ஜபம்-பதிவு-947
மரணமற்ற அஸ்வத்தாமன்-79
(கடவுளுக்கே
சாபம் கொடுத்தவனின் கதை)
அஸ்வத்தாமன்
: நீ மனிதனாக இருந்தால் உன்னைத் தேடி வந்து சுதர்சன சக்கரத்தைக் கேட்டிருக்க மாட்டேன். உன்னை அனைவரும் கடவுள் என்கிறார்கள். அதனால் உன்னைத் தேடி வந்தேன்.
கடவுளுக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் நல்லவன் கெட்டவன் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது.
உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு நீ வரம் தருவாய் என்று நம்பி வந்தேன்
என்னிடம் உண்மையான பக்தி இருக்கிறது. எனக்காக எதையும் நான் கேட்கவில்லை. என் நண்பனுக்காக கேட்கிறேன். என் நண்பனின் வாழ்க்கைக்காக கேட்கிறேன். என் நண்பன் நன்றாக இருக்க வேண்டும் அதற்காகக் கேட்கிறேன்.
உண்மையான பக்தி என்பது, தனக்காகவும், தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன்னுடைய சந்ததிகளுக்காகவும், நலனை வேண்டி இறைவனை வேண்டுவது கிடையாது.
பிறருக்காகவும், பிறருடைய நலனுக்காகவும் வேண்டுவது தான் உண்மையான பக்தி.
அந்த உண்மையான பக்தியில் தான் கேட்கிறேன், என்னுடைய நண்பன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறேன்.
நான் வைத்திருக்கும் உண்மையான பக்தியைப் புரிந்து கொண்டு எனக்கு சுதர்சன சக்கரத்தைக் கொடு.
நான் சுதர்சன சக்கரத்தை இனாமாகக் கேட்கவில்லை, வரமாகக் கேட்கிறேன்
உன்னிடம் இருக்கும் சுதர்சன சக்கரத்தை எனக்கு வரமாகக் கேட்கிறேன்
உன்னுடைய சுதர்சன சக்கரத்தை எனக்கு வரமாகத் தா.
கிருஷ்ணர் : நீ உன் நண்பன் துரியோதனனின் மேல் வைத்திருக்கும் நட்பைக் கண்டு பிரமித்து நிற்கிறேன். உனக்கு நான் சுதர்சன சக்கரத்தைத் தருகிறேன்.
பக்திக்காக
உனக்கு நான் சுதர்சன சக்கரத்தைத் தரவில்லை. நீ
உன் நண்பன் துரியோதனனின் மேல் வைத்திருக்கும் நட்புக்காக நான் சுதர்சன சக்கரத்தைத் தருகிறேன்.
சுதர்சன சக்கரம் அந்த மேசையின் மீது இருக்கிறது. எடுத்துக் கொள்.
(அஸ்வத்தாமன் சுதர்சன சக்கரத்தை எடுக்கிறான் எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை.)
அஸ்வத்தாமன் : கிருஷ்ணா சுதர்சன சக்கரத்தை எடுக்க முடியவில்லை.
கிருஷ்ணர் : உனக்கு நான் சுதர்சன சக்கரம் தருகிறேன் என்று சொன்னேன், தந்து விட்டேன், உன்னால் எடுக்க முடியாவிட்டால் என்ன செய்ய முடியும்.
எடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடு. சுதர்சன சக்கரத்தை மறந்து விடு. உனக்கு அது சொந்தமில்லை என்று நினைத்துக் கொள். உனக்காக அது உருவாக்கப்படவில்லை என்று நினைத்துக் கொள்.
அஸ்வத்தாமன் : கிருஷ்ணா சுதர்சன சக்கரம் எனக்கு கண்டிப்பாக வேண்டும். ஏன் என்னால் எடுக்க முடியவில்லை.
கிருஷ்ணர் : அஸ்வத்தாமா சுதர்சன சக்கரம் ஒரு யந்திரம், அதற்குரிய மந்திரம் இருக்கிறது. தந்திரமும் இருக்கிறது.
சுதர்சன சக்கரம் என்பது ஒரு யந்திரம், அதற்கென்று தனிப்பட்ட மந்திரம் இருக்கிறது, தந்திரம் இருக்கிறது.
மந்திரத்தை உச்சாடணம் செய்து, தவமுறைகளைப் பின்பற்றி தவங்கள் செய்து, விரதமுறைகளைப் பின்பற்றி விரதங்களை செய்தால் மட்டுமே சுதர்சன சக்கரம் சித்தியாகும்.
சுதர்சன சக்கரத்தை
யார் சித்தி செய்கிறாரோ அவரால் மட்டும் தான் சுதர்சன சக்கரத்தைத் தொட முடியும். தந்திரத்தைப்
பயன்படுத்தி பிரயோகம் செய்ய முடியும். அவருக்கு மட்டும் தான்
சுதர்சன சக்கரம் கீழ்படியும். அவர் சொல்படி தான் நடக்கும்.
அவர் சொல்வதைத் தான் செய்யும், அவரைத் தவிர வேறு
யாருக்கும் சுதர்சன சக்கரம் கட்டுப்படாது என்பதை நினைவில் கொள்.
------K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்,
பேச்சாளர் &
வரலாற்று
ஆய்வாளர்,
------31-12-2023
-----ஞாயிற்றுக்
கிழமை
////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment