April 10, 2021

பதிவு-5-முயற்சி- பழமொழி

 

பதிவு-5-முயற்சி-

பழமொழி

 

தண்ணீரை

பம்பில்

ஊற்றலாமா

வேண்டாமா

என்ற

கேள்விகள்

அவன் மனதில்

எழுந்த வண்ணம்

இருந்தது

காலம் போய்க்

கொண்டே

இருந்தது

 

வாழ்வோ

சாவோ

நான் அந்தத்

தண்ணீரை

பம்பில் ஊற்றி

முயற்சி செய்து

பார்க்கலாம்

தண்ணீர்

வந்தால்

பலன்

கிடைத்தது

என்று

எடுத்துக்

கொள்ளலாம்

தண்ணீர்

வரவில்லை

என்றால்

அனுபவம்

கிடைத்தது

என்று

எடுத்துக்

கொள்ளலாம்

 

முயற்சி

செய்தால்

இரண்டில்

ஒன்று

கிடைக்கும்

ஏமாற்றம்

ஒன்று

கிடைக்காது

என்று முடிவு

எடுத்தான்

 

தண்ணீரை

அந்தப் பம்பில்

ஊற்றினான்

அடித்தான்

அடித்தான்

சிறிது நேரம்

தண்ணீர்

வரவில்லை

இருந்தும்

அந்தப் பயணி

அடித்தான்

பம்பை

அடித்தான்

தண்ணீர் வரத்

தொடங்கியது

தண்ணீரை

எடுத்தான்

தாகம்

தீரும் வரை

குடித்தான்

தன்னுடைய

பிரயாணத்திற்கு

தேவையான

அளவு

தண்ணிரை

நிரப்பி

எடுத்துக்

கொண்டான்

அந்த ஜக்கில்

மீண்டும்

தண்ணீரை

நிரப்பி

வைத்தான்

மீண்டும்

அந்த

அட்டையை

அந்த பம்பின்

கழுத்தில்

தொங்க விட்டு

சென்றான்

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி

அடையார்

என்றால்

முயற்சி

செய்பவருக்கு

வெற்றி

கிடைத்தால்

முன்னேற்றமும்

தோல்வி

கிடைத்தால்

அனுபவமும்

ஆக மொத்தம்

இரண்டில்

ஒன்று

கிடைக்கும்

ஏமாற்றம்

என்ற

ஒன்று

கிடைக்காது

என்பது தான்

பொருள்

 

-------முயற்சி பழமொழி

அர்த்தம் நிறைவு

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////

No comments:

Post a Comment