திருக்குறள்-
உறங்குவது-பதிவு-5
சூக்குமப் பயணம்
என்பது நாம்
விழிப்புணர்வு
பெற்ற நிலையில்
நம்முடைய
ஸ்தூல உடலிலிருந்து
நம்முடைய
சூட்சும உடலைப்
பிரித்து வெளியே
செல்ல வைப்பது
ஆகும்
(b) கூடு விட்டு
கூடு பாய்தல்
கூடு விட்டு
கூடு பாய்தல்
என்பது
சூக்குமப் பயணத்திற்கு
முற்றிலும்
வேறுபட்டது ஆகும்
சூக்குமப் பயணம்
மற்றும்
கூடு விட்டு
கூடு பாய்தல்
ஆகிய இரண்டு
செயல்களும்
ஸ்தூல உடலிலிருந்து
சூட்சும உடலைப்
பிரித்து செய்யப்படுவது
என்றாலும்
இரண்டுக்கும்
மிகப்பெரிய
வேறுபாடு ஒன்று
இருக்கிறது
சூக்குமப்பயணம்
என்பது
ஸ்தூல உடலிலிருந்து
சூட்சும உடலைப்
பிரித்து இந்த
பிரபஞ்சத்தில்
தேவைப்படும்
இடத்திற்கு சென்று
தேவைப்படும்
நபர்களைச் சந்தித்து
தேவைப்படுபவர்களிடத்தில்
தன்னுடைய
எண்ணங்களைப்
பரிமாற்றம் செய்து
கொண்டு அதை
நிறைவேற்றுவதற்கான
செயல்களைச் செய்து
கொள்வது ஆகும்
ஆனால் கூடு விட்டு
கூடு பாய்வது
என்பது
முதல்
ஸ்தூல உடலிலிருந்து
பிரியும்
சூட்சும உடலானது
இறந்த இரண்டாவது
ஸ்தூல உடலுக்குள்
புகுந்து கொண்டு
தன்னுடைய
கடமையை
முடித்து விட்டு
மீண்டும்
முதல்
ஸ்தூல உடலுக்குள்
புகுந்து கொண்டு
இயங்குவது ஆகும்
சூக்குமப் பயணம்
செய்வதற்கு
வெளியே ஒரு
ஊடகம்
தேவையில்லை
ஆனால்
கூடு விட்டு
கூடு பாய்வதற்கு
வெளியே ஒரு
ஊடகம்
கண்டிப்பாகத் தேவை
அதாவது
கூடு விட்டு
கூடு பாய்வதற்கு
இறந்த உடல் ஒன்று
கண்டிப்பாகத் தேவை
சூக்குமப் பயணத்தை
ஆன்மீகத்தில்
ஒரு குறிப்பிட்ட
உயர்வான நிலையை
அடைந்தவர்கள்
செய்யலாம்
ஆனால்
கூடு விட்டு
கூடு பாய்வது
என்பது அனைவராலும்
செய்ய முடியாது
கூடு விட்டு
கூடு பாய்தல்
என்ற கலையை
பஞ்ச பூதங்களை
யார் தன்னுடைய
வசமாகி
வைத்திருக்கிறாரோ
அவரால் மட்டுமே
செய்ய முடியும்
சமாதி என்ற
நிலையைக் கடந்து
ஜீவசமாதி
என்ற நிலையை
அடையக்கூடிய
தகுதியை யார்
பெற்றிருக்கிறாரோ
அவரால் மட்டுமே
செய்ய முடியும்
அஷ்டமா சித்தி
என்ற கலை
யாருக்கு வசமாகி
இருக்கிறதோ
அவரால் மட்டுமே
செய்ய முடியும்
முக்தி என்ற
நிலையை
சுவைப்பதற்காக யார்
காத்துக்
கொண்டிருக்கிறாரோ
அவரால் மட்டுமே
செய்ய முடியும்
இத்தகைய
சிறப்பு மிக்க
கூடு விட்டு
கூடு பாயும் கலை
ஆன்மீகத்தில்
உயர் நிலை
அடைந்தவர்கள்
ஒரு சிலருக்கு
மட்டுமே
வசப்பட்டாலும்
அந்த ஒரு சிலரும்
கூடு விட்டு
கூடு பாயும்
கலையை
எல்லா
சூழ்நிலைகளிலும்
பயன் படுத்துவது
இல்லை
தவிர்க்க முடியாத
சூழ்நிலைகள்
ஏற்படும் போது
மட்டுமே பயன்
படுத்துகின்றனர்.
------என்றும்
அன்புடன்
------K.பாலகங்காதரன்
------10-09-2020
//////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment