ஜபம்-பதிவு-945
மரணமற்ற அஸ்வத்தாமன்-77
(கடவுளுக்கே
சாபம் கொடுத்தவனின் கதை)
கிருஷ்ணர் : நீ சொல்வது அனைத்தும் சரி என்கிறாயா?
அஸ்வத்தாமன் : ஒருவருக்கு சரியாகத் தெரிவது மற்றவருக்குத் தவறாகத் தெரியும்.
ஒருவருக்கு தவறாகத் தெரிவது மற்றவருக்குச் சரியாகத் தெரியும்.
சரியும் தவறும் செய்யும் செயலில் இல்லை,
பார்க்கும் பார்வையில் இருக்கிறது.
நீங்கள் சகுனியைப் பார்க்கும் பார்வை வேறு,
நான் சகுனியைப் பார்க்கும் பார்வே வேறு.
உங்கள்
பார்வையில் அவர் தவறானறாகத் தெரிகிறார்,
என் பார்வையில் அவர் சரியானவறாகத் தெரிகிறார்.
இந்த உலகத்தில் உள்ள எந்த ஒருவரை எடுத்துக் கொண்டாலும், அவர் அனைவருக்கும் கெட்டவராகவும் இருக்க மாட்டார். அனைவருக்கும் நல்லவராகவும் இருக்க மாட்டார்.
கிருஷ்ணர் : இப்போது என்ன சொல்ல வருகிறாய்?
அஸ்வத்தாமன் : நான் சொல்ல வரவில்லை. கேட்க வந்தேன். என்ன கேட்க வந்தேனோ அதைக் கேட்டும் விட்டேன். நீங்கள் தான் இன்னும் எனக்கு எந்தவொரு பதிலும் சொல்லவில்லை.
கிருஷ்ணர் : சுகதர்சன சக்கரத்தை சொல்கிறாயா?
அஸ்வத்தாமன் : ஆமாம், அதைத் தான் சொல்கிறேன். அதைத் தான் கேட்க வந்தேன்.
கிருஷ்ணர் : உனக்கு எதற்கு சுதர்சன சக்கரம்?
அஸ்வத்தாமன்: வருங்காலத்தில் பாண்டவர்களுக்கும் கௌவரவர்களுக்கும் சண்டை நடக்கும் போது நீங்கள் பாண்டவர்கள் பக்கம் நிற்பீர்கள். நான் துரியோதனனுக்காக கௌரவர்கள் பக்கம் நிற்பேன்,
நீ கடவுள் என்று
உன்னுடன் யாரும் சடை போட வர மாட்டார்கள்,
உன்னுடன் சண்டையிட மறுப்பார்கள்.
உன்னை எதிர்க்க அனைவரும் பயப்படுவார்கள்.
அன்றும், இன்றும், என்றும் உன்னுடன் சண்டையிட
நான் தயாராக இருக்கிறேன்,
அன்றும் உன்னுடன் சண்டையிடுவதற்கு நான் தான் தயாராக இருப்பேன்.
நான் மட்டும் தான் உன்னுடன் சண்டையிடுவேன்.
ஏனென்றால், நான் உன்னுடன் சண்டையிடுவதற்கு
எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.
உன்னுடன் சண்டை போடுவதற்கு தகுதி படைத்தவனும் நான் தான்.
உன்னை எதிர்க்கும் தைரியமும் எனக்கு மட்டுமே இருக்கிறது.
ஒரு
வீரனுக்கு அழகு போர்க்களத்திற்கு வந்து விட்டால் எதிரே நிற்பவர் யார் என்று பார்க்காமல், எதிரே வந்து எதிரியாக யார் வந்து நின்றாலும், சண்டையிடுவது தான்.
நான் மனிதன் என்றும் பார்க்காமல், கடவுள் என்றும் பார்க்காமல் சண்டையிடுவதற்கு தயாராக இருக்கின்ற காரணத்தினால் நான் உன்னுடன் சண்டையிடுவேன்.
கிருஷ்ணர் : ஏன்
என் மீது உனக்கு இவ்வளவு வெறுப்பு?
அஸ்வத்தாமன் : வெறுப்பு உன் மீது இல்லை.
கிருஷ்ணர் : பாண்டவர்கள்
மீதா?
அஸ்வத்தாமன் : அவர்கள் மீதும் இல்லை.
கிருஷ்ணர் : பிறகு?
அஸ்வத்தாமன் : துரியோதனனுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை நான் எதிர்ப்பேன்
நீ
கண்டிப்பாக வருங்காலத்தில் துரியோதனனை எதிர்த்து நிற்பாய்
பாண்டவர்களின் சார்பாக
நிற்பாய்
அதனால்
தான் உன்னை எதிர்க்கிறேன்
உன்னை
நான் அனைத்து விதத்திலும் எதிர்ப்பேன்
உன்னிடம்
உள்ள பலமான ஆயுதம் சுதர்சன சக்கரத்தை மட்டும் என்னால் எதிர்க்க முடியாது. ஏனென்றால், அதற்கு எதிர் ஆயுதம் என்னிடம் இல்லை.
அதை நான் உன்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு சென்று விட்டேன் என்றால், போரில் உன்னை எதிர்க்கலாம் உன்னை எதிர்த்து சண்டை போடலாம் என்ற காரணத்திற்காகத் தான்.
------K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்,
பேச்சாளர் &
வரலாற்று
ஆய்வாளர்,
------31-12-2023
-----ஞாயிற்றுக்
கிழமை
////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment