July 12, 2021

பதிவு-3- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-3-

உலகத்தார்-

திருக்குறள்-

 

அவரால் மட்டுமே

நாம் செய்யும் செயல்

நல்லவிதமாக

முடியுமா அல்லது

கெட்ட விதமாக

முடியுமா என்பதை

தெரிந்து கொள்வதற்கு

மட்டும்

சகுனங்கள்

பயன்படுவதில்லை

என்பதையும்

 

துன்பத்திலிருந்து

நம்மைப் பாதுகாக்கும்

வேலையையும்

சகுனங்கள்

செய்கின்றன

என்பதையும்

தெரிந்து

கொள்ள முடியும்.

 

நமக்கு வரப்போகும்

துன்பத்தை

நாம் உணர்ந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காக

நம்மாலோ அல்லது

நம்மைச் சுற்றி

உள்ளவர்களாலோ

எழுப்பப்படும்

வார்த்தைகள்

பலவாகும் அவற்றில்

ஒன்று தான்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

நம்மைப்

பாதுகாப்பதற்காக

வெளிப்படும்

வார்த்தை என்று

கூட சொல்லலாம்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

சமுதாயத்தில்

வாழ்ந்த நம்முடைய

முன்னோர்கள்

பயன்படுத்திய வார்த்தை

 

சமுதாயத்தில்

உள்ளவர்கள்

காலம் காலமாக

பயன்படுத்திக்

கொண்டு

இருக்கும் வார்த்தை

 

சமுதாயத்தில்

உள்ளவர்கள் தற்போது

பயன்படுத்திக் கொண்டு

இருக்கும் வார்த்தை

 

அற்புதம் நிறைந்த

பல விஷயங்களைத்

தன்னுள் கொண்டு

இயங்கிக் கொண்டு

இருக்கும் வார்த்தை

 

பிரபஞ்ச ரகசியங்களில்

முக்கிய

ரகசியங்களைத் தன்னுள்

மறைத்துக் கொண்டு

உலா வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தையில் உள்ள

உண்மைப் பொருளை

உணர்ந்தவர்கள்

அறிவு தெளிவு பெற்று

அமைதியாக

இச்சமுதாயத்தில்

வாழ்ந்து வருகின்றனர்

 

ஆனால் கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தையில் உள்ள

உண்மைப்

பொருளை உணர

முடியாதவர்கள் தான்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

கிண்டல் கேலி

செய்து வருகின்றனர்.

 

கல் வந்து எப்படி

நம்மை இடிக்கும்

நாம் தான் கல்லில்

சென்று இடிக்க வேண்டும்

 

கல்லுக்கு என்ன

உயிர் இருக்கிறதா

கல் வந்து

நம்மை இடிப்பதற்கு

நமக்கு தான்

உயிர் இருக்கிறது

நாம் தான் சென்று

கல்லை இடிக்க வேண்டும்.

 

கல் என்னை

இடித்து விட்டது என்று

சொல்வது தவறு

நாம் தான்

கல்லில் இடித்தோம் என்று

சொல்வது தான்

சரி என்று

சொல்லக் கூடியவர்கள்

இச்சமுதாயத்தில் நிறைய

எண்ணிக்கையில்

இருக்கிறார்கள்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

கேலி செய்பவர்கள்

கிண்டல் செய்பவர்கள்

இந்த வார்த்தை

தவறாக சொல்லப்பட்ட

வார்த்தை என்பர்

 

தவறாக சொல்லப்பட்ட

வார்த்தையை

நாம் தவறாக

சொல்லக்கூடாது

சரியாக

சொல்ல வேண்டும்

என்பர்

 

இந்த சமுதாயத்தில்

காலம் காலமாக

சொல்லப்பட்டு

வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment