ஜபம்-பதிவு-552
(அறிய
வேண்டியவை-60)
கர்ணன்
:
“புண்ணியங்கள்
பதிந்துள்ள
என்னுடைய
ஆன்மாவை
உங்களுக்கு
தர்மமாக
அளிக்கிறேன்
என்னுடைய
ஆன்மாவை
ஏற்றுக்
கொள்ளுங்கள்
“
கிருஷ்ணன்
:
“தர்மமாகப்
பிறந்து
தர்மமாக
வாழ்ந்து
சாகும்
நிலையிலும்
தர்மம்
செய்த கர்ணா”
“இந்த
உலகம்
இருக்கும்
வரைக்கும்
உன்னுடைய
பெயர்
தர்மத்திற்கு
எடுத்துக்
காட்டாக
இருக்கும்”
“தர்மவான்
கர்ணன்
என்று
இந்த
உலகம்
உன்னை
போற்றும்”
“பிறந்தது
முதல்
பாவப்பதிவுகளின்
விளைவுகளால்
அவமானங்களையும்
;
துன்பங்களையும்
;
வேதனைகளையும்
;
கஷ்டங்களையும்
;
துரோகங்களையும்
;
சாபங்களையும்
அனுபவித்ததின்
மூலம்
உன்னுடைய
பாவப்பதிவுகள்
அனைத்தும்
தீர்ந்து
விட்டது “
“புண்ணியப்
பதிவுகள்
எஞ்சியிருந்ததால்
உன்னுடைய
உயிர்
உன்னை
விட்டு
போகவில்லை
புண்ணியப்
பதிவுகளை
நீ
எனக்கு
தர்மம்
செய்ததால்
உன்னுடைய
புண்ணியப்
பதிவுகளும்
கழிந்து
விட்டது “
“உன்னுடைய
ஆன்மா
பாவப்பதிவுளையும்
கழித்து
விட்டது
புண்ணியப்
பதிவுகளையும்
கழித்து
விட்டது”
“பாவப்
பதிவுகளும்
புண்ணியப்
பதிவுகளும்
இல்லாத
ஒரு
நிலையில்
உன்னுடைய
ஆன்மா
தூய்மையாக
இருக்கிறது
“
“உன்னுடைய
ஆன்மா
தன்னுடைய
பயணத்தை
இத்துடன்
முடித்துக்
கொள்கிறது
“
“உன்னுடைய
ஆன்மா
முக்தி
என்ற
மோட்சத்தை
அடைவதற்கு
தயாராகி
விட்டது”
“கர்ணா
நான்
உனக்கு
முக்தியை
அளிக்கிறேன்
“
கர்ணன்
:
“எனக்கு
முக்தியை
அளிப்பதற்கு
நீங்கள்
யார்
உங்களால்
எப்படி
எனக்கு
முக்தியை
அளிக்க முடியும்”
“முக்தியை
நீங்கள்
எனக்கு
அளிப்பவராக
இருந்தால்
நீங்கள்
சாதாரண
மனிதராக
இருக்க
முடியாது
முக்தியை
அளிக்கிறேன்
என்று
சொன்ன
நீங்கள்
யார்”
கிருஷ்ணன்
:
“கர்ணா
நன்றாகப் பார்”
“என்னை
நன்றாகப்
பார் !
நன்றாக
என்னைப்
பார் ! “
(கர்ணன்
பார்க்கிறான்
அந்தணர்
வேடத்தில்
இருந்த
கிருஷ்ணன்
தன்னுடைய
விஸ்வரூப
தரிசனத்தைக்
காட்டுகிறார்)
கர்ணன்
:
(கிருஷ்ணனை
வணங்குகிறான்)
“பரம்பொருளே
அனாதை
ரட்சகா
இந்த
உலகத்தை
ரட்சிக்கும்
பரந்தாமா”
“யாருக்கும்
கிடைக்காத
பாக்கியம்
எனக்குக்
கிடைத்து
இருக்கிறது”
“தாங்கள்
தானா
- இந்த
எளியவனிடம்
யாசகம்
கேட்க
மாறு
வேடத்தில்
வந்தது”
“தாங்கள்
கேட்டிருந்தால்
என்னிடம்
இருக்கும்
எதையும்
இல்லை ;
என்று
சொல்லாமல்
கொடுத்து
இருப்பேனே “
“உன்னுடைய
உருவில்
வந்திருந்தால்
- நான்
தரமாட்டேன்
என்று
சொல்லி
விடுவேன்
என்று
நினைத்து
விட்டாயா”
“எதற்கு
இந்த
மாறுவேடம்
ஏன்
இந்த நாடகம்
கிருஷ்ணா”
“கடவுளான
நீ
மனிதனான
என்னிடம்
தர்மம்
கேட்டு
அதை
நான் உனக்கு
அளித்ததின்
மூலம்
என்னுடைய
மதிப்பை
இந்த
உலகத்தில்
உயர்த்தி
விட்டாய்”
“யாருக்கும்
கிடைக்காத
மிகப்பெரிய
பாக்கியம்
எனக்கு
கிடைக்கும்
படிச்
செய்து
விட்டாய்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
26-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment