April 10, 2021

பதிவு-3-முயற்சி- பழமொழி

 

பதிவு-3-முயற்சி-

பழமொழி

 

வெற்றி கிடைத்தால்

நாம் உழைத்த

உழைப்பிற்கு

பலன் கிடைத்தது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

தோல்வி கிடைத்தால்

அனுபவம் கிடைத்தது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

 

வெற்றி கிடைத்தால்

அதைப் பயன்படுத்தி

அடுத்த நிலைக்கு

செல்ல ஒரு

தூண்டுகோலாக

இருக்கும்

தோல்வி கிடைத்தால்

தவறு எதனால்

ஏற்பட்டது அதில்

உள்ள குறைகள்

எவை என்பதை

அறிந்து அதனை

சரி செய்து வெற்றி

கிடைப்பதற்காக

அடுத்த கட்ட

செயல்களைச் செய்ய

ஒரு வாய்ப்பு

கிடைத்திருக்கிறது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

 

ஆக மொத்தம்

வெற்றி கிடைத்தாலும்

தொல்வி கிடைத்தாலும்

நாம் ஒன்றை

அறிந்து கொள்வதற்கு

நல்ல வாய்ப்பாக

அமையும்

இது முயற்சி

செய்தால் மட்டும்

தான் கிடைக்கும்

 

முயற்சி செய்தால்

ஏமாற்றம் என்ற

ஒன்று கிடைக்காது

அதாவது

முயற்சி செய்தால்

வெற்றி

அல்லது

தோல்வி

இரண்டில்

ஒன்று கிடைக்கும்

முயற்சி செய்யும்

போது வெற்றி

கிடைத்தால்

உழைத்த

உழைப்பிற்கு பலனும்,

அடுத்த கட்டத்திற்கு

செல்லும்

நிலையும் ஏற்படும்

முயற்சி

செய்யும் போது

தோல்வி கிடைத்தால்

பிழைகளை சரி

செய்து மேல்

நிலைக்கு செல்ல

ஒரு வாய்ப்பாக

அமையும்

ஆகவே

முயற்சி செய்தால்

வெற்றி அல்லது

தோல்வி இரண்டில்

ஒன்று கிடைக்கும்

என்பதை நினைவில்

கொள்ள வேண்டும்

 

ஏமாற்றம் என்ற

ஒன்று கிடைக்காது

என்ற காரணத்தினால்

தான் முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றார்கள்

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றால்

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்று பொருள்

எடுத்துக்

கொள்ளக் கூடாது

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றால்

முயற்சி செய்தால்

தோல்வி கிடைக்காது

என்று பொருள் எடுத்துக்

கொள்ளக் கூடாது.

 

முயற்சி செய்தால்

வெற்றி அல்லது

தோல்வி கிடைக்கும்

இரண்டின் மூலம்

ஏதேனும் ஒரு

படிப்பினை

நமக்குக் கிடைக்கும்

ஏமாற்றம் என்ற

ஒன்று கிடைக்காது

என்பது தான்

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்பதற்கான அர்த்தம்

 

இந்தக் கதையைப்

படியுங்கள்

 

பாலைவனத்தில்

பயணம் செய்து

கொண்டிருந்தான்

ஒருவன்.

அவன் கொண்டு

வந்திருந்த தண்ணீர்

முழுவதும்

தீர்ந்து விட்டது

அவன் போக

வேண்டிய தூரமோ

அதிகமாக இருந்தது

குடிக்கத் தண்ணீர்

இல்லாமல் அவனால்

பிரயாணம் செய்ய

முடியவில்லை

அவன் மயங்கி

விழும் நிலைக்கு

வந்து விட்டான்

இந்தப்

பாலைவனத்திலேயே

தாகத்தால் உயிரை

விட்டு விடுவோமோ

என்று நினைத்துக்

கொண்டு

இருந்த நேரத்தில்

தூரத்தில் ஒரு

குடிசை போல

ஏதோ ஒன்று அவன்

மங்கிய கண்ணில்

நிழலாடியது

 

கால்களை நகர்த்தவே

மிகவும் கஷ்டப்பட்ட

அவன் அங்கு

சென்றால் தண்ணீர்

கிடைக்கும் என்ற

நம்பிக்கையில்

அந்த இடத்திற்கு

கஷ்டப் பட்டு

சென்று விட்டான்

அங்கே ஆட்கள்

யாரும் இல்லை

ஒரு கையால் அடித்து

இயக்கும் பம்ப் செட்டும்

அருகே ஒரு ஜக்கில்

தண்ணீரும் இருந்தன.

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////

No comments:

Post a Comment