள் மட்டும் சுயமாக
தன்னுள் இருக்கும்
திறமைகளை வெளிப்படுத்தி
பெற முடியும் என்று யோசித்தால்
நமக்கு சில உண்மை புரியும்.

இப்பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்றை,
இப்பிரபஞ்சத்தில் உருவாக்காத ஒன்றை,
இப்பிரபஞ்சத்தில் குறிப்பிடப்படாத ஒன்றை,
இப்பிரபஞ்சத்தில் சுட்டிக் காட்டப்படாத ஒன்றை,
கண்டு பிடிக்க வேண்டுமானால்,
சுயமாக தனது தன்மையை வெளிப்படுத்தினால்,
மட்டும் தான் முடியும்.

புறத்தூண்டுதலால் முடியாது;
புறத்தூண்டுதலில் அதற்கான
வழிமுறைகள் இருக்காது;
புறத்தூண்டுதலில்
புதியதாக கண்டுபிடிக்கும் வழி கிடையாது;
புறத்தூண்டுதல்
ஏற்கனவே இருப்பவைகளை தான் விளக்கும்
புதியதாக ஒன்று இப்படி இருக்கும் என்று
அவைகளுக்கு சொல்லத் தெரியாது;

சுயமாக நாம் கண்டுபிடிக்க வேண்டுமானால்
நம் ஜீவாத்மா ,பரமாத்மாவுடன் இணைய வேண்டும்;
பிரபஞ்சத்துடன் இணைய வேண்டும்;
அது அதுவானால் அதுவே சொல்லும்;
ஜீவாத்மா ,பரமாத்மாவுடன் இணைந்து விட்டால்
பரமாத்மா மறை பொருள்
ரகசியங்களை வெளிப்படுத்தும்;
உண்மை பொருள்களை வெளிப்படுத்தும்;
ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையாமல்
நம்மால் சுயமாக எதையும்
கண்டுபிடிக்க முடியாது;
நாம் சுயமாக கண்டு
பிடிக்க வேண்டுமானால்
ஜீவாத்மா ,பரமாத்மாவுடன்
இணைய வேண்டும்;
அவ்வாறு இணைந்தால்
நாம் சுயமாக நம்மால்
நம்முள் இருப்பவைகளை
கண்டுபிடிக்க முடியும்;
ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைந்த பிறகு
நம்மால் சொல்லப்படுபவைகள்
உண்மையாக இருக்கும்;
இந்த சமுதாயத்திற்கு
 நன்மை அளிப்பதாக இருக்கும்;
இந்த சமுதாயத்திற்கு
உயர்வுகளை அளிப்பதாக இருக்கும்;
இந்த சமுதாயத்திற்கு
நோய்களை நீக்குவதாக இருக்கும்;
சமுதாயத்திற்கு தேவையான
அனைத்தும் இருக்கும்;

ஜீவாத்மா ,பரமாத்மாவுடன்
இணைந்தால் மட்டுமே
ஒருவரால் சுயமாக
 செயல்பட முடியும்;
அதனால் நன்மை உண்டாகும்;
ஜீவாத்மா, பரமாத்மாவுடன்
இணையாமல் இருந்தால்
ஒருவரால் சுயமாக
இயங்க முடியாது.
தன்னால் சுயமாக தன்னுள் மறைந்திருக்கும்
தன்மைகளை ,
இயல்புகளை,
கருத்துகளை ,
வெளிப்படுத்த முடியாது.

சுயமாக வெளிப்படுவதில்
நன்மை ஏற்பட வேண்டுமானால்
நம் ஜீவாத்மா, பரமாத்மாவுடன்
இணைய வேண்டும்
இல்லையென்றால்
தீமையே உண்டாகும் என்பதை
மனதில் நிறுத்த வேண்டும்.




2.உயர்திணையில் உள்ள ஒன்றில்
அதன் தன்மை
புறத்தூண்டுதல் இல்லாமல்
தானாகவே வெளிப்படும்போது
கெட்டது உண்டாகும்.

உயர்திணையில்
தன்னால் வெளிப்படுவதில் தீமை தான்
அதிக அளவில் கலந்து இருக்கும்;
புறத்தூண்டுதல் சில சமயம் நன்மை பயக்கும்;
புறத்தூண்டுதல் சில சமயம் தீமை பயக்கும்;
அதைப்போல் சுயமாக வெளிப்படுவதில்
தீமை தான் அதிக அளவில் இருக்கும்;
சுயமாக வெளிப்படுவதில்
நன்மை குறைவாக இருக்கும்;

ஒருவர் ஆன்மீகத்தில் உயர்வடைய வேண்டும்;
ஆன்மீகத்தின் ரகசியங்களை
அறிந்து கொள்ள வேண்டும்;
ஆன்மீகத்தின் எல்லையை தொட வேண்டும்;
ஆன்மீகத்தின் உச்சியை தொட வேண்டும்;
ஆன்மீகத்தின் எல்லைகளை கடக்க வேண்டும்;
என்று விருப்பம் கொண்டு,
குரு என்ற புறத்தூண்டுதல் இல்லாமல்
சுயமாக முயற்சி செய்து
உன்னத நிலை அடைய வேண்டும் என்று
முயன்று உச்ச நிலை
அடைய முயற்சி மேற்கொள்வர்.

புத்தகங்களில் உள்ள
ஆன்மீக கருத்துக்களைப் படித்து,
புத்தகங்களில் உள்ள
ஆன்மீக செய்திகளைப் படித்து,
புத்தகங்களில் உள்ள
ஆன்மீக முறைகளைப் படித்து,
அதைப் பின்பற்றி
அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள்
நல்லதா? கெட்டதா? என்று கூட
ஆராய்ச்சி செய்யாமல்,
எது நல்லது; எது கெட்டது;
என்று ஆராய்ந்து
யோசித்து முயற்சி செய்யாமல்,
நல்லது என்று
தானாகவே ஒன்றை தேர்ந்தெடுத்து
சுயமாகவே; தானாகவே;
பயிற்சி முறைகளை
பலர் செய்து வருகிறார்கள்.

அவரவர்களுக்கு ஏற்படும் அனுபங்களில்
சிலவற்றை உண்மை என்று நம்பி
நான் கடவுளைப் பார்த்து விட்டேன்;
நான் கடவுளை உணர்ந்து விட்டேன்;
நான் கடவுளை அறிந்து விட்டேன்;
நான் கடவுளை பார்த்து விட்டேன் - என்று
உண்மையாக இல்லாமல்,
போலியானதை உண்மை
என்று நம்பிக்கொண்டு,
எது உண்மை என்று தெரியாமல்
போலியானதை உண்மை
என்று நினைத்துக் கொணடு,
தவறானதை உண்மை
என்று நினைத்துக் கொண்டு,
தவறான மனநிலையில் இருப்பது;
மனக்குழப்பத்தில் இருப்பது;
பைத்தியமான நிலையில்
இருந்து கொண்டு
நல்ல நிலையில் இருப்பதாக
இருப்பது;
தவறானதாக ஆகிவிடும்.
இத்தகைய மனநிலையில்
நாம் இருந்தால்,
இத்தகைய குழப்பான
மனநிலையில் நாம் இருந்தால்,
இத்தகைய தெளிவற்ற
மனநிலையில் நாம் இருந்தால்,
நாம் கடைசிவரை
உண்மையை உணராமல் போய்விடுவோம்;
எது உண்மை என்பதை அறியாமல்
தவறான வழி சென்று விடுவோம்;
எது உண்மை என்று அறியாமல்
நாம் வாழ்க்கையை வீணாக்கி விடுவோம்;
உண்மையான ஆன்மீகம் எது என்று
தெரியாமல் வாழ்க்கையை
வீணடித்து விடுவோம்;
உண்மையான ஆன்மீகம் எது என்று
தெரியாமல் வாழ்க்கையை
கழித்து விடுவோம்;
தறவான ஆன்மீகத்தின் வழி சென்று
வாழ்க்கையில் உண்மையான
ஆன்மீகத்தின் தன்மையை
அறியாமல் விட்டு விடுவோம்;
உண்மையான ஆன்மீகம்
எது தெரியாமலேயே
வாழ்க்கையை கழித்து விடுவோம்;

இது தான் உண்மை என்று  சொல்வதற்கு
சரியா ஆள் தேவை;
சரியான குரு தேவை;
சரியான புறத்தூண்டுதல் தேவை;
நாம் செய்வது உண்மையா? பொய்யா?
நாம் கண்டது நிஜமா? நிழலா?
நாம் பார்ப்பது உண்மையாபொய்யா?
என்பதை
நமக்கு சொல்லி,
நம்மை சரியான பாதையில்
வழிநடத்திச் செல்ல,
புறத்திலிருந்து ஒரு குரு தேவை;
புறத்திலிருந்து ஒரு குரு இல்லையென்றால்
நாம் ஆன்மீகத்தில்
உண்மையை உணர முடியாது;
தவறான வழி சென்று
உண்மையை உணர முடியாமல்,
பொய்யானதை
உண்மை என்று நினைத்து
கடைசி வரை வாழ்க்கையை வீணாக்கி
உண்மையை உணராமல் போய் விடுவோம்;
ஆன்மீகத்தில் எந்த ஒரு
முன்னேற்றத்தையும் காணாமல்
நாம் நம் வாழ்க்கையை வீணடித்து விடுவோம்;
ஆன்மீகம் என்றால் என்ன என்பதை
நம் வாழ்க்கையில் அறியாமல் விட்டு விடுவோம்

ஆன்மீகத்தில் உள்ள
உண்மை நிலைகளை உணர்ந்து
உயர்நிலை அடைய வேண்டுமானால்
நமக்கு புறத்திலிருந்து ஒரு குரு தேவை;
புறத்திலிருந்து நமக்கு
ஒரு குரு இல்லையென்றால்
நம்மால்  ஆன்மீகத்தில்
உயர்நிலை அடைய முடியாது;
உண்மைகளை அறிய முடியாது;

தன்னுள் இருக்கும் திறமைகளை
தன்னுள் இருக்கும் ஆன்மீகத் திறமைகளை
புறத்திலிருந்து
ஒழுங்கு படுத்தவில்லையெனில்
புறத்தூண்டுதல் இல்லையெனில்
தீமையே ஏற்படும்

இதைத் தான்
உயர்திணையில் உள்ள ஒன்றில்
அதன் தன்மை
புறத்தூண்டுதல் இல்லாமல்
தானாகவே வெளிப்படும்போது
கெட்டது உண்டாகும்.
என்பது தெளிவாகிறது.



3.உயர்திணையில் உள்ள ஒன்றில்
 அதன் தன்மை
 புறத்தூண்டுதல் மூலம்
 வெளிப்படுத்தப் படும்போது
 நல்லது உண்டாகும்

ஒருவர் நன்றாக படிக்கிறார்;
நன்றாக கேள்விக்கு நன்றாக பதில் சொல்கிறார்;
ஆனால் தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுகிறார்;
அந்தக் குறையை நிவர்த்தி செய்து,
அவரிடம் உள்ள குறையை நிவர்த்தி செய்து,
அவரிடம் என்ன குறை உள்ளது என்று
கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்து,
தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில்
செய்திட வேண்டும்.
அதற்கு அவருக்கு
ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார்.

தன் குறையை கண்டு பிடித்து,
அதை நிவர்த்தி செய்து,
தேர்வில் எப்படி அதிக மதிப்பெண் பெறுவது,
தேர்வை எப்படி எதிர்கொள்வது,
தேர்வை எப்படி எழுதுவது,
தேர்வை எப்படி சிறப்பாக எழுதுவது
எப்படி தேர்வை எழுதினால்
அதிக அளவில் மதிப்பெண் பெற முடியும்
என்பதை அறிந்து,
அறிவுரை கூறி வழிநடத்திச் செல்ல,
விபரம் அறிந்த,
நன்கு தெறிந்த,
குறைகளை அறிந்து,
நிவர்த்தி செய்து,
அதிக அளவில் மதிப்பெண் பெற
உதவி செய்யும் ஒரு துணை,
அதாவது
ஒரு புறத்தூண்டுதல் வெளியில்
ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார்.

டியூஷன் வைத்து ஆசிரியரிடம் பயின்று,
தன் குறையை நிவர்த்தி செய்து,
தான் படித்த படிப்பிற்கு ஏற்ப,
தன்னுடைய அறிவிற்கு ஏற்ப,
தன்னுடைய உழைப்பிற்கு ஏற்ப,
தன்னுடைய திறமைக்கு ஏற்ப,
தேர்வை எதிர்கொண்டு,
தேர்வை திறம்பட எதிர்கொண்டு,
தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு,
திறம்பட பதில் அளித்து,
தான் படித்த படிப்பை வீணாக்காமல்,
அதிக மதிப்பெண் பெற,
வெளியிலிருந்து ஒரு துணை
அதாவது
ஒரு புறத்தூண்டுதல் தேவைப்படுகிறது.

ஒருவரிடம் திறமை இருந்தாலும்
அது தானாகவே வெளிப்பட
முடியாமல் இருந்தால்,
அதை நம்மால் வெளிப்படுத்த
முடியாமல் இருந்தால்,
வெளியிலிருந்து ஒரு துணை தேவைப்படுகிறது.
அது நல்ல துணையாக இருந்தால்
நம் திறமையை வெளிப்படுத்தக் கூடிய
துணையாக இருந்தால்,
நம்முள் இருக்கும்;
நம்முள் மறைந்து இருக்கும்;
திறமையை வெளிப்படுத்த
துணையாக இருக்கும்
இதுவே புறத்தூண்டுதலால் ஏற்படும் நன்மை

இதைத் தான்
உயர்திணையில் உள்ள ஒன்றில்
அதன் தன்மை
புறத்தூண்டுதல் மூலம்
வெளிப்படுத்தப் படும்போது
நல்லது உண்டாகும்
என்பதை விளக்குகிறது.


4.உயர்திணையில் உள்ள ஒன்றில்
  அதன் தன்மை
  புறத்தூண்டுதல் மூலம்
  வெளிப்படுத்தப் படும்போது
  கெட்டது உண்டாகும்.

சமுதாயத்தில் பெரும்பாலும்
புறத்தூண்டுதலால்
கெட்டதே நடைபெறுகிறது;
நம்முடைய திறமையை
வெளிப்படுத்த விடுவதேயில்லை;
நம்முடைய திறமை என்ன என்று
நாம் அறிந்து கொள்வதற்கு
சமுதாயம் விடுவதில்லை;
நமக்குள் என்ன திறமை
மறைந்து இருக்கிறது
என்பதை அறிந்து கொள்ள
வழி செய்து கொடுப்பதில்லை;
நம்மை அறிந்து கொள்ள
இந்த சமுதாயம் விடுவதில்லை;
நம்மை நாம் அறிந்து கொண்டால்
நமக்குள் மறைந்து இருக்கும் திறமை
என்ன என்பதை
நாம் உணர்ந்து கொண்டோம் என்றால்,
நாம் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டோம்;
அதனால் சமுதாயம்
நமக்குள் மறைந்து இருக்கும் திறமையை
வெளிப்படுத்த அனுமதிப்பதில்லை;
நமக்குள் மறைந்திருக்கும் திறமையை
வெளிக்கொணர முயற்சிப்பதில்லை;
எதுவும் தெரியாமல் இருந்து விட வேண்டும்
மற்றவரை பின்பற்ற வேண்டும்;
மற்றவரைப் போல இருக்க வேண்டும்;
மற்றவர் வழிநடக்க வேண்டும்;
மற்றவர் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் - என்ற
நிலையினை ஏற்படுத்தி வைத்து இருக்கிறது.

நமக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து
நாம் சுயமாக செயல்பட ஆரம்பித்து விட்டோமானால்,
நாம் சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டோமானால்,
நாம் நம் அறிவை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோமானால்,
நாம் நம் சிந்தனையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோமானால்,
சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்க
ஆரம்பித்து விடுவோம்;
சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்க
ஆரம்பித்து விடுவோம்;
சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட
ஆரம்பித்து விடுவோம்;
சமுதாயத்தில் நடக்கும் அட்டூழியங்களை எதிர்த்துக் கேட்க
ஆரம்பித்து விடுவோம்;
சமுதாயத்தில் நடக்கும் துரோகங்களை சுட்டிக் காட்ட
ஆரம்பித்து விடுவோம்;
சமுதாயத்தில் நடக்கும் ஏமாற்று வித்தைகளை
எதிர்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவோம்;
என்ற காரணத்தினால் தான்
நமக்குள் இருக்கும் திறமையை
அறிந்து கொள்ளாமல் இருக்கும் படி
தன் சுயத்தை
தான் அறிந்து கொள்ளாமல்  இருக்கும்படி
இச்சமுதாயம் நம்மை வைத்திருக்கிறது-
அப்படி இருந்தால் தான்
நாம் அடிமையாக இருப்போம்.
இல்லையென்றால் நாம்
அடிமையாக இருக்க மாட்டோம்.

சமுதாயத்தில் பெருபாலானவர்கள்
சொல்லுவார்கள்;
வாழ்க்கை வரலாறு படி,
சுய முன்னேற்ற நூல்களைப் படி,
என்று சொல்லுவார்கள்.
இவை இரண்டையும் படித்து பார்
வாழ்க்கை என்றால் என்ன என்று
புரியும் என்பார்கள்.
அது மட்டுமல்ல,
சித்தர் வாழ்க்கை வரலாறு படியுங்கள்;
ஆன்மீக அறிவு வளரும்;
என்று சொல்லுவார்கள்
சொல்லி இருப்பார்கள்;

சுய முன்னேற்ற நூல்கள்
என்பவைகளை படித்தால்,
நமக்கு ஒரு உணர்வு வரும்;
தன்னம்பிக்கை வரும்;
வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரும்;
என்றெல்லாம் சொல்வார்கள்.
சுயமுன்னேற்ற நூல்களைப் படித்து
எத்தனை பேர் தன்னம்பிக்கைப் பெற்றார்கள்.
ஆனால் சுய முன்னேற்ற நூல்களை
எழுதினவர்கள் தான்
உயர்ந்த நிலை அடைந்தார்கள்;
உயர் நிலை அடைந்தார்கள்;
செல்வந்தர்கள் ஆனார்கள்;

ஒருவருக்கு
ஒரு காலகட்டத்தில்,
ஒரு சூழ்நிலையில்,
ஒரு குறிப்பிட்ட இடத்தில்,
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,
வாழ்க்கையில் ஒருவர் எதிர்கொண்டது
நமக்கு எப்படி வரும்;
அதே மாதிரி வரும்;
அதே காலகட்டம்,
அதே சூழ்நிலை,
அதே நிகழ்வு,
அப்படியே வரும் என்று
சொல்ல முடியாது;
ஆட்கள் மாறுகிறார்கள்;
காலங்கள் மாறுகிறது;
சூழ்நிலைகள் மாறுகிறது;
நேரங்கள் மாறுகிறது;
இடங்கள் மாறுகிறது;
நிகழ்ச்சிகள் மாறுகிறது;
அப்படி இருக்கும் போது
நாம் எப்படி ஒரு நிகழ்வை
எதிர்கொள்வது என்பதை
சுயமுன்னேற்ற நூல்கள்
சொல்ல முடியும்.

இப்படித்தான்
ஒரு நிகழ்வை எதிர்கொள்ள  வேண்டும்  - என்று
சுயமுன்னேற்ற நூலில் சொல்லப்பட்டதை
நாம் அதை அப்படியே படித்து விட்டு
நாம் எப்படி இக்கால கட்டத்தில்
எதிர் கொள்ள முடியும்.

சுயமுன்னேற்ற நூல்கள்
புறத்திலிருந்து
நம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது - என்ற
மாயையை ஏற்படுத்தி வைத்து
இருக்கிறார்கள்.

எந்த சுய முன்னேற்ற நூல்களும்
தற்காலத்தில் புறத்திலிருந்து
தன்னம்பிக்கையை ஊட்டாது.
அகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது;
அகத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்காது;

அதைப்போல வாழ்க்கை வரலாறு
எந்த வாழ்க்கை வரலாறாவது
உண்மையை சொல்லி இருக்கிறது என்றால்
இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நான் உண்மையைத் தான்
என் வாழ்க்கை வரலாறில்
சொல்லி  இருக்கிறேன் - என்று
சொன்னவர் யாரும் இல்லை.

தன் வாழ்க்கையில் நடந்தவைகளை
உண்மையை உண்மை போல்
உண்மையை எழுத முடியாது;
தன் வாழ்க்கையில் நடந்தவைகளை
உள்ளதை உள்ளது போல் எழுத முடியாது;
உண்மைகளை எழுதினால் அது கசக்கும்;

வாழ்க்கை வரலாறை எழுதுபவர்கள்
பெரும்பாலும் சமுதாயத்தில்
உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பார்கள்;
உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;
சமுதாயத்தில் பிறரால்
மதிக்கக் கூடியவராக இருப்பார்கள்;
சமுதாயத்தில் பிறரால்
போற்றப்படக்கூடியவராக இருப்பார்கள்;
சமுதாயத்தில் பிறரால்
வணங்கப்படக் கூடியராக இருப்பார்கள்;
சமுதாயத்தில் பிறரால்
பின்பற்றக் கூடியவராக இருப்பார்கள்;
சமுதாயத்தில் பிறரால்
வாழ்த்தப் படக்கூடியராக இருப்பார்கள்;
அத்தகைய நிலையில் இருப்பவர்கள் தான்
வாழ்க்கை வரலாறு எழுதுவார்கள்.

அத்தகையவர்கள்
தங்கள் வாழ்க்கையில் நடந்த தவறுகளை,
தாங்கள் செய்த தவறுகளை,
சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத ஒழுக்கக் கேடுகளை,
சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத தவறுகளை,
சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத குறைகளை,
சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத கெட்டவைகளை,
எழுத மாட்டார்கள்;
வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள்
தாங்கள் மற்றவர்களுக்கு செய்த
கெட்டவைகளை எழுத மாட்டார்கள்;
மற்றவர்கள் தங்களுக்கு செய்த
கெட்டவைகளை எழுதுவார்களே தவிர,
மற்றவர்கள் தங்களுக்கு செய்த
கெட்டவைகளை சுட்டிக் காட்டுவார்களே தவிர,
அவர்கள் மற்றவர்களுக்கு செய்த
கெட்டவைகளை எழுத மாட்டார்கள்;
அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும்,
அவர்கள் செய்த நல்லவைகளை மட்டும்
வாழ்க்கை வரலாறில் எழுதுவார்கள்;
அவர்கள் மற்றவர்களுக்கு செய்த
கெட்டவைகளையோ,
கெட்ட செயல்களையோ,
தங்கள் வாழ்க்கை வரலாறில்
எழுத மாட்டார்கள்.
அப்படி இருக்கும் போது
அது எப்படி உண்மையான
வாழ்க்கை வரலாறு ஆகும்;
அது எப்படி உண்மை ஆகும்;
பொய்கள் நிறைந்தது
என்று தான் சொல்ல வேண்டும்;

வாழ்க்கை வரலாறு புத்தகங்களை
உண்மையை சொல்லும்
வாழ்க்கை வரலாறு என்று எதுவும் இல்லை;
அப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறை
நாம் படிப்பதால்
நமக்கு என்ன பயன்
ஒரு பயனும் இல்லை;
அதை பின்பற்றுவதால் என்ன பயன்
ஒரு பயனும் இல்லை;
அதைபடிப்பதால் என்ன பயன்
ஒரு பயனும் இல்லை;
பயன் இல்லாத ஒன்றை நாம்
ஏன் படிக்க வேண்டும்;
பின்பற்ற வேண்டும்;

சமுதாயம் வேறு சொல்லி வருகிறது
அவர் உண்மையாக வாழ்ந்தார்
அப்படி வாழ வேண்டும்;
அவர் நேர்மையாக வாழ்ந்தார்
அப்படி வாழ வேண்டும்;
அவர் உழைப்பால் உயர்ந்தார்
அப்படி உழைக்க வேண்டும்;
அவர் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தார்
அப்படி உழைக்க வேண்டும்;
என்று சொல்லி அதை
பின்பற்ற சொல்கிறது.

அது மட்டுமில்லை
சித்தர் வாழ்க்கை வரலாறு என்று வேறு
இப்போது பல இடங்களில் உலா வருகிறது.
ஆன்மீக உலகத்தில்
சித்தர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்கள்;
சித்தர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்;
மகான்கள் வாழ்வில் நடந்த சிறப்புகள்;
என்று பல்வேறு கதைகள் உலா வருகிறது.
இவை எங்கிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரியாது;
யார் சொன்னார்கள் என்று தெரியாது;
யார் எழுதினார்கள் என்று தெரியாது;
ஆனால் சித்தர்கள் வாழ்க்கை
மகான்கள் வாழ்க்கை
என்று பல்வேறு நிலைகளில்
உலா வருகிறது.

சித்தர்கள் வாழ்வில்
நடந்தவைகளை படிப்பதாலோ;
மகான்கள் வாழ்வில்
நடந்தவைகளை படிப்பதாலோ;
மகான்கள் வாழ்வில் நடந்த
அற்புதக்களை படித்து அதிசயிப்பது
என்பவை எல்லாம்
எதற்காக கால விரயம்.
அதை படிப்பதாலோ,
தெரிந்து கொள்வதாலோ,
ஒரு பயனும் இல்லை.

ஆனால் சில நிகழ்வுகள் உண்டு
மகான்கள் வாழ்வில் நடந்த,
சித்தர்கள் வாழ்வில் நடந்த,
சில நிகழ்வுகள் அற்புதங்கள் உண்டு,
இது எதில் கிடைக்கும் என்றால்,
சித்தர்கள் எழுதும் பாடல்களில் இருக்கும்.
சித்தர்கள் எழுதும் பாடல்களில்
தெளிவாக இருக்கும்.

சித்தர்கள் தங்கள் வாழ்க்கையில்
நடந்த நிகழ்வுகள்;
பிற சித்தர்கள் வாழ்வில்
நடந்த அற்புதங்கள்;
ஆகியவற்றை
தங்கள்  பாடல்களில்,
அழகாக பாடல்களாக
எழுதி வைப்பார்கள்
அதை படிக்கலாம்;
ஆதாரபூர்வமான கதைகளை படிக்கலாம்;
மற்றவைகளை படிப்பதால்
ஒரு பயனும் இல்லை.

நாம் சித்தர்களின் வாழ்க்கை வரலாறை,
மகான்களின் வாழ்க்கை வரலாறை,
தெரிந்து கொள்ள முயற்சிப்பதை விட,
அவர்கள் பாடல்களில் உள்ள
மறைபொருள் ரகசியங்களை,
சூட்சும விஷயங்களை,
பரம்பொருள் உண்மைகளை,
உண்மையின் விளக்கங்களை,
முக்தியின் மேன்மைகளை,
ஞானத்தின் வாசல்களை,
சமாதியின் திறவுகோல்களை,
ஜுவசமாதியின் உன்னதங்களை,
அஷ்டகர்ம விளக்கங்களை,
அஷ்டமா சித்தி ரகசியங்களை,
மந்திரங்களின் உயர்வுகளை,
சரம்பார்த்தலின் சிகரங்களை,
பட்சிபார்த்தலின் சிறப்புகளை,
மௌனவித்தையின் உயர்வுகளை,
சோதிடத்தின் மேன்மைகளை,
வாஸ்து சாஸ்திரத்தின் அதிர்வுகளை,
அறிந்து கொள்ள
அவர்கள் பாடல்களில்
எழுதியுள்ள பாடல்களை படித்து,
பின்பற்றி செயல்களை வகுத்து,
முன்னேற்றமடைய முயற்சி செய்ய வேண்டும்.
அதை முயற்சி செய்தால் ஒரு பயன் உண்டு
அதை விடுத்து
சுய முன்னேற்ற நூல்களை படிப்பதாலோ,
மனிதர்களின் வாழ்க்கை வரலாறை,
மகான்களின் வாழ்க்கை வரலாறை,
சித்தர்களின் வாழ்கை வரலாறை,
படிப்பதால் ஒரு பயனும் இல்லை.

மகான்கள்;  சித்தர்கள்;
கடவுளாக கருதப்படுபவர்கள்;
கடவுளாக வணங்கப்படுபவர்கள்;
கடவுளாக போற்றப்படுபவர்கள்;
கடவுளாக நினைக்கப்படுபவர்கள்;
கடவுளாக சிந்திக்கப்படுபவர்கள்;
வாழ்க்கை நமக்கு தேவையில்லை
வாழ்க்கை வரலாறை படிப்பதால்
ஒரு பயனும் இல்லை
அவர்கள் இந்த சமுதாயத்திற்கு
சொல்லிச் சென்ற உயர்ந்த கருத்துக்கள்;
அவர்கள் இந்த சமுதாயத்திற்கு
கொடுத்துச் சென்ற அறிவுப் புதையல்கள்;
அவர்கள் இந்த சமுதயாத்திற்கு
அளித்துச் சென்ற உயர்ந்த வார்த்தைகள்;
அவர்கள் இந்த சமுதாயத்திற்கு
வழங்கிச் சென்ற உண்மைகள்;
அவர்கள் இந்த சமுதாயத்திற்கு
விட்டுச் சென்ற ரகசிய திறவுகோல்கள்;
ஆகியவற்றை பின்பற்றி
நாம் உயர்வடைய
முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய,
சுய முன்னேற்ற நூல்களை படிப்பதாலோ
வாழ்க்கை வரலாறை படிப்பதாலோ
அதை பேசுவதாலோ
ஒரு பயனும் இல்லை.

இவைகளை நாம் படிப்பதால் நாம்
அவைகளை பின்பற்ற தொடங்கி  விடுவோம்;
நமக்குள் இருக்கும் திறமை எவை என்று
நாம் கண்டறிய முயற்சி செய்ய மாட்டோம்;
நமக்குள் என்ன இருக்கிறது என்பதை
அறிய முயற்சி செய்ய மாட்டோம்;
வேறு ஒன்றை நாம் பின்பற்றுவதால்
நாம் நம் சுயத்தை இழந்து விடுவோம்;
நம் சுயம் வெளிப்படாது,
நம் சுயம் மறைந்து,
நாம் யாரை பின்பற்ற முயற்சிக்கிறோமோ
அது மாதிரியாக மாறி விடுவோம்.

ஒருவர் தன்னுள் இருக்கும்
திறமையை உணர்ந்து கொள்ள
முடியவில்லை எனில்,
தன்னுள் மறைந்திருப்பது எது என்று
தெரிந்து கொள்ள முடியவில்லை எனில்,
அவரால் முன்னேற முடியாது;
தனித்தன்மையை வெளிப்படுத்த முடியாது;
இச் சமுதாயத்தில் தனித்தன்மையுடன்
விளங்க முடியாது;

சுயம் என்பது மறைந்து
நாம் மற்ற ஒன்றின் சாயலாக மாறி விடுவோம்;
மற்ற ஒன்றின் நிழலாக மாறி விடுவோம்;
மற்ற ஒன்றின் நகலாக மாறி விடுவோம்;

புறத்தூண்டுதல்களில்
தவறான ஒன்றை நாம் பின்பற்றினால்
நம்முடைய சுயம் அழிந்து விடும்
புறத்தூண்டுதல் தவறானதாக இருந்தால்
நமக்கு எப்போதும் கெடுதலே ஏற்படு
என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும்

இதுதான்
உயர்திணையில் உள்ள ஒன்றில்
அதன் தன்மை
புறத்தூண்டுதல் மூலம்
வெளிப்படுத்தப் படும்போது
கெட்டது உண்டாகும்
என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்.


---------இதன் தொடர்ச்சி
             இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(6)

------------பார்க்கவும், படிக்கவும்

No comments:

Post a Comment