பதிவு-1
அரவான் களப்பலி
வெற்றி அல்லது
வீர மரணம்
இரண்டில் ஒன்று
களத்தில்
இறங்கினால்
மட்டுமே
கிடைக்கும்
அப்படி நாம்
களத்தில்
இறங்கும் போது
எதிரிகள் வடிவில்
எதிர்ப்புகள்
வரத்தான்
செய்யும்
எதிர்ப்புகளைக்
கண்டு நாம்
பயந்து
ஓடி ஒளிந்து
கொண்டால்
நம்மால்
எந்த ஒரு
செயலையும்
செய்ய முடியாது
ஏனென்றால்
நாம் என்ன
ஆயுதம் எடுக்க
வேண்டும்
என்பதை
நம்முடைய
எதிரிகள் தான்
தீர்மானம்
செய்கிறார்கள்
நம்முடைய
வாழ்க்கையின்
ஒவ்வோரு
கால கட்டத்திலும்
எதிர்ப்படும்
எதிர்ப்புகளைக்
கண்டு பயந்து
ஓடி ஒளிந்து
கொண்டால்
நம்மால்
சாதனைகளை
படைக்கவே
இயலாது
சாதனைகளை
படைக்க வேண்டும்
என்றால்
நம்முடைய
வாழ்க்கையில்
எதிர்ப்படும்
எதிரிகளின்
எதிர்ப்புகளை
எதிர்த்து
முறியடித்து
வெற்றி
பெற்றுத் தான்
ஆக வேண்டும்
இல்லையெனில்
நம்மால்
சாதனைகளை
படைக்கவே
இயலாது
எதிரிகள் இல்லாத
வாழ்க்கை
துடுப்பு இல்லாத
படகு மாதிரி
இலக்கு இல்லாமல்
அலைந்து
கொண்டிருக்கும்
ஆற்றின்
ஓட்டத்தில்
செல்லும்
எந்த ஒரு
பொருளும்
எந்த ஒரு சிறப்பான
மதிப்பையும்
பெறுவதில்லை
ஆனால் ஆற்றின்
ஓட்டத்திற்கு
எதிர்த்திசையில்
செல்லும்
சஞ்சீவி மூலிகை
இறந்தவரையும்
உயிர்ப்பிக்கும்
ஆற்றலை
பெற்றிருப்பது
அதனுடைய
சிறப்பாகும்
வாழ்க்கையில்
எதிர்ப்படும்
எதிரிகளின்
எதிர்ப்புகளுக்கு
அஞ்சாமல்
எதிர் நீச்சல்
அடித்து
எதிர்ப்பிலேயே
வாழும் போது
தான்
சாதனைகள்
படைக்கப்
பட்டிருப்பதாக
வரலாறானது
தனது
வரலாற்றுப்
பதிவேட்டில்
பதிவு செய்து
வைத்திருக்கிறது
வெற்றி
பெற்றவர்களின்
சிறப்புகளை
பதிவு
செய்திருக்கும்
வரலாறு தான்
வெற்றி
பெற்றவர்களிடம்
தோல்வி
அடைந்தவர்களின்
நிலையையும்
பதிவு செய்து
வைத்திருக்கிறது
வெற்றி பெறுவது
தோல்வி அடைவது
என்பது
முக்கியமில்லை
களத்தில் இறங்கி
போராடுவது தான்
முக்கியம்
களத்தில் இறங்கி
போராடாமல்
வெற்றியும்
தொல்வியும்
கிடைப்பதில்லை
முதலில்
களத்தில் இறங்கி
போராடுவது தான்
முக்கியம்
வெற்றி தோல்வி
எல்லாம்
பிறகு தான்
------என்றும்
அன்புடன்
------எழுத்தாளர்.k.பாலகங்காதரன்
-----18-03-2021
////////////////////////////////////
No comments:
Post a Comment