திறக்குறள்-
பதிவு-3--கற்க
கசடற
ஒருவன் பல
பேருடன் போரிட
விரும்பி
பல பேர்கள்
ஒன்றாக சேர்ந்து
தன்னுடன்
போரிட வேண்டும்
என்று
போரிட அழைத்தால்
ஷத்திரிய
தர்மத்தின்படி
போரிட்டுத் தான்
ஆக வேண்டும்
இருந்தாலும்
அவர்கள்
அனைவரும்
அபிமன்யுவிடம்
நீ சிறியவன்
யாரேனும் உனக்கு
சமமாக இருந்தால்
அவர்களிடம்
சென்று
ஒரு ஓரமாக
நின்று கொண்டு
சண்டையிடு
எங்களுடன் சமமாக
நிற்பதற்குக்கூட
உனக்குத்
தகுதியில்லை
அனைவரும்
ஒன்று சேர்ந்து
உன்னுடன் போரிட
வேண்டும் என்று
போரிட அழைக்காதே
தவறானதை
பேசினாய்
தவறாக நடந்து
கொண்டாய்
எப்படி பெரியவர்களிடம்
பேச வேண்டும்
என்று உனக்குத்
தெரியவில்லை
எப்படி
பெரியவர்களுக்கு
மரியாதை
கொடுக்க வேண்டும்
என்பது உனக்குத்
தெரியவில்லை
இருந்தாலும்
நாங்கள்
உன்னை மன்னித்து
விடுகிறோம்
இங்கிருந்து
சென்று விடு
என்றனர்
அபிமன்யு அதை
காதில் வாங்கிக்
கொள்ளாமல்
அவர்கள்
அனைவரும்
ஒன்று சேர்ந்து
தன்னுடன்
போரிட வேண்டும்
என்று போரிட
அழைத்தான்
வேறு
வழியில்லாமல்
ஷத்திரிய தர்மத்தைக்
காப்பாற்ற
வேண்டும்
என்பதற்காக
ஆறு மகாவீரர்கள்
ஒன்றுசேர்ந்து
தனி ஆளாக
இருக்கும்
அபிமன்யுவுடன்
போரிட்டனர்
துரோணர் முதலிய
ஆறு மகாவீரர்கள்
ஒன்றாகப்
போரிட்டு
அபிமன்யுவைக்
கொல்லவில்லை
தான் என்ற
ஆணவத்துடன்
தன்னைவிட
வீரத்தில்
சிறந்தவர்கள்
யாரும் இல்லை
என்ற நினைப்பில்
அபிமன்யு
அனைவரையும்
ஒன்று சேர்ந்து
தன்னுடன்
போரிட வேண்டும்
என்று போரிட
அழைத்ததே
அபிமன்யு
கொல்லப்பட்டதற்குக்
காரணம்
சக்கரவி யூகத்தை
விட்டுவெளியே
வரத் தெரியாமல்
உள்ளே சென்று
தான் என்ற
ஆணவம் கொண்டு
தன்னைவிட
வீரத்தில் சிறந்தவர்
யாரும் இல்லை
என்ற நினைப்பில்
அனைவரும்
ஒன்று சேர்ந்து
தன்னுடன் போரிட
வேண்டும் என்று
போரிட அழைத்ததே
அபிமன்யு
கொல்லப்பட்டதற்குக்
காரணம்
ஒரு விஷயத்தை
அரை குறையாகக்
கற்றுக் கொண்டு
தான் என்ற
ஆணவத்துடன்
அந்த
விஷயத்தில்
ஈடுபட்டதே
அபிமன்யு
கொல்லப்பட்டதற்குக்
காரணம்
ஒருவிஷயத்தை
அரைகுறையாக
கற்றுக் கொண்டு
தான் என்ற
ஆணவத்துடன்
அந்த விஷயத்தில்
ஈடுபட்டால்
அது நமக்கு
அழிவைத்
தான் தரும்
ஒரு விஷயத்தை
முழுமையாகக்
கற்றுக் கொண்டு
தான் என்ற
ஆணவம் இல்லாமல்
அந்த
விஷயத்தில்
ஈடுபட்டால்
அது நமக்கு
வெற்றியைத்
தான் தரும்
என்பதைத் தான்
திருவள்ளுவர்
தன்னுடைய
கற்க கசடறக்
கற்பவை
கற்றபின்
நிற்க
அதற்குத்தக
என்ற
திருக்குறளின்
மூலம்
தெளிவுபடுத்துகிறார்
-------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
----10-11-2022
----வியாழக்கிழமை
/////////////////////////////////////////
No comments:
Post a Comment