ஜபம்-பதிவு-725
(சாவேயில்லாத
சிகண்டி-59)
அகிருதவ்ரணர் :
உன்னுடைய
கைகளால் தான்
பீஷ்மர்
கொல்லப்பட
வேண்டும்
என்று இருந்தால்
கண்டிப்பாக
உன்னால் தான்
பீஷ்மர்
கொல்லப் படுவார்
உன்னால் பீஷ்மர்
கொல்லப்படக்கூடாது
என்று இருந்தால்
நீ எவ்வளவு
முயற்சி செய்தாலும்
உன்னால்
பீஷ்மரைக்
கொல்ல முடியாது
பிறப்பும்
இறப்பும்
நம் கைகளில்
கிடையாது
அது இறைவனின்
தெய்வீகத்
திருவிளையாடல்கள்
மறைபொருளாக
வைக்கப்பட்டிருக்கும்
தெய்வீகத்தின்
ரகசியங்கள்
பிரபஞ்சத்தால்
மறைத்து
வைக்கப் பட்டிருக்கும்
மறை பொருள்கள்
திறக்க முடியாத
சூட்சுமத்தின்
ரகசியங்கள்
அம்பை :
பீஷ்மரை நான்
கொல்ல
மாட்டேனா
பீஷ்மருக்கு
என்னால் மரணம்
கிடையாதா
அகிருதவ்ரணர் :
இந்த உலகத்தில்
தானாகவே
ஏற்படும் மரணம்
பிறரால்
ஏற்படும் மரணம்
என்று
இரண்டு
நிலைகளில் தான்
மரணம் என்பது
ஏற்படுகிறது
வயது முதிர்வால்
ஏற்படும் மரணம்
நோயினால்
ஏற்படும் மரணம்
ஆகியவை
தானாகவே
ஏற்படும் மரணம்
பிறர் நம்மை
கொல்வதால்
ஏற்படும் மரணம்
பிறரால்
ஏற்படும் மரணம்
ஆனால்
பீஷ்மரைப்
பொறுத்தவரை
விருப்பப்படும்
போது தான்
மரணம் என்ற
நிலை இருக்கிறது
அதனால்
உன்னால்
பீஷ்மரைக்
கொல்ல முடியுமா
என்ற
கேள்விக்கான பதில்
காலத்தின்
கைகளில் தான்
இருக்கிறது
அம்பை :
பீஷ்மரின்
மரணம் காலத்தின்
கைகளில் இல்லை
என்னுடைய
கைகளில் தான்
இருக்கிறது
என்னுடைய
கைகளால்
பீஷ்மரை வீழ்த்துவேன்
வீழ்த்தப்பட்டதால்
ஏற்பட்ட காயத்தின்
வலி தாங்க முடியாமல்
விரும்பினால்
மட்டுமே மரணம்
ஏற்படும்
என்ற வரத்தைப்
பெற்ற பீஷ்மர்
இந்த உலகத்தில்
வாழப்பிடிக்காமல்
தானே மரணத்தை
விரும்பி
ஏற்றுக் கொள்வார்
பீஷ்மருக்கு
பிறராலும்
விருப்பப்பட்டும்
என்ற இரண்டு
நிலைகள் கலந்து
தான் மரணம்
இது தானே
நடக்கப் போகிறது
அகிருதவ்ரணர் :
அதை
சொல்லக்கூடிய
நிலையில்
நான் இல்லை
உன் சந்தேகத்தை
தீர்த்து
வைக்கக்கூடியவர்
உன் வாழ்க்கைக்கு
தேவையானது
எது என்பதை
உணர்ந்து
செய்யக் கூடியவர்
பரசுராமர் ஒருவர்
மட்டும் தான்
உன் வாழ்க்கைக்கு
எது தேவையோ
அதை
நிறைவேற்றி
வைப்பார்
அம்பை :
என் வாழ்க்கைக்கு
எது தேவையோ
அதை
நிறைவேற்றி
வைக்க வேண்டாம்
என் மனதுக்கு
எது தேவையோ
அதை
நிறைவேற்றினால்
போதும்
அகிருதவ்ரணர் :
எது தேவை
எது
தேவையில்லை
என்பதை
பரசுராமர்
முடிவு செய்வார்
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------03-04-2022
-------ஞாயிற்றுக்கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment