ஜபம்-பதிவு-544
(அறிய
வேண்டியவை-52)
“மனிதன்
இந்த
உலகத்தில்
பிறப்பது
என்பது
அவன்
தன்னுடைய
கர்மாவை
கழிப்பதற்குத்
தான்
மனிதன்
தன்னுடைய
கர்மாவைக்
கழிபபதற்காகத்
தான்
இந்த
உலகத்தில்
பிறக்கிறான்
“
“மனிதனுடைய
வாழ்வில்
துன்பங்கள்
எதிர்ப்பாட்டால்
மனிதன்
செய்த
பாவங்கள்
தன்னுடைய
விளைவை
வெளிப்படுத்துகிறது
என்று
பொருள் “
“மனிதனுடைய
வாழ்வில்
இன்பங்கள்
எதிர்ப்பாட்டால்
மனிதன்
செய்த
புண்ணியங்கள்
தன்னுடைய
விளைவை
வெளிப்படுத்துகிறது
என்று
பொருள்”
“பாவப்பதிவுகளாலும்,
புண்ணியப்
பதிவுகளாலும்
மனிதனுடைய
வாழ்வில்
ஏற்படுகின்ற
இந்த
துன்பங்களும்
இன்பங்களும்
தான்
நரகமும்
சுவர்க்கமும்
நரகம்
என்றும்
சுவர்க்கம்
என்றும்
தனியாக
எதுவும்
இல்லை “
“மனிதன்
பாவங்கள்
அதிகம்
செய்து
இருப்பான்
என்றால்
அதற்கு
எடுக்கும்
பிறவி
நரக
வாழ்க்கையாக
இருக்கும்
இதைத்
தான்
நாம்
நரகம்
என்கிறோம்
“
“மனிதன்
புண்ணியங்கள்
அதிகம்
செய்து
இருப்பான்
என்றால்
அதற்கு
எடுக்கும்
பிறவி
சுவர்க்க
வாழ்க்கையாக
இருக்கும்
இதைத்
தான்
நாம்
சுவர்க்கம்
என்கிறோம்”
“மனிதன்
பாவங்கள்
மற்றும்
புண்ணியங்கள்
செய்து
இருப்பான்
என்றால்
அதற்கு
எடுக்கும்
பிறவி
நரகமும்,
சுவர்க்கமும்
சேர்ந்த
வாழ்க்கையாக
இருக்கும்
இதைத்
தான் நாம்
சுவர்க்கம்
நரகம்
என்கிறோம்
“
“மனிதன்
தன்னுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள
பாவப்புதிவுகளை
மட்டும்
கழித்தால்
முக்தி
என்ற
மோட்சம்
கிடைக்காது;
புண்ணியப்
பதிவுகளையும்
கழிக்க
வேண்டும்
புண்ணியப்
பதிவுகளைக்
கழிக்கவில்லை
என்றால்
அதற்காக
எடுக்கும்
பிறவி
சுவர்க்க
வாழ்க்கையாக
இருக்கும்
ஆகவே
மனிதன்
தன்னுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள
பாவப்பதிவுகளையும்,
புண்ணியப்
பதிவுகளையும்
கழித்தால்
மட்டுமே
மனிதனுக்கு
முக்தி
என்ற
மோட்சம்
கிடைக்கும்
“
“மனிதனுடைய
ஆன்மாவில்
பாவப்பதிவுகளும்
புண்ணியப்
பதிவுகளும்
இருக்கும்
வரை
மனிதனால்
முக்தி
என்ற
மோட்ச
நிலையை
அடைய
முடியாது ;
பிறவி
என்பது
தொடர்ந்து
கொண்டு
தான்
இருக்கும் “
“மனிதன்
தன்னுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள
பாவப்பதிவுகள்
புண்ணியப்
பதிவுகள்
ஆகியவற்றிற்குரிய
விளைவுகளை
தங்களுக்கு
உண்டாகும்
துன்பங்கள்
மூலமாகவும்,
இன்பங்கள்
மூலமாகவும்
அனுபவித்துத்
தான்
கழிக்க
முடியும் ;
அனுபவிக்காமல்
கழிக்க
முடியாது ;”
“மனிதன்
செய்த
செயலுக்குரிய
விளைவானது
அந்த
செயலிலியே
தொக்கி
நிற்கிறது ;
மனிதன்
ஒரு
செயலைச்
செய்து
விட்டு
அதன்
விளைவிலிருந்து
தப்பித்து
விடலாம் ;
என்று
நினைப்பது
தவறானதாகும்
மனிதன்
செய்த
செயலானது
பாவமாக
இருந்தாலும்
புண்ணியமாக
இருந்தாலும்
அதற்குரிய
விளைவிலிருந்து
தப்பிக்க
முடியாது ;
மனிதன்
செய்த
பாவத்திற்கும்,
புண்ணியத்திற்கும்
உரிய
விளைவை
அனுபவித்துத்
தான்
ஆக வேண்டும் “
“மனிதன்
செய்த
செயலுக்குரிய
காலம்,
செயலுக்குரிய
நேரம்,
செயலுக்குரிய
இடம்,
செயலுக்குரிய
சூழ்நிலை,
செயலின்
தன்மை
ஆகியவற்றைப்
பொறுத்து
செய்த
செயலின்
விளைவானது
காலம்,
நேரம், இடம்,
சூழ்நிலை,
வெளிப்பட
வேண்டிய
சந்தர்ப்பம்,
வெளிப்பட
வேண்டியவர்கள்
மூலமாக
வெளிப்பட்டே
தீரும்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
26-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment