April 10, 2021

பதிவு-4-முயற்சி- பழமொழி

 பதிவு-4-முயற்சி-

பழமொழி

 

பம்பின் கழுத்தில்

ஒரு அட்டையில்

வாசகம் எழுதி

மாட்டப்பட்டிருந்தது

அந்த அட்டையில்

“ஜக்கில் உள்ள

தண்ணீரை

இந்தப் பம்ப்

செட்டில் ஊற்றி

அடித்தால்

தண்ணீர் அதிக

அளவில் வரும்

தேவையான

அளவிற்கு

குடித்து விட்டு

பிரயாணம்

செய்யும்

அளவிற்கு

எடுத்துக்

கொண்டு

மறுபடியும்

ஜக்கில்

தண்ணீரை

நிரப்பி வைத்து

விட்டுச்

செல்லவும்

உன்னைப் போல

தாகத்துடன்

வரும் ஒரு

மனிதனுக்காக”

என்று எழுதி

வைக்கப்பட்டிருந்தது

 

அந்த பம்ப் செட்

மிகவும்

பழமையானதாக

இருந்தது அந்தத்

தண்ணீரை

ஊற்றினால்

அது இயங்குமா

தண்ணீர் வருமா

என்பது

அவனுக்கு

சந்தேகமாக

இருந்தது

அது இயங்கா

விட்டால் அந்தத்

தண்ணீர் வீணாகி

விடும். அதற்குப்

பதிலாக அந்தத்

தண்ணீரை

குடித்து விட்டால்

தாகமும் தணியும்,

உயிர்

பிழைப்பதற்கு

உத்திரவாதமும்

உள்ளது.

 

ஜக்கில் உள்ள

தண்ணீரைக்

குடித்து

விடலாமா

அல்லது

அந்த பம்ப்

செட்டில்

ஊற்றி

அடிக்கலாமா

என்று

அந்தப்

பயணி

யோசித்தான்

 

வாழ்க்கையில்

எல்லோருக்கும்

இதைப்

போல ஒரு

சூழ்நிலை வரும்

என்ன முடிவு

எடுப்பது என்று

திண்டாடக் கூடிய

நிலை வரும்.

வாழ்வா

சாவா

என்று

யோசிக்கக் கூட

முடியாத

நிலை வரும்

இத்தகைய

நிலைகள்

வாழ்க்கையில்

எப்போதாவது

ஒரு தடவை

தான் வரும்

இத்தகைய

நிலையில்

எடுக்கும்

முடிவானது

நம்முடைய

வாழ்க்கையையே

மாற்றக்

கூடியதாக

இருக்கலாம்

இத்தகைய

நிலையில்

துணிந்து

முடிவு எடுத்து

முயற்சி

செய்தவர்கள் தான்

வாழ்க்கையில்

உயர்ந்த

நிலையை

அடைந்து

இருக்கிறார்கள்

 

காலத்தை

வென்று

நிற்பவர்கள்

அனைவருமே

வாழ்வா சாவா

என்ற நிலை

வந்த போது

எது வந்தாலும்

பரவாயில்லை

என்று

முயற்சி

செய்தவர்கள்

தான்

 

அந்தப் பயணி

யோசித்தான்

அந்தத்

தண்ணீரை

அந்தப் பம்பில்

ஊற்றி தண்ணீர்

அடித்தால்

தேவையான

தண்ணீர் வரும்

அந்தத்

தண்ணீரைக்

குடிப்பதன் மூலம்

தன்னுடைய

உயிர்

காப்பாற்றப்படும்

அந்தத்

தண்ணீரை

அந்தப் பம்பில்

ஊற்றி

தண்ணீர்

வரவில்லை

என்றால்

ஜக்கில் இருந்த

தண்ணீரும்

வீணாகி சாக

வேண்டியது தான்

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////

 

No comments:

Post a Comment