பதிவு-1-ஐந்து
புத்தக வெளியீடு
அன்பிற்கினியவர்களே !
நான் எழுதி
வெளியிட்ட
என்னுடைய
முதல் புத்தகமான
அரவான் களப்பலி
என்ற புத்தகம்
பல்வேறு
பிரச்சினைகளையும்
பல்வேறு
தடைகளையும்
கடந்து
பலநிலையில்
உள்ளவர்களின்
ஏகோபித்த
பாராட்டுக்களைப்
பெற்று
வெற்றி நடை
போட்டு- இந்த
அவனியெல்லாம்
வலம் வந்து
கொண்டிருக்கின்ற
நிலையிலும்,
அடுத்து நான்
செய்ய வேண்டிய
செயல்களை
செய்ய முடியாத
சூழ்நிலைகளை
காலம் எனக்கு
ஏற்படுத்திக்
கொண்டிருக்கின்ற
நிலையிலும்,
பல பிரச்சினைகள்
என்னை சூழ்ந்து
அழுத்தி மீள
முடியாமல் செய்து
கொண்டிருக்கும்
நிலையிலும்
மனவேதனைகள்
என்னை சூழ்ந்து
அழுத்தி பாதித்துக்
கொண்டிருக்கும்
நிலையிலும்,
காலம் என்னை
அழித்துச்
செல்ல காத்துக்
கொண்டிருக்கும்
நிலையிலும்
எனக்கென்று
ஒதுக்கப்பட்ட
பணி
என்னவென்று
தெரிந்து அதை
முடிக்க வேண்டும்
என்பதை
உணர்ந்த நான்
ஏற்கனவே
பல்வேறு
இணையதளங்களில்
பல்வேறு
தலைப்புகளில்
பல்வேறு
கருத்துக்களை
மையக்கருத்தாகக்
கொண்டு-நான்
எழுதியவைகளை
கீழ்க்கண்ட
தலைப்புகளில்
அச்சிட்டு புத்தகமாக
வெளியிட்டு
தொடர்ந்து
என்னுடைய
எழுத்துக்களை
மக்கள் மத்தியில்
கொண்டு செல்ல
இருக்கிறேன்
நான் விரைவில்
வெளியிட இருக்கும்
ஐந்து புத்தகங்களின்
தலைப்புகள்
மற்றும்
அவைகளைப் பற்றிய
சிறு குறிப்புகள்
கீழ்க்கண்டவாறு:
தலைப்பு :
(1) திருக்குறள் :
(பரம்பொருள்
நிலையில்
விளக்கம்)
முப்பாலும்
உணர்ந்தவர்கள்
எப்பாலும் இல்லை
அக்காலம்
இக்காலம் என்று
எக்காலமும்
இல்லை என்று
சொல்லத்தக்க
விதத்தில்
இது போல்
ஒரு நூலை இனி
யாராலும் எழுத
முடியாது என்ற
காரணத்தினால்
தான்
உலகில் உள்ள
அதிகமான
மொழிகளால் மொழி
பெயர்க்கப்பட்டு
இருக்கிறது
என்று
சொல்லத்தக்க
விதத்தில்
உயர்ந்த
கருத்துக்களை
வாழ்வியல்
நெறிமுறைகளை
மனிதத்
தன்மைகளை
பரம்பொருளின்
சூட்சுமங்களை
சிற்றின்பத்தின்
சீரழிவுகளை
பேரின்பத்தின்
பெருமைகளை
என்று
தொட்டுக் காட்டாத
விஷயங்கள் என்று
எதுவும் இல்லை
என்று
சொல்லத்தக்க
விதத்தில்
காலத்தால்
அழிக்க முடியாத
காலத்தை வென்று
நிற்கும் -
இந்த
உலகத்தில் உள்ள
அனைவருடைய
இதயங்களிலும்
இறவாமல் வாழ்ந்து
கொண்டிருக்கும்
திருக்குறளுக்கு
பரம்பொருளின்
அருளுடன்
திருக்குறளுக்கு
விளக்கங்கள்
எழுதியிருக்கிறேன்
------என்றும்
அன்புடன்
------எழுத்தாளர்.
K.பாலகங்காதரன்
------15-04-2021
////////////////////////////////////
No comments:
Post a Comment