பதிவு-2-ஐந்து
புத்தக வெளியீடு
தலைப்பு :
(2) பழமொழி :
(உண்மை நிலையில்
விளக்கம்)
மனிதன்
இந்த உலகத்தில்
உயிர் வாழ்வதற்கு
காரணமாக இருந்து
மனிதனுடைய
உடலுக்குள்
குடி
கொண்டிருக்கும்
உயிரைக் கூட
மனிதனின்
உடலிலிருந்து
பிரித்து விடலாம்
அங்கிங்கெனாதபடி
பிரபஞ்சம் முழுவதும்
நீக்கமற நிறைந்து
கொண்டிருக்கும்
மனிதன் உயிர்
வாழ்வதற்கு
அத்தியாவசியமான
பிராண சக்தியைக்
கூட
மனிதனுடைய
உடலிலிருந்து
பிரித்து விடலாம்
ஆனால்,
மனிதனின்
வாழ்வியலோடு
என்றும்
தொடர்பு கொண்டு
மனிதனுடன்
பிண்ணிப் பிணைந்து
கொண்டு இருக்கும்
பழமொழியை
பிரித்து
விட முடியாது
இத்தகைய
சிறப்புமிக்க
பழமொழிக்கு
விளக்கங்கள்
அளிப்பதற்கு
பிரபஞ்சத்துடன்
பிணைந்து கொண்டு
பிரிக்க முடியாமல்
ஒன்றுக்குள்
ஒன்றாக
கலந்திருக்கும்
உண்மையானது
பழமொழிக்குள்
மறைந்திருக்கும்
உண்மையை
வெளிக் கொண்டுவர
எனக்கு உறுதுணையாக
இருந்ததால்
- நான்
பழமொழிக்கு
விளக்கங்கள்
எழுதி
இருக்கிறேன்
தலைப்பு :
(3) சித்தர் பாடல்கள் :
(சித்தர் நிலையில்
விளக்கம்)
ஆன்மீகத்தில்
ஆதி முதல்
அந்தம் வரை
உள்ள அனைத்து
உயர்நிலைகளையும்
மந்திரம்
யந்திரம்
தந்திரம்
ஆகியவற்றில்
உள்ள சிறந்த
உயர் நிலைகளையும்
மாந்திரீகத்தில்
உள்ள அனைத்து
சூட்சுமங்களின்
உயர் நிலைகளையும்
எழுதியவைகளை
செயல்படுத்திப்
பார்த்தால்
உண்மை தெரியும்
என்ற சிறப்பைத்
தன்னுள் கொண்ட
சாஸ்திரங்களில்
ஒன்றான
சோதிட சாஸ்திரத்தின்
உயர்நிலைகளையும்
நம்முடைய
மருத்துவத்தை
கவர்ந்து
சென்று தான்
அகில உலகமே
மருத்துவத்தில்
கொடி கட்டிப்
பறக்கிறது என்று
சொல்லத்தக்க
வகையில் இருக்கும்
மருத்துவத்தின்
உயர்நிலைகளையும்
மனித வாழ்வியலின்
உயர் நிலைகளையும்
அனைவரும் அவரவர்
நிலைகளுக்கேற்ப
புரிந்து கொள்ளும்
வகையில்
குறியீடுகளாக
சொல்லிச் சென்ற
சித்தர்களின்
பாடல்களுக்கு
சித்தர்களின்
அருளாசியுடன்
சித்தர் பாடல்களுக்கு
விளக்கங்கள்
எழுதி இருக்கிறேன்
தலைப்பு :
(4) பூம்பாவை :
(இறந்தவர் உயிரோடு
எழுப்பட்ட கதை)
கர்மவினையின்
தாக்குதலால்
உந்தப்பட்டு
தன் கடமையை
செவ்வனே
நிறைவேற்ற வேண்டும்
என்பதற்காக
கடவுள்
மேல் அளவிட
முடியாத பக்தி
கொண்ட
பூம்பாவை என்ற
தெய்வப்பெண்ணை
அரவம் தீண்டியதால்
முறைப்படி
செய்ய வேண்டிய
இறுதி சடங்குள்
அனைத்தும்
செய்யப்பட்டு
பூம்பாவையின்
உடலானது
நெருப்பிலிட்டு
எரித்ததால்
உண்டான
சாம்பலை
செம்பிலிட்டு
பூம்பாவையின்
பெற்றோர்கள்
பாதுகாத்து
வந்தனர்
------என்றும்அன்புடன்
------எழுத்தாளர்.
K.பாலகங்காதரன்
------15-04-2021
////////////////////////////////////
No comments:
Post a Comment