September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-4

திருக்குறள்-

உறங்குவது-பதிவு-4

 

எளிதாக

சொல்ல வேண்டும்

என்றால்

ஸ்தூல உடலை

விட்டுப் பிரிந்து சென்ற

சூட்சும உடலானது

இந்த பிரபஞ்சம்

முழுவதும்

சுற்றித் திரிந்து

தன்னுடைய

செயல்களை

முடித்து விட்டு

மீண்டும்

ஸ்தூல உடலுக்குள்

சென்று சேருவது

சூக்குமப் பயணம்

எனப்படும்

 

சூக்குமப் பயணம்

செய்வதால்

கிடைக்கும்

பலன்களையும்

மதிப்புகளையும்

மகிமைகளையும்

வார்த்தைகளில்

எழுதிட முடியாது

அதன் பலன்களைக்

கணக்கிட முடியாது

என்றாலும்

ஒரு சில

முக்கியமான

மகிமைகளை

நாம் தெரிந்து

கொள்ள வேண்டியது

இன்றியமையாத

ஒன்றாகும்

 

(1) சூக்குமப் பயணம்

செய்பவரின் ஆன்மா

பிற ஆன்மாக்களுடன்

தொடர்பு கொள்ளும்

தன்மையைப் பெறுகிறது

 

(2) உலகியலில் தனக்கு

தேவையானவற்றை

நிறைவேற்றிக்

கொள்ளும்

ஒரு ஆயுதமாக

சூக்குமப் பயணம்

இருக்கிறது

 

(3) அருளியலில்

உயர்வான

நிலைகளை

அடையும் ஒரு

திறவு கோலாக

சூக்குமப் பயணம்

இருக்கிறது

 

(4) சூக்குமப் பயணத்தின்

மூலம்

பிரபஞ்ச ரகசியங்களை

அறிந்து கொள்ளும்

நிலையினை

பெற முடிகிறது

 

(5) நம்முடைய

ஆன்மாவானது

எங்கும்

எந்த இடத்திற்கும்

சென்று வரும்

தன்மையினை

சூக்குமப் பயணம்

செய்வதால்

பெறுகிறது

 

(6 )ஞானத்தின்

திறவு கோல்கள்

அனைத்தையும்

சூக்குமப் பயணம்

செய்வதின் மூலம்

பெற முடிகிறது

 

ஸ்தூல உடலுடன்

சூட்சும உடலானது

மெல்லிய

கயிறு மூலம்

பிணைக்கப்பட்டிருக்கும்

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலானது

பிரிந்து இந்த

பிரபஞ்சத்தில் உள்ள

எந்த ஒரு

இடத்திற்கு சென்றாலும்

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுடன்

எப்போதும் தொடர்பில்

இருந்து கொண்டு

இருப்பதற்கு

இந்த மெல்லிய

கயிறு தான் காரணம்

 

ஸ்தூல உடலையும்

சூட்சும உடலையும்

பிணைத்து இருக்கும்

இந்த கயிறானது

அறுந்து விட்டால்

ஸ்தூல உடலுக்கும்

சூட்சும உடலுக்கும்

இடையே உள்ள

தொடர்பானது

துண்டிக்கப்பட்டு விடும்

 

ஸ்தூல உடலை விட்டு

சூட்சும உடலானது

பிரிந்து வெளியே

சுற்றிக் கொண்டு

இருக்கும் போது

ஸ்தூல உடலையும்

சூட்சும உடலையும்

பிணைத்து கொண்டிருக்கும்

மெல்லிய கயிறானது

அறுந்து இரண்டிற்கும்

உள்ள தொடர்பானது

துண்டிக்கப்பட்டு

விட்டால்

சூட்சும உடலானது

மீண்டும்

ஸ்தூல உடலுடன்

சென்று சேரவே

முடியாது.

 

எனவே,

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்று

இந்த பிரபஞ்சத்தில்

சுற்றித் திரிந்து

தன்னுடைய

செயல்களைச்

செயல் படுத்திக்

கொண்டிருக்கும்

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுடன்

கொண்டிருக்கும்

தொடர்பானது

அறுந்து விடாமல்

பார்த்துக் கொண்டால்

மட்டுமே

சூக்குமப் பயணம்

என்பது நிகழும்

இல்லை என்றால்

மரணம் என்பது

தான் நிகழும்

என்பதை உணர்ந்து

சூக்குமப் பயணத்தை

செயல்படுத்த

வேண்டும்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment