November 11, 2022

திறக்குறள்- பதிவு-1-கற்க கசடற

 திறக்குறள்-

பதிவு-1-கற்க

கசடற

 

“”கற்க கசடறக்

கற்பவை

கற்றபின்

நிற்க

அதற்குத் தக””

 

------திருக்குறள்

------391

-----திருவள்ளுவர்

 

கற்க

வேண்டியவற்றைக்

கசடறக்

கற்க வேண்டும்

கற்ற பிறகு

அதன் வழி

நிற்க வேண்டும்

என்பதே

இத் திருக்குறக்கு

பொதுவாக

சொல்லப்படும்

கருத்து

 

ஒரு விஷயத்தை

அரை குறையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவத்துடன்

அந்த விஷயத்தில்

ஈடுபட்டால்

அது அழிவைத்

தான் தரும்

ஒரு விஷயத்தை

முழுமையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவம் இல்லாமல்

அந்த விஷயத்தில்

ஈடுபட்டால்

அது வெற்றியைத்

தான் தரும்

என்று

இத் திருக்குறளுக்கு

தெளிவாக

விளக்கம்

சொல்லலாம்

 

ஒரு விஷயத்தை

அரை குறையாகக்

கற்றுக் கொண்டு

தான் என்ற

ஆணவத்துடன்

அந்த விஷயத்தில்

ஈடுபட்டு

அழிவைத்

தேடிக் கொண்டதற்கு

மிகச் சிறந்த

உதாரணமாக

அபிமன்யுவைச்

சொல்லலாம்

 

மகாபாரதக் கதையை

எடுத்துக் கொண்டால்

18-நாள் நடந்த

குருக்ஷேத்திரப்போரில்

13-ம் நாள்போர்

ஸம்சப்தகர்களைக்

கொல்வதற்காக

அர்ஜுனன் சென்று

விட்டான்

 

கௌரவப் படையின்

தலைமைத் தளபதி

துரோணர்

சக்கர வியூகத்தை

அமைத்தார்

 

13-ம் நாள் போரில்

பாண்டவப் படையில்

உள்ளவர்களில்

யாருக்கும்

சக்கர வியூகத்தின்

உள்ளே சென்று

வெளியே வருவதற்கு

தெரியாது

 

ஆனால்

அபிமன்யுவிற்கு

மட்டும்

சக்கர வியூகத்தின்

உள்ளே

செல்ல தெரியும்

வெளியே

வருவதற்குத் தெரியாது


யுதிஷ்டிரர்

பாண்டவப்

படையினரிடம்

யாருக்கு

சக்கர வியூகத்திற்கு

உள்ளே சென்று

வெளியே வரத்

தெரியும்

என்று கேட்டார்

 

அபிமன்யு

யுதிஷ்டிரர் முன்பு

வந்து நின்று

கொண்டு சொன்னான்

 

எனக்கு உள்ளே

செல்லத் தெரியும்

வெளியே

வரத் தெரியாது

இருந்தாலும்

நான்

சக்கர வியூகத்தை

உடைத்து

உள்ளே செல்கிறேன்

நீங்கள் அனைவரும்

என்னைப்

பின் தொடர்ந்து

வாருங்கள்

என்றான்

 

யுதிஷ்டிரர்

உட்பட யாரும்

அபிமன்யு சொன்னதை

ஏற்றுக்

கொள்ளவில்லை

 

அபிமன்யு

விடாப்பிடியாக

நான் செல்கிறேன்

நீங்கள் அனைவரும்

என்னைப் பின்

தொடர்ந்து

வாருங்கள்

என்று

சொல்லிவிட்டு

யாருடைய

பதிலையும்

எதிர்பார்க்காமல்

யாருடைய

அறிவுரையையும்

கேட்காமல்

யாரையும்

மதிக்காமல்

சக்கர வியூகத்தை

உடைத்து உள்ளே

செல்ல

ஆரம்பித்து விட்டான்

 

-------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

----10-11-2022

----வியாழக்கிழமை

 

/////////////////////////////////////////

No comments:

Post a Comment