ஜபம்-பதிவு-727
(சாவேயில்லாத
சிகண்டி-61)
ஹோத்திரவாஹனர் :
அம்பை
தன்னுடைய லட்சியத்தை
அடைந்து விடுவாள்
என்கிறீர்களா
அகிருதவ்ரணர் :
லட்சியத்தை
அடைவது என்பது
இரண்டாம்பட்சம் தான்
லட்சியப் பாதையில்
பயணிப்பது தான்
மிக மிக முக்கியம்
அம்பையின்
லட்சியம்
சரியோ தவறோ
ஆனால்
தான் மேற்கொண்ட
லட்சியத்திற்காக
எவ்வளவு கஷ்டங்கள்
வந்தாலும்
அவைகளையெல்லாம்
எதிர்ந்து
புறந்தள்ளிவிட்டு
பீஷ்மரைக்
கொல்வேன் என்ற
ஒரே லட்சியத்துடன்
செல்லும்
அம்பையின் செயல்
போற்றுதலுக்குரியது
ஹோத்திரவாஹனர் :
பீஷ்மரை
அம்பை கொன்று
விடுவார்
என்கிறீர்களா
விருப்பப்படும்
போது தான்
மரணம் என்று
வரம் பெற்ற
பீஷ்மரை
அம்பையால்
கொல்ல முடியுமா
அகிருதவ்ரணர் :
பீஷ்மருக்கு
விருப்பப்படும்
போது தான்
மரணம் என்றால்
அவரை யாராலும்
கொல்ல முடியாது
என்று அர்த்தம்
அவரை எந்த
ஆயுதத்தாலும்
அழிக்க முடியாது
என்று அர்த்தம்
அவர்
விரும்பினாலொழிய
அவரை மரணம்
நெருங்காது
என்று அர்த்தம்
ஹோத்திரவாஹனர் :
அப்படி என்றால்
பீஷ்மரைக்
கொல்ல முடியாதா
அகிருதவ்ரணர் :
பீஷ்மரை யாராலும்
கொல்ல முடியாது
அம்பை உட்பட
ஆனால்
அவருடைய சபதத்தை
வைத்தே மரணத்தை
அவர் தழுவச்
செய்யலாம்
ஹோத்திரவாஹனர் :
எப்படி
அகிருதவ்ரணர் :
பீஷ்மர் தன்
மரணத்தை தானே
விரும்பி
ஏற்றுக்கொள்வதற்கான
வழிமுறையை
அம்பை
யோசித்து
வைத்திருக்கிறாள்
ஹோத்திரவாஹனர் :
அம்பையா
அகிருதவ்ரணர் :
ஆமாம்
அம்பை தான்
நினைத்து கூட
பார்க்க முடியாத
வகையில்
யோசித்து
வைத்திருக்கிறாள்
ஹோத்திரவாஹனர் :
என்ன யோசித்து
வைத்திருக்கிறாள்
அகிருதவ்ரணர் :
பீஷ்மருக்கு
காயத்தை ஏற்படுத்தி
வீழ்த்தி படுக்க
வைத்து விட்டால்
அவரை இயங்க
முடியாமல்
செய்து விட்டால்
தன்னுடைய
அத்தியாவசிய
தேவையுடன்
எந்த ஒரு
தேவைக்கும்
யாரையாவது
சார்ந்து தான்
இருக்க வேண்டும்
என்ற நிலையை
அவருக்கு
உருவாக்கி வைத்து
விட்டால்
தன்னுடைய
அத்தியாவசிய
தேவையையே
தன்னால்
நிறைவேற்ற
முடியவில்லையே
என்ற மன
வருத்தமே
தனக்குரிய
மரணத்தை
தானே விரும்பி
ஏற்றுக் கொள்ளும்
நிலையை
பீஷ்மருக்கு
உருவாக்கி விடும்
அதனால் பீஷ்மரை
எப்படி வீழ்த்த
வேண்டும் என்பதை
அம்பை யோசித்துக்
கொண்டிருக்கிறாள்
ஹோத்திரவாஹனர் :
சக்தி படைத்த
பீஷ்மரை
சாதாரண
பெண்ணான
அம்பையால்
பீஷ்மரை வீழ்த்தி
படுக்க வைத்து
விட முடியுமா
பீஷ்மரை
வீழ்த்த வேண்டும்
என்றால்
பீஷ்மரைப் போல
சக்தி படைத்த
பெண்ணாக
அம்பை
உருவாக வேண்டும்
அல்லவா
அம்பையால்
இது முடியுமா
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------03-04-2022
-------ஞாயிற்றுக்கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment