திருக்குறள்-
உறங்குவது-பதிவு-1
“”””உறங்கு வதுபோலும்
சாக்காடு உறங்கி
விழிப்பது போலும்
பிறப்பு””””””
---------திருக்குறள்
---------திருவள்ளுவர்
மனிதனுடைய
உடலை மூன்று
பிரிவுகளாகப் பிரிக்கலாம்
ஒன்று :
ஸ்தூல உடல்
இரண்டு :
சூட்சும உடல்
மூன்று :
காரண உடல்
ஸ்தூல உடல்
என்பது
உருவ நிலையைத்
தன்னுள் கொண்டது
சூட்சும உடல்
என்பது
அருவ நிலையைத்
தன்னுள் கொண்டது
காரண உடல்
என்பது
உருவ நிலை
மற்றும்
அருவ நிலை
ஆகிய இரண்டு
நிலைகளையும்
தன்னுள் கொண்டது
அது மட்டுமல்ல
ஸ்தூல உடலும்
சூட்சும உடலும்
தோன்றுவதற்கு
காரணமாக
இருக்கின்ற
உடலானதால் அது
காரண உடல்
எனப்படுகிறது
ஐம்புலன்கள் மூலம்
உணரக்கூடிய
வகையில்
இருப்பது தான்
மனிதனுடைய
ஸ்தூல உடல்
உணர்வால்
உணரக்கூடிய
வகையில்
ஸ்தூல உடலுக்குள்
இருப்பது தான்
சூட்சும உடல்
அதற்கு
அடுத்தாற் போல்
அறிவால் மட்டுமே
உணரக்கூடிய
வகையில்
இருப்பது தான்
காரண உடல்
தாயின் கருப்பையில்
சிறு புள்ளியாக
தோன்றும்
காரண உடலானது
சூட்சும உடலாக
மாற்றமடைந்து
ஸ்தூல உடலுக்குள்
தன்னுடைய சக்தியை
வெளிப்படுத்தும்
வகையில்
சூட்சும உடலானது
இயங்கிக்
கொண்டிருக்கிறது
இவ்வாறு தான்
தாயின் கருப்பையில்
காரண உடல்
சூட்சும உடல்
ஸ்தூல உடல்
ஆகியவை
ஒன்றுக்குள் ஒன்றாக
தோன்றுகிறது
இருப்பு நிலையில்
இருக்கும் கடவுள்
இயக்க நிலையில்
ஒரு பொருளாக
மாற்றமடைந்து
அதற்குள் ஒரு
சக்தியாக எப்படி
இயக்க நிலையில்
இயங்கிக்
கொண்டிருக்கிறாரோ
அதைப்போலத் தான்
காரண உடலானது
ஸ்தூல உடலாக
மாற்றமடைந்து
அதற்குள் ஒரு
சக்தியாக
இயக்க நிலையில்
சூட்சும உடலாக
இயங்கிக்
கொண்டிருக்கிறது
ஸ்தூல உடலுடன்
சூட்சும உடலானது
பிணைக்கப்பட்டிருக்கிறது
ஸ்தூல உடலிலிருந்து
சூட்சும உடலைத்
தனியாகப் பிரித்து
நம்முடைய
விருப்பம் போல்
செயல்பட
வைக்க முடியும்
ஸ்தூல உடலிலிருந்து
சூட்சும
உடலைப்
பிரித்து
எடுத்து
அதைத் தனியாக
வெளியே
செயல்பட
வைப்பது
என்பது அவ்வளவு
எளிதான காரியமல்ல
இந்த செயலை
எல்லோராலும்
செய்ய முடியாது
தவநிலையில்
உயர் நிலை
அடைந்தவர்களால்
மட்டுமே
ஸ்தூல உடலிலிருந்து
சூட்சும
உடலைப்
பிரிக்க
முடியும்
------என்றும்
அன்புடன்
------K.பாலகங்காதரன்
------10-09-2020
//////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment