June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-55


              ஜபம்-பதிவு-547
         (அறிய வேண்டியவை-55)

“ஆமாம் !
அர்ஜுனன்
தன்னுடைய தேரில்
அனுமனின் உருவம்
பொறித்த
கொடியுடன்  ;
அனுமனின்
துணையுடனும்
சாரதியாக
இருக்கும்
பரமாத்மா
கிருஷ்ணன்
துணையுடனும்
போரிட்டுக்
கொண்டிருந்தான் “

“ஆனால் கர்ணன்
யாருடைய
துணையும்
இல்லாமல்
சாபங்கள்
வாக்குறுதிகள்
ஆகியவற்றைத்
தாங்கிக் கொண்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“அந்தண சாபத்தால்
கர்ணனுடைய
தேர் பூமியில்
அழுந்தியது”

“கர்ணன் சென்ற
தேரின் சக்கரங்கள்
தரையில் அழுந்தி
விட்ட நேரத்தில்
தேரை தரையில்
இருந்து தூக்க
முயற்சி செய்யாமல்
கர்ணனுடன்
ஏற்பட்ட
பிணக்கால்
சல்லியன்
சென்று விட்டதால்
கர்ணன் தேரை
தூக்குவதற்கு
முயற்சி செய்து
கொண்டிருந்தான்;

பரசுராமர்
சாபத்தால்
அஸ்திர மந்திரமும்
கர்ணனுடைய
நினைவுக்கு
வரவில்லை “

கர்ணன் :
“அர்ஜுனா இந்தத்
தேரின்
இடச்சக்கரம்
பூமியில்
அழுந்தியது  ;
நான் தேரை
தரையில் தூக்கி
நிறுத்த முயற்சி
செய்து
கொண்டிருக்கிறேன்  

“ஆயுதங்கள்
இல்லாதவனையும்
ஆயுதங்களைக்
கீழே
வைத்தவனையும்
சரணடைந்தவனையும்
யாசிப்பவனையும்
புறங்காட்டி
ஓடுபவனையும்
பாணங்களால்
அடிப்பது
தர்மமாகாது”

“இப்போது
என் மேல்
பாணங்களை
அடிக்காதே”

(அர்ஜுனனும்
பாணங்களை
அடிக்காமல்
அமைதியாக
இருந்தான்)

கிருஷ்ணன்  :
“அர்ஜுனா
இது தான்
சந்தர்ப்பம்
கர்ணன் மேல்
பாணங்களை விடு”

அர்ஜுனன் :
“ஆனால் அது
தர்மமான
செயல் ஆகாதே”

கிருஷ்ணன் :
“தர்மமான
செயல்களைத்
தான் கர்ணன்
செய்தானா?”

“ஆடத் தெரியாத
தர்மரை அழைத்து
துரியோதனன்
சூதாடியபோது
கர்ணன் அதற்கு
துணை போனானே
அப்போது தர்மம்
எங்கே போனது”

“பதிமூன்று
ஆண்டுகள்
வனவாசம் முடித்து
பாண்டவர்கள்
தங்களுக்கு
உரிய அரசைக்
கேட்ட போது
அதைத் தர முடியாது
என்று துரியோதனன்
சொன்ன போது
கர்ணன் அதற்கு
துணை போனானே 
அப்போது தர்மம்
எங்கே போனது”

“வாரணாவதத்தில்
பாண்டவர்கள்
குடியிருந்த
மாளிகையைத்
கொளுத்தி
பாண்டவர்களைக்
கொல்வதற்கு
துரியோதனன் தீட்டிய
சதிச்செயலுக்கு
கர்ணன்
துணை போனானே
அப்போது தர்மம்
எங்கே போனது 

“மாத விலக்கான
திரௌபதியின்
துகிலை
உரிந்த போது
அந்த அக்கிரமச்
செயலுக்கு கர்ணன்
துணை போனானே
அப்போது தர்மம்
எங்கே போனது”

“பாண்டவர்கள்
அடிமைகள் திரௌபதி
நீ வேறு கணவனை
வரித்துக் கொள்
என்று கேட்டு
அக்கிரமச் செயலுக்கு
கர்ணன்
துணை போனானே
அப்போது தர்மம்
எங்கே போனது”

“கௌரவர்கள்
அவையில்
திரௌபதிக்கு
நேர்ந்த
அவமானத்தை
தடுத்து நிறுத்தாமல்
தானும்
சேர்ந்து கொண்டு
அதர்மத்திற்கு
கர்ணன்
துணை போனானே
அப்போது தர்மம்
எங்கே போனது”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment