பதிவு-3
அரவான் களப்பலி
44 வது புத்தகக்
காட்சியில்
அரவான் களப்பலி
என்ற தலைப்பைக்
கொண்ட
எண்.471 வது
கடையில்
நான் எழுதிய
முதல் புத்தகம்
மற்றும்
ஒரே புத்தகமான
அரவான் களப்பலி
என்ற புத்தகத்தை
மக்களின்
பார்வைக்காகவும்
விற்பனைக்காகவும்
காட்சி படுத்த
முடிவு செய்தேன்
பலர் என்னிடம்
சொன்னார்கள்
ஒரு புத்தகத்திற்கு
எதற்கு இவ்வளவு
பணம் செலவு
செய்து கடை
வைக்க வேண்டும்
இவ்வளவு செலவு
செய்து தான்
புத்தகக் காட்சியில்
கடை வைக்க
வேண்டுமா
இவ்வளவு செலவு
தேவையா என்று
கேட்டனர் சிலர்
அது மட்டுமல்ல
அந்த புத்தக
காட்சியில்
உள்ள
பதிப்பகங்களில்
நம்முடைய
புத்தகத்தை
அளித்து அந்த
பதிப்பகத்தாரையே
நம்முடைய
புத்தகங்களை
விற்பனை செய்து
கொடுக்க சொல்லலாம்
என்றனர்
என்னைச் சுற்றி
இருந்த
நிறைய பேர்
புத்தகக் காட்சியில்
கடை எடுக்க
வேண்டாம்
எதற்கு வீண்
செலவு என்றார்கள்
,இவைகள் எதையும்
நான் கவனத்தில்
கொள்ளாமல்-
நான்
கடை எடுத்தேன்
நான் கடை
எடுத்ததற்கான
நோக்கத்தை
அவர்களிடம்
சொன்னேன்
அந்த காரணம்
இது தான்
"நான் புத்தகக்
காட்சியில்
புத்தகத்தை
வைத்தற்கான
முக்கியமான
நோக்கம்
புத்தகத்தை
விற்பனை
செய்வதற்காக
அல்ல
அது என்னுடைய
முக்கியமான
நோக்கமும்
இல்லை - நான்
புத்தக காட்சியில்
புத்தகத்தை
வைத்தது
பாலகங்காதரன்
என்ற ஒரு
எழுத்தாளர்
எழுத்துலகுக்கு
புதிதாக வந்து
இருக்கிறார் - அவர்
தன்னுடைய
முதல் புத்தகமாக
அரவான் களப்பலி
என்ற புத்தகத்தை
எழுதி இருக்கிறார்
வேறு ஒரு
துறையில் இருந்தவர்
முதன் முறையாக
எழுத்தாளராக
உருவாகி எழுத்துத்
துறைக்கு வந்து
இருக்கிறார்
என்பதை இந்த
உலகம் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான் "
என்றேன்.
நான் சொன்னது
போலவே
புத்தகக் காட்சிக்கு
வந்தவர்கள்
என்னை சந்தித்தனர்
என்னுடன்
கலந்துரையாடினர்
நான் எழுதிய
புத்தகத்தைப்
பற்றி
மதிப்பீடு செய்தனர்
என்னை
எழுத்தாளராக
மதித்து
வந்திருந்தவர்களில்
பெரும்பாலானவர்கள்
என்னுடன்
புகைப்படம்
எடுக்க
விருப்பம் கொண்டனர்
அவர்களுடைய
விருப்பத்திற்கு
இசைந்த நான்
அவர்களுடன்
இணைந்து
புகைப்படம்
எடுத்துக்
கொண்டேன் -
மேலும்
என்னுடைய புத்தகத்தில்
கை‘யொப்பம்
போட்டுத்
கொடுக்க வேண்டும்
என்று கேட்டுக்
கொண்டதால்
புத்தகத்தில்
கையெழுத்து
போட்டுக்
கொடுத்தேன்.
மிக உயர்ந்த
நிலையில் இருக்கும்
எழுத்தாளர்கள்
பேச்சாளர்கள்
சமூக அங்கீகாரம்
பெற்றவர்கள்
உயர் அலுவலர்கள்
படித்தவர்கள்
பாமர மக்கள்
உட்பட பல்வேறு
நிலையில் உள்ளவர்கள்
அனைவரும் என்னை
சந்தித்த போது
- நான்
அவர்களுடன்
புகைப்படம்
எடுப்பதில்
பெருமை அடைந்தேன்
------என்றும்
அன்புடன்
------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்
-----18-03-2021
////////////////////////////////////
No comments:
Post a Comment