பதிவு-1-
திருக்குறள்-
“”உலகத்தார்
உண்டுஎன்பது
இல்என்பான்
வையத்து
அலகையா
வைக்கப்படும்””
-----திருக்குறள்
-----திருவள்ளுவர்
“”நம்முடைய
முன்னோர்கள்
ஆராய்ந்து
ஆனுபவித்து
உணர்ந்து
சொன்னவைகளில்
உள்ள
உண்மைகளை
உணர்ந்து
அதைப்பின்பற்றி
நிம்மதியாக
வாழத் தெரியாதவன்
இறந்தும் நிம்மதியற்ற
வாழ்வை வாழும்
ஒரு பேயைப்
போலத் தான்
தானும்
உயிரோடு
இருக்கும் போதே
நிம்மதியற்று
வாழ்வான்”””
என்பதே இந்த
திருக்குறளுக்கு
சரியான விளக்கம்
அதைப்பற்றிப்
பார்ப்போம்
நம்மைச்
சுற்றி
இயங்கிக்
கொண்டிருக்கும்
இயற்கை
நிகழ்வுகள்
நமக்கு
அடுத்து
நடக்கப்போவது
எப்படிப்பட்ட
தன்மையினை
உடையது
என்பதை
நமக்கு
உணர்த்தி
நாம்
செய்யும்
செயல்களுக்கு
உறுதுணையாக
இருப்பது
சகுனங்கள்
எனப்படும்..
நாம்
ஒரு
வேலைக்காக
சென்று
கொண்டு
இருக்கிறோம்
அப்போது
ஒரு
பூனை
நம்
குறுக்கே
செல்கிறது
பூனை
நம்
குறுக்கே
செல்வது
சகுனம்
எனப்படும்.
பூனை
நம்
குறுக்கே
எப்படி
செல்கிறது
என்பதைக்
குறித்து
வெளிப்படும்
சகுனம்
சுப
சகுனமா
அல்லது
அசுப
சகுனமா
என்பது
அறியப்படுகிறது
பூனை
வலமிருந்து
இடம்
போனால்
நல்லது
அதாவது
சுப
சகுனம்
பூனை
இடமிருந்து
வலம்
போனால்
கெடுதி
அதாவது
அசுப
சகுனம்
சகுனங்கள்
என்பவை
மிக
முக்கியமாக
இரண்டு
விஷயங்களைச்
செய்கின்றன,
ஒன்று :
நாம்
எந்த ஒரு
செயலைச்
செய்யும்
போதும்
செய்யக்கூடிய
அந்தச்
செயல்
நல்லவிதமாக
முடியுமா
அல்லது
கெ,ட்ட
விதமாக
முடியுமா
என்பதை
நம்மைச்
சுற்றி
நடைபெறும்
செயல்களில்
உள்ள
குறியீடுகளின்
நமக்குத்
தெரியப்படுத்தும்
விஷயத்தைச்
சகுனங்கள்
செய்கின்றன.
இரண்டு :
நமக்கு
ஏதேனும்
கெட்டவிதமான
செயல்
நடைபெறப்
போவதாக
இருந்தால்
அந்த
கெட்ட
விதமான
செயலால்
நமக்கு
பாதிப்பு
ஏற்படாத
வண்ணம்
நம்மை
பாதுகாக்க
வேண்டும்
என்பதற்காக
நம்மைச்
சுற்றி
நடைபெறும்
செயல்களில்
உள்ள
குறியீடுகளின்
மூலம்
நமக்குத்
தெரியப்படுத்தி
நம்மை
பாதுகாப்பதற்கான ஒரு
விஷயத்தைச்
சகுனங்கள்
செய்கின்றன.
ஒன்று
நாம்
செய்யும் செயல்
நல்லவிதமாக
முடியுமா
என்பதை
சுப
சகுனங்கள்
மூலமாகவும்
நாம்
செய்யும் செயல்
கெட்ட
விதமாக
முடியுமா
என்பதை
அசுப
சகுனங்கள்
மூலமாகவும்
தெரிந்து
கொள்ளலாம்
-------என்றும்
அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
------12-07-2021
////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment