பதிவு-3-ஐந்து
புத்தக வெளியீடு
பூம்பாவையின்
பெற்றோர்கள்
செம்பிலிட்டு
பாதுகாத்து
வந்த
பூம்பாவையின்
சாம்பலுக்கு
உயிர்
கொடுத்து
பூம்பாவையை
எழுப்பி
திருஞான சம்பந்தர்
பூம்பாவையை
இந்த உலகத்தில்
உயிருடன்
உலவ விட்டார்
பூம்பாவையை
இப்புவியில்
உள்ள
அனைவரும்
தரிசித்து வணங்க
வேண்டும்
என்பதற்காக
பூம்பாவையின்
மகிமையை
உணர்த்தும்
வகையில்
சென்னை
மயிலாப்பூரில்
உள்ள கபாலீஸ்வரர்
கோயிலின் வெளிப்புற
பிரகாரத்தில்
பூம்பாவைக்கு
என்று தனி
சந்நிதி உள்ளது
இத்தகைய
சிறப்புகளைப்
பெற்ற
பூம்பாவையின்
வாழ்க்கை வரலாற்றை
திருஞான சம்பந்தரின்
அருளாசியுடன்
பூம்பாவையின்
கதைக்கு
வசனங்கள் எழுதி
இருக்கிறேன்.
தலைப்பு :
(5) ஜியார்டானோ
புருனோ :
(சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது
என்று
சொன்னதற்காக
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டவரின்
கதை)
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றி வருகிறது
என்று பல
ஆண்டுகளாக
இந்த சமுதாயத்தில்
நிலவி வரும்
கோட்பாடானது
தவறு
என்று சொன்ன
காரணத்திற்காகவும்
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றவில்லை
சூரியனை மையமாக
வைத்துத் தான்
பூமி சுற்றுகிறது
என்று சொன்ன
காரணத்திற்காகவும்,
நான் சொன்ன
கோட்பாடு
உண்மையானது
தான்
சூரியனை
மையமாக
வைத்துத் தான்
பூமி சுற்றுகிறது
நான் சொன்ன
கோட்பாட்டை
என்னுடைய
உயிரே போனாலும்
மாற்றிக் கொள்ள
மாட்டேன் என்று
சொன்ன
காரணத்திற்காகவும்.
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக்
கொல்லப்பட்டார்
இந்தக் கருத்தை
மையமாக
வைத்துத்தான்
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை
வரலாற்றை
இரண்டு
வருடங்களுக்கு
முன்பு - நான்
பல்வேறு
இணையதளங்களிலும்
WHATS APP-லும்
தொடர்ந்து
தொடர்கதையாக
எழுதி
இந்த உலகத்தில்
உள்ள அனைத்து
மக்களின்
மிகப்பெரும்
ஆதரவைப் பெற்ற
ஜியார்டானோ
புருனோவின்
உண்மையான
வாழ்க்கை
வரலாற்றைத்
தான்
ஜியார்டானோ
புருனோ
என்ற தலைப்பில்
உரையாடல்
நடையில் எழுதி
இருக்கிறேன்.
மேற்கண்ட
ஐந்து தலைப்புகளில்
ஐந்து புத்தகங்களை
வெளியிட
இருக்கிறேன்
இந்த புத்தகங்களை
வெளியிடுவதற்காக
நான்
எழுதியவைகளை
தொகுக்கும்
பணியையும்
சரிபார்க்கும்
பணியையும்
செய்து
கொண்டிருக்கும்
எனக்கு என்னுடைய
சீடர்களும்
அன்புள்ளங்களும்
உதவி செய்து
கொண்டிருக்கிறார்கள்
இதுவரை
இந்த சமுதாயத்தில்
யாராலும் முழுமையாக
எழுதப்படாத
வரலாறு
புராணம்
இதிகாசம்
மற்றும்
இலக்கியங்கள்
ஆகியவற்றில்
உள்ள
கதாபாத்திரங்களின்
வாழ்க்கை
வரலாறுகளை
எழுத வேண்டும்
என்ற நினைப்பில்
நான் தற்போது
இணையதளங்களில்
தொடர்கதையாக
எழுதிக்
கொண்டிருக்கும்
"சாவேயில்லாத
சிகண்டி"
என்ற கதையையும்
எழுதி முடித்தபின்
புத்தகமாக
வெளியிட இருக்கிறேன்
------என்றும்அன்புடன்
------எழுத்தாளர்.
K.பாலகங்காதரன்
------15-04-2021
////////////////////////////////////
No comments:
Post a Comment