ஜபம்-பதிவு-724
(சாவேயில்லாத
சிகண்டி-58)
(அம்பை தங்கியிருக்கும்
ஆசிரமத்திற்கு
அகிருதவ்ரணர்
வருகிறார். அவரை
ஹோத்திரவாஹனர்
வணங்கி வரவேற்று
அம்பையைப் பற்றி
அகிருதவ்ரணரிடம்
சொல்கிறார்.
அம்பையை அழைத்து
அகிருதவ்ரணர்
பேசுகிறார்)
அகிருதவ்ரணர் :
அம்பையே
உன்னுடைய
கதையைக் கேட்ட
நான் மிகுந்த
அதிர்ச்சியுற்றேன்
பீஷ்மரைக்
கொல்ல வேண்டும்
என்பதையே
வாழ்வின்
லட்சியமாகக் கொண்டு
வாழ்ந்து
கொண்டிருக்கும்
உன்னைப்
பார்க்கும் போது
எனக்கு
ஆச்சரியமாக
இருக்கிறது
விருப்பப்படும்
போது தான்
தனக்கு மரணம்
ஏற்பட வேண்டும்
என்ற வரத்தைப்
பெற்ற பீஷ்மரை
யாராலும் வெற்றி
கொள்ள முடியாதவர்
என்று போற்றப்படும்
பீஷ்மரை
சாகாவரம்
பெற்றவர் என்று
அழைக்கப்படும்
பீஷ்மரைக்
கொல்வேன்
என்ற
லட்சியத்துடன்
வாழ்ந்து
கொண்டிருக்கும்
உன்னைப்
பார்க்கும் போது
எனக்கு
பிரமிப்பாக இருக்கிறது
அம்பை :
பீஷ்மரைக்
கொல்ல வேண்டும்
என்று நான்
மேற்கொண்டிருக்கும்
லட்சியத்தை தவறு
என்கிறீர்களா
அகிருதவ்ரணர் :
லட்சியத்தை
மேற்கொண்டவர்களுக்குத்
தான்
தாங்கள்
மேற்கொண்ட
லட்சியம்
சரியா தவறா
என்று
முடிவெடுக்கும்
அதிகாரம் இருக்கிறது
பார்ப்பவர்களுக்கு
கிடையாது
ஏனென்றால்
லட்சியத்தை
மேற்கொண்டவர்களுக்குத்
தான்
தாங்கள் எதற்காக
லட்சியத்தை
மேற்கொண்டிருக்கிறோம்
என்பது தெரியும்
படிப்பது
கேட்பது
பார்ப்பது
ஆகியவற்றின்
மூலமாக
உந்தப்பட்டு
அதன் காரணமாக
மேற்கொள்ளப்படும்
லட்சியத்திற்கு
உணர்ச்சி
வசப்பட்டவர்களால்
மேற்கொள்ளப்பட்ட
லட்சியம்
என்று பெயர்
ஆனால்,
நடந்த நிகழ்ச்சியால்
பாதிக்கப்பட்டு
அதன்
காரணமாக
மேற்கொள்ளப்படும்
லட்சியத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களால்
மேற்கொள்ளப்பட்ட
லட்சியம்
என்று பெயர்
உணர்ச்சி
வசப்பட்டதால்
மேற்கொள்ளப்பட்ட
லட்சியத்தை விட
பாதிக்கப்பட்டவர்களால்
மேற்கொள்ளப்பட்ட
லட்சியத்திற்கு
வலிமை அதிகம்
அம்பையே
பீஷ்மரைக்
கொல்வேன்
என்று நீ
மேற்கொண்டிருக்கும்
லட்சியம்
பாதிக்கப்பட்டவர்களால்
மேற்கொள்ளப்பட்ட
லட்சியம்
பீஷ்மரால்
பாதிக்கப்பட்டதால்
நீ
மேற்கொண்டிருக்கும்
லட்சியம்
லட்சியம்
எத்தகைய தன்மையை
உடையதாக
இருந்தாலும்
அதனை
நிறைவேற்றுவதற்காக
நீ மேற்கொண்டிருக்கும்
லட்சியப் பயணம்
பாராட்டிற்குரியது
அம்பை :
நான் மேற்கொண்ட
லட்சியத்தில்
வெற்றி பெறுவேன்
என்கிறீர்களா
நான் மேற்கொண்ட
லட்சியத்தை
அடைந்து
விடுவேனா
பீஷ்மரைக்
கொன்று விடுவேனா
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------03-04-2022
-------ஞாயிற்றுக்கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment