திறக்குறள்-
பதிவு-2-கற்க
கசடற
கண் முன்னே
நடந்து கொண்டிருக்கும்
விஷயத்தை
தடுக்க முடியாமல்
என்ன செய்வது
என்று தெரியாமல்
அனைவரும்
அபிமன்யுவைப்
பின் தொடர்ந்து
சென்றனர்
அபிமன்யு
சக்கர வியூகத்தை
உடைத்து உள்ளே
சென்றவுடன்
சக்கர வியூகம்
மூடிக் கொண்டது
அது மட்டுமல்லாமல்
ஜயத்ரதன்
பாண்டவப் படையில்
உள்ளவர்கள் யாரும்
அபிமன்யுவைப்
பின் தொடர்ந்து
செல்ல முடியாமல்
தடுத்து
நிறுத்தி விட்டான்
அர்ஜுனனைத்
தவிர்த்து மற்ற
பாண்டவர்களை
ஒரு நாள் மட்டும்
போரில் தடுத்து
நிறுத்தும் வரத்தை
சிவனிடம்
இருந்து
ஜயத்ரன்
பெற்றிருந்தான்
இந்த சந்தர்ப்பத்தை
தனக்கு சாதகமாக
பயன் படுத்திக்
கொண்ட
ஜயத்ரதன்
சிவனிடமிருந்து
பெற்ற வரத்தைப்
பயன்படுத்தி
அர்ஜுனனைத்
தவிர்த்து
மற்ற பாண்டவர்களை
மட்டுமில்லாமல்
பாண்டவப் படையின்
தலைமைத் தளபதி,
திருஷ்டத்யும்னன்
சாத்யகி
சிகண்டி
விராடன்
துருபதன்
திரௌபதியின்
புதல்வர்கள்
பாண்டவப்
படையினர் என்று
ஒருவர் விடாமல்
தனி ஒரு
ஆளாக
தனித்து நின்று
தன்னுடைய
வீரத்தாலும்
அறிவாலும்
தான்பெற்ற
கல்வியாலும்
தன்னிடமிருந்த
அஸ்திரத்தாலும்
அனைவரையும்
அன்று ஒருநாள்
முழுவதும்
சக்கரவியூகத்திற்குள்
செல்ல விடாமல்
தடுத்து
நிறுத்தினான்
சக்கர வியூகத்தில்
அபிமன்யு மாட்டிக்
கொண்ட போதும்
சும்மா இருக்காமல்
தான் என்ற
ஆணவத்துடன்
தன்னை விட
வீரத்தில் சிறந்தவர்
யாரும் இல்லை
என்ற மமதையில்
துரியோதனன்
துச்சாதனன்
கர்ணன்
அஸ்வத்தாமன்
துரோணர்
கிருபர்
என்று அனைவரும்
தன்னுடன் ஒன்று
சேர்ந்து போரிட
வேண்டும் என்று
போரிட
அழைத்தான்
போரின் நியதிப்படி
ஒருவன் ஒருவனுடன்
நேருக்கு நேர்
நின்று போரிட
வேண்டும்
அல்லது
பலபேர்கள்
ஒன்றாகச் சேர்ந்து
தன்னுடன்
போரிட வேண்டும்
என்று
தனி ஒருஆள்
அழைத்தால்
போரிட வேண்டும்
அபிமன்யு தனி
ஒருவனுடன்
போரிடாமல்
பலபேர்கள் ஒன்றாக
சேர்ந்து தன்னுடன்
போரிட வேண்டும்
என்று போரிட
அழைத்தான்
நீங்கள்
உண்மையாகவே
ஷத்திரியர்களாக
இருந்தால்
உங்களுக்கு வீரம்
என்ற ஒன்று
இருந்தால்
அனைவரும்
ஒன்றாக சேர்ந்து
என்னிடம்
சண்டையிட்டுப்
பாருங்கள்
நீங்கள் அனைவரும்
ஒன்றாக சேர்ந்து
சண்டையிட்டாலும்
என்னை உங்களால்
வெற்றி கொள்ள
முடியாது
ஏனென்றால்
உங்கள்
அனைவருக்கும்
வீரம் என்பதே
கிடையாது என்று
தான் என்ற
ஆணவத்துடன்
தன்னை விட
வீரத்தில் சிறந்தவர்
யாரும் இல்லை
என்ற நினைப்பில்
ஆணவமாகப்
பேசினான்
-------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
----10-11-2022
----வியாழக்கிழமை
/////////////////////////////////////////
No comments:
Post a Comment