March 18, 2021

ARAVAN KALABALI BOOK LAUNCHING-4

 

பதிவு-4

அரவான் களப்பலி

 

என்னுடைய புத்தகம்

விற்பனையாகிறது

அனைவரும்

வாங்கிச்

செல்கின்றனர் என்ற

காரணத்தினால்

அந்த புத்தக

காட்சியில் இருக்கும்

கடைகளில்

இருக்கும் பல

பதிப்பகங்கள்

என்னுடைய

புத்தகத்தை வாங்கி

சென்று விற்றனர்

 

பிரசித்தி பெற்ற

பதிப்பகங்கள்

என்னை சந்தித்து

உங்களுடைய

எழுத்துக்கள்

வித்தியாசமாக

இருக்கிறது

யாரும் தொடாத

கதைகளை

எழுதுகிறீர்கள்

வித்தியாசமான

கதையை தேர்வு

செய்து எழுதி

இருக்கிறீர்கள்

உங்களுடைய

அடுத்த கதைகளை

நாங்களே பதிப்பித்து

விற்பனை செய்கிறோம்

என்று பல்வேறு

பதிப்பகங்கள்

என்னை அணுகினர்

 

எழுத்தாளர் என்று இந்த

சமுதாயம் என்னை

ஏற்றுக் கொண்டது

புதிய எழுத்தாளர்

என்று இல்லாமல்

அனைவரும் என்னுடன்

புகைப்படம் எடுக்க

விரும்பியது

புத்தகத்தில் என்னிடம்

கையெழுத்து வாங்கியது

அடுத்து என்னுடைய

புத்தகங்களை

பதிப்பகங்கள் மூலம்

வெளியீடு செய்ய

என்னிடம் அனுமதி

கேட்டது ஆகிய

அனைத்தும் - அந்த

புத்தக காட்சியில்

நடைபெற்றது

 

நான் முயற்சி

எடுக்கவில்லைஎன்றால்

என் எழுத்துக்கள்

மக்களிடம் எந்த

அளவுக்கு சென்று

சேர்ந்திருக்கிறது

என்பதை என்னால்

அறிந்து கொள்ள

முடியாமலேயே

போய் இருக்கும்

என்னுடைய

எழுத்துக்கள்

மக்களை எந்த

அளவுக்கு சென்று

சேர்ந்திருக்கிறது

என்பதைத் தெரிந்து

கொள்வதற்காகத் தான்

நான்

புத்தகக் காட்சியில்

கடை எடுத்தேன்

 

எனக்கு எதிராக

செயல்படுத்தப்பட்ட

எதிர்ப்புகளைக்

கண்டு நான்

பயந்து இருந்தால்

வெற்றி கிடைக்குமா

அல்லது

தோல்வி கிடைக்குமா

என்று நான்

யோசித்துக் கொண்டு

இருந்திருந்தால்

பணத்தை போடுவதால்

எனக்கு நஷ்டம்

ஏற்பட்டு விடுமா

என்று நான்

தயங்கிக் கொண்டு

இருந்திருந்தால்

என்னால்

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

வெளியிட்டிருக்கவே

முடியாது

 

ஒரு துறையில்

இருந்து

மற்றொரு துறைக்குள்

நுழைவது

அவ்வளவு எளிதல்ல

அதுவும் மிகப்பெரிய

ஜாம்பவான்கள்

நிரம்பிய

எழுத்துத் துறையில்

நுழைவது என்பது

அவ்வளவு எளிதல்ல

எந்தவித

பின்புலமும் இல்லாமல்

யாருடைய

உதவியும் இல்லாமல்

தனி ஒருவனாக

என்னுடைய

முயற்சியிலேயே

என்னுடைய

பணத்தைக் கொண்டே

நான் புத்தகம்

வெளியிட்டு

எழுத்துத் துறையில்

நுழைந்து இருக்கிறேன்

எழுத்தாளர்

என்ற நிலையில்

நுழைந்து இருக்கிறேன்

எழுத்துத் துறையும்

என்னை எழுத்தாளராக

அங்கீகாரம் அளித்து

இருக்கிறது

 

எதிர்ப்புகளைப் பற்றிக்

கவலைப்படாமல்

இழப்புகளைப் பற்றி

நினைக்காமல்

நான் துணிந்து

இறங்கியதால் தான்

இந்த உலகம்

என்னை எழுத்தாளராக

அங்கீகாரம்

செய்து இருக்கிறது

என்னுடைய

எழுத்துக்கள்

மக்களை சென்று

சேர்ந்து இருக்கிறது

அரவான் களப்பலி

என்ற புத்தக்ம்

அனைவருடைய

பாராட்டையும்

பெற்று இருக்கிறது

 

வாழ்வா சாவா

என்பதைப் பற்றிக்

கவலைப்படாமல்

யார் ஒருவர்

துணிந்து களத்தில்

இறங்குகிறாரோ

அவரால் மட்டுமே

எந்த ஒரு செயலிலும்

வெற்றி பெற முடியும்

என்பதைத்  தெரிந்து

கொண்டேன்

 

என் வாழ்க்கை எனக்கு

பாடம் மட்டுமல்ல

படிப்பினையும் கூட

 

நன்றி

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

-----18-03-2021

////////////////////////////////////

ARAVAN KALABALI BOOK LAUNCHING-3

 

பதிவு-3

அரவான் களப்பலி

 

44 வது புத்தகக்

காட்சியில்

அரவான் களப்பலி

என்ற தலைப்பைக்

கொண்ட

எண்.471 வது கடையில்

நான் எழுதிய

முதல் புத்தகம்

மற்றும்

ஒரே புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

மக்களின்

பார்வைக்காகவும்

விற்பனைக்காகவும்

காட்சி படுத்த

முடிவு செய்தேன்

 

பலர் என்னிடம்

சொன்னார்கள்

ஒரு புத்தகத்திற்கு

எதற்கு இவ்வளவு

பணம் செலவு

செய்து கடை

வைக்க வேண்டும்

இவ்வளவு செலவு

செய்து தான்

புத்தகக் காட்சியில்

கடை வைக்க

வேண்டுமா

இவ்வளவு செலவு

தேவையா என்று

கேட்டனர் சிலர்

 

அது மட்டுமல்ல

அந்த புத்தக

காட்சியில் உள்ள  

பதிப்பகங்களில்

நம்முடைய

புத்தகத்தை

அளித்து அந்த

பதிப்பகத்தாரையே

நம்முடைய

புத்தகங்களை

விற்பனை செய்து

கொடுக்க சொல்லலாம்

என்றனர்

என்னைச் சுற்றி

இருந்த

நிறைய பேர்

புத்தகக் காட்சியில்

கடை எடுக்க

வேண்டாம்

எதற்கு வீண்

செலவு என்றார்கள்

 

,இவைகள் எதையும்

நான் கவனத்தில்

கொள்ளாமல்- நான்

கடை எடுத்தேன்

நான் கடை

எடுத்ததற்கான

நோக்கத்தை

அவர்களிடம்

சொன்னேன்

அந்த காரணம்

இது தான்

 

"நான் புத்தகக்

காட்சியில்

புத்தகத்தை

வைத்தற்கான

முக்கியமான

நோக்கம்

புத்தகத்தை

விற்பனை

செய்வதற்காக

அல்ல

அது என்னுடைய

முக்கியமான

நோக்கமும்

இல்லை - நான்

புத்தக காட்சியில்

புத்தகத்தை

வைத்தது

பாலகங்காதரன்

என்ற ஒரு

எழுத்தாளர்

எழுத்துலகுக்கு

புதிதாக வந்து

இருக்கிறார் - அவர்

தன்னுடைய

முதல் புத்தகமாக

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

எழுதி இருக்கிறார்

வேறு ஒரு

துறையில் இருந்தவர்

முதன் முறையாக

எழுத்தாளராக

உருவாகி எழுத்துத்

துறைக்கு வந்து

இருக்கிறார்

என்பதை இந்த

உலகம் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காகத் தான் "

 

என்றேன்.

 

நான் சொன்னது

போலவே

புத்தகக் காட்சிக்கு

வந்தவர்கள்

என்னை சந்தித்தனர்

என்னுடன்

கலந்துரையாடினர்

நான் எழுதிய

புத்தகத்தைப் பற்றி

மதிப்பீடு செய்தனர்

என்னை

எழுத்தாளராக மதித்து

வந்திருந்தவர்களில்

பெரும்பாலானவர்கள்

என்னுடன்

புகைப்படம் எடுக்க

விருப்பம் கொண்டனர்

அவர்களுடைய

விருப்பத்திற்கு

இசைந்த நான்

அவர்களுடன் இணைந்து

புகைப்படம் எடுத்துக்

கொண்டேன் - மேலும்

என்னுடைய புத்தகத்தில்

கை‘யொப்பம் போட்டுத்

கொடுக்க வேண்டும்

என்று கேட்டுக்

கொண்டதால்

புத்தகத்தில்

கையெழுத்து போட்டுக்

கொடுத்தேன்.

 

மிக உயர்ந்த

நிலையில் இருக்கும்

எழுத்தாளர்கள்

பேச்சாளர்கள்

சமூக அங்கீகாரம்

பெற்றவர்கள்

உயர் அலுவலர்கள்

படித்தவர்கள்

பாமர மக்கள்

உட்பட பல்வேறு

நிலையில் உள்ளவர்கள்

அனைவரும் என்னை

சந்தித்த போது - நான்

அவர்களுடன்

புகைப்படம் எடுப்பதில்

பெருமை அடைந்தேன்

 

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

-----18-03-2021

////////////////////////////////////

ARAVAN KALABALI BOOK LAUNCHING-2

 

பதிவு-2

அரவான் களப்பலி

 

வெற்றி

கிடைக்குமா

தோல்வி

கிடைக்குமா என்று

யோசனையில்

மூழ்கிக் கொண்டு

சிந்தித்துக்

கொண்டு

எந்த ஒரு

செயலையும்

செய்யாமல்

இருப்பவர்கள்

எந்த ஒரு

சாதனையையும்

படைக்க

இயலாது

 

முதலில்

களத்தில் இறங்கி

செயல்பட வேண்டும்

அப்போது தான்

வெற்றி அல்லது

தோல்வி என்பது

கிடைக்கும்

 

எந்த ஒரு

செயலையும்

செய்யாமல்

அமைதியாக

இருப்பதால் ஒரு

பயனும் இல்லை

 

அரவான்

வாழ்க்கை

வரலாற்றை 

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

நான் என்னுடைய

முதல் புத்தகமாக

எழுதி வெளியிட

முற்பட்ட போது

உனக்கு

எதற்கு இந்த

வேண்டாத வேலை

என்று இழிவு

படுத்தினர் சிலர்

புத்தகம்

போடுவதற்கு

அதிக அளவு

பணம் செலவாகும்

நீ புத்தகம்

போட்டால்

கடன்காரனாக

ரோட்டுக்கு தான்

வர வேண்டியது

இருக்கும் என்று

ஏளனம் 

செய்தனர் சிலர்

நீ புத்தகத்தை

வெளியிடக்கூடாது

என்று தடை

போட்டனர் சிலர்

நீ புத்தகத்தை

வெளியிட்டால்

பல்வேறு

பிரச்சினைகளை

எதிர் கொள்ள

வேண்டி வரும்

என்று

பயமுறுத்தினர் சிலர்

 

ஆனால் நான்

எதை பற்றியும்

கவலைப்

படவில்லை

ஏளனங்கள்

இழிவுகள்

தடைகள் ஆகிய

எதைப்பற்றியும்

கவலைப்படவில்லை

 

எந்தவித பின்புலமும்

இல்லாமல்

தனி ஒருவனாக

புத்தகத்தை

வெளியிட்டு

எழுத்துலகில்

நுழைவதற்கு

முற்பட்ட நான்

அவர்கள்

அனைவருக்கும்

சொன்னது இது தான்

 

""என்னுடைய

எழுத்துக்களின்

மேல் எனக்கு

நம்பிக்கை

இருக்கிறது !

நானே என்னுடைய

எழுத்துக்களை

நம்பவில்லை

என்றால்

வேறு யார்

என்னுடைய

எழுத்துக்களை

நம்புவார்கள் !

நான் என்னுடைய

புத்தகத்தை

கண்டிப்பாக

வெளியிட்டே

தீருவேன்

யாரும் நான்

புத்தகத்தை

வெளிடுவதை

தடுக்க முடியாது

நான் புத்தகத்தை

வெளியிடுவதை

தடுக்க வேண்டும்

என்றால் அது

நான் செத்தால்

மட்டும் தான்

முடியும் "

 

என்று  

10-01-2021-ம்

தேதி பயங்கரமான

எதிர்ப்புகளுக்கு

இடையில்

நான் என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

வெளியிட்டேன்

 

நான் புத்தகத்தை

வெளியிட்டதுடன்

நிறுத்திக்

கொள்வேன் என்று

நினைத்தது

இந்த உலகம்

ஆனால்

நான் அத்துடன்

என்னுடைய

பணியை நிறுத்திக்

கொள்ளவில்லை

 

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

-----18-03-2021

////////////////////////////////////

ARAVAN KALABALI BOOK LAUNCHING-1

 

பதிவு-1

அரவான் களப்பலி

 

வெற்றி அல்லது

வீர மரணம்

இரண்டில் ஒன்று

களத்தில்

இறங்கினால்

மட்டுமே

கிடைக்கும்

 

அப்படி நாம்

களத்தில்

இறங்கும் போது

எதிரிகள் வடிவில்

எதிர்ப்புகள்

வரத்தான்

செய்யும்

 

எதிர்ப்புகளைக்

கண்டு நாம்

பயந்து

ஓடி ஒளிந்து

கொண்டால்

நம்மால்

எந்த ஒரு

செயலையும்

செய்ய முடியாது

ஏனென்றால்

நாம் என்ன

ஆயுதம் எடுக்க

வேண்டும்

என்பதை

நம்முடைய

எதிரிகள் தான்

தீர்மானம்

செய்கிறார்கள்

 

நம்முடைய

வாழ்க்கையின்

ஒவ்வோரு

கால கட்டத்திலும்

எதிர்ப்படும்

எதிர்ப்புகளைக்

கண்டு பயந்து

ஓடி ஒளிந்து

கொண்டால்

நம்மால்

சாதனைகளை

படைக்கவே

இயலாது

 

சாதனைகளை

படைக்க வேண்டும்

என்றால்

நம்முடைய

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

எதிரிகளின்

எதிர்ப்புகளை

எதிர்த்து

முறியடித்து

வெற்றி

பெற்றுத் தான்

ஆக வேண்டும்

இல்லையெனில்

நம்மால்

சாதனைகளை

படைக்கவே

இயலாது

 

எதிரிகள் இல்லாத

வாழ்க்கை

துடுப்பு இல்லாத

படகு மாதிரி

இலக்கு இல்லாமல்

அலைந்து

கொண்டிருக்கும்

 

ஆற்றின்

ஓட்டத்தில் செல்லும்

எந்த ஒரு

பொருளும்

எந்த ஒரு சிறப்பான

மதிப்பையும்

பெறுவதில்லை

ஆனால் ஆற்றின்

ஓட்டத்திற்கு

எதிர்த்திசையில்

செல்லும்

சஞ்சீவி மூலிகை

இறந்தவரையும்

உயிர்ப்பிக்கும்

ஆற்றலை

பெற்றிருப்பது

அதனுடைய

சிறப்பாகும்

 

வாழ்க்கையில்

எதிர்ப்படும்

எதிரிகளின்

எதிர்ப்புகளுக்கு

அஞ்சாமல்

எதிர் நீச்சல் அடித்து

எதிர்ப்பிலேயே

வாழும் போது தான்

சாதனைகள்

படைக்கப்

பட்டிருப்பதாக

வரலாறானது

தனது

வரலாற்றுப்

பதிவேட்டில்

பதிவு செய்து

வைத்திருக்கிறது

 

வெற்றி

பெற்றவர்களின்

சிறப்புகளை பதிவு

செய்திருக்கும்

வரலாறு தான்

வெற்றி

பெற்றவர்களிடம்

தோல்வி

அடைந்தவர்களின்

நிலையையும்

பதிவு செய்து

வைத்திருக்கிறது

 

வெற்றி பெறுவது

தோல்வி அடைவது

என்பது

முக்கியமில்லை

களத்தில் இறங்கி

போராடுவது தான்

முக்கியம்

களத்தில் இறங்கி

போராடாமல்

வெற்றியும்

தொல்வியும்

கிடைப்பதில்லை

முதலில்

களத்தில் இறங்கி

போராடுவது தான்

முக்கியம்

வெற்றி  தோல்வி

எல்லாம்

பிறகு தான்

 

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்.k.பாலகங்காதரன்

 

-----18-03-2021

////////////////////////////////////