April 28, 2024

தென்காசி சரித்திரம்(17)-ஆனையூர் குடைவரைக் கோயிலும், காவல் மண்டபமும்-28-04-2024

 தென்காசி சரித்திரம்(17)-ஆனையூர் குடைவரைக் கோயிலும், காவல் மண்டபமும்-28-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆனையூர்  குடைவரைக் கோயில்

தென்காசி மாவட்டம்,

சங்கரன்கோவில் தாலூகாவில்

உள்ளது

 

இது பாண்டியர்களால்

கட்டப்பட்டது

 

சோழர்கள் இதுவரை

எந்த ஒரு

குடைவரைக்

கோயிலையும்

கட்டவில்லை

 

குடைவரைக் கோயிலை

எப்படி கட்டுவது

என்ற முறை

அவர்களுக்குத் தெரியாது

அதனால் சோழர்கள்

கோயிலை மட்டுமே

கட்டினர்

 

ஆனால் பாண்டியர்கள்

உலகம் வியக்கும் வகையில்

விஞ்ஞானிகளே

அதிசயிக்கும் வகையில்

இன்று இல்லாத மிகப்பெரிய

தொழில்நுட்பத்தைப்

பயன்படுத்தி

கோயில்களையும்,

குடைவரைக்

கோயில்களையும்

சோழர்கள் கட்டிய

கோயில்களை விட

சிறப்பான முறையில்

கட்டியுள்ளனர்

 

பாண்டியர்களின்

வரலாற்றைப்

படிப்போம்

பாண்டியர்களின்

சிறப்புகளைப்பற்றித்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

 

-----28-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////






April 25, 2024

தென்காசி சரித்திரம்(16)-அவத்தி கோட்டை என்றழைக்கப்படும் அகத்தியர் கோட்டை ஓர் ஆய்வு-25-04-2024

 

தென்காசி சரித்திரம்(16)-அவத்தி கோட்டை என்றழைக்கப்படும் அகத்தியர் கோட்டை ஓர் ஆய்வு-25-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

வரலாற்று உண்மைகளை

தெரிந்து கொள்ள

வேண்டுமானால்

வரலாறு நடைபெற்ற

இடங்களுக்கு நேரில்

சென்று களஆய்வு

மேற்கொள்ள வேண்டும்

 

வரலாறாய் வாழ்ந்து

கொண்டிருப்பவர்களை

சந்தித்து வரலாற்றை

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

திரு.V.K.S.செல்லப்பா குடும்பனார்

வல்லம்

மற்றும் அவரது மகன்

திரு.அம்ஜத்பாபா,

வல்லம்

ஆகியோர் வரலாறாய்

வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

அவர்கள் மூலமாக

வெளிப்பட்ட

வரலாற்று

உண்மைகளை

நாம் தெரிந்து

கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----25-04-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////





April 23, 2024

தென்காசி சரித்திரம்(15)-பாண்டியர்களால் கட்டப்பட்டு காலத்தை வென்று நிற்கும் விந்தன் கோட்டை-23-04-2024

 

தென்காசி சரித்திரம்(15)-பாண்டியர்களால் கட்டப்பட்டு காலத்தை வென்று நிற்கும் விந்தன் கோட்டை-23-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சோழர்கள் பல்லவர்கள்

என்று என்று

சொல்லி, சொல்லியே

சோழர்கள் தான்

உயர்ந்தவர்கள் என்ற

எண்ணம்

அனைவருடைய

மனதிலும் உண்டாகி

விட்டது

 

தமிழின்  பெருமையையும்

தமிழர்களின் கலை,

கலாச்சாரம்,

பண்பாடு,

ஆகியவற்றை

உலகளவில் கொண்டு

சென்றதிலும்,

பாண்டியர்கள் பங்கு

அளவிடற்கரியது

 

அத்தகைய

சிறப்புமிக்க

பாண்டியர்களால்

கட்டப்பட்ட

விந்தன் கோட்டையைப்

பற்றி இப்போது

பார்ப்போம்

 

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----23-04-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////




April 21, 2024

ஜபம்-பதிவு-956 மரணமற்ற அஸ்வத்தாமன்-88 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-956

மரணமற்ற அஸ்வத்தாமன்-88

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

துரோணர்: காலம் சொன்னதால் செய்தேனா, அல்லது கர்மா விளைவால் செய்தேனா என்பது எனக்குத் தெரியவில்லை.

 

நான் செய்தது சரியா தவறா என்று கூட எனக்குத் தெரியவில்லை.

 

பிரம்மாஸ்திரத்தை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான செயலுக்காக பயன்படுத்தினால் அது சாபத்தைக் கொண்டு வந்து விடும்.

 

சாபம் ஏற்படாமல் பார்த்துக் கொள். அது தான் உனக்கு நல்லது.

 

அஸ்வத்தாமன்: கர்மா என்னை சாபத்திற்கு உட்படுத்தினாலும், என்னை கஷ்டத்திற்குள் தள்ளினாலும், துன்பத்திற்குள் விழ வைத்தாலும் கர்மாவின் விளைவிலிருந்து யாரும் தப்ப முடியாது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா

 

கர்மாவினால் நான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். யாரால் தடுக்க முடியும்.

 

கர்மாவை யாராலும் மாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் கர்மாவைப் பற்றியோ அதன் விளைவுகளைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை.

 

நீங்கள் கவலைப்பட வேண்டாம் தந்தையே. ஒரு வீரனுக்கு, தகுதியான ஒருவனுக்குத் தான் பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு மன அமைதி அடையுங்கள்.

 

என்னை வாழ்த்தி அனுப்புங்கள் நான் செல்கிறேன்.

 

துரோணர்: எங்கே செல்கிறாய்

 

அஸ்வத்தாமன்: சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரம். பெறப் போகிறேன்.

 

துரோணர்: என்னிடம் பெற்றதுபோல் சிவனிடம் பெறுவது அவ்வளவு எளிது கிடையாது என்பது உனக்குத் தெரியுமா

 

அஸ்வத்தாமன்: இந்த உலகத்தில் எந்த ஒன்றைப் பெறுவதும் எளிதானது கிடையாது என்பது எனக்குத் தெரியும்.

 

பாசுபதாஸ்திரம் பெறுவது எவ்வளவு கடினம் என்றும், அதுவும் சிவனிடமிருந்து பெறுவது எவ்வளவு கடினம் என்றும் எனக்குத் தெரியும்.

 

இவைகளுடன் இன்னொன்றும் எனக்குத் தெரியும்

 

துரோணர்: என்ன தெரியும்

 

அஸ்வத்தாமன்: என்னால் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற முடியும் என்பதும் எனக்குத் தெரியும்

 

துரோணரின் மகன் அஸ்வத்தாமன் சாதாரணமான வீரன் கிடையாது என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிக்கவும் தெரியும்.

 

அதனால் தான் செல்கிறேன். சிவனை நோக்கி தவம் இருக்க செல்கிறேன். சிவனை அழைத்து பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகச் செல்கிறேன்.

 

மீண்டும் உங்களை பார்க்க வரும் போது பாசுபாதாஸ்திரத்துடன் தான் வருவேன்.

 

என்னை ஆசிர்வதியுங்கள் தந்தையே.

 

(துரோணர் ஆசீர்வதிக்கிறார். அஸ்வத்தாமன் செல்கிறான். பாசுபதாஸ்திரத்தை தன் மகன் அஸ்வத்தாமன் பெற்று விடுவான் என்பதை உணர்ந்து கொண்ட துரோணர் தன் மகன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு சிந்தனையில் மூழ்கி விட்டார்.)

 

சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெறுவதற்காக அஸ்வத்தாமன் புறப்பட்டு விட்டான்.

 

அவன் பின்னால் செல்வோம். பாசுபதாஸ்திரத்தை எவ்வாறு பெறுகிறான் என்பதைப் பார்ப்போம்.

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-955 மரணமற்ற அஸ்வத்தாமன்-87 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-955

மரணமற்ற அஸ்வத்தாமன்-87

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஆன்ம சக்தி என்று சொல்லப்படக்கூடிய      பிரம்மத்தை உணர வேண்டும். அதற்குப் பிறகு உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களையும் செயல்பாட்டுக் கொண்டு வந்து உடம்பும், மனதும் சேர்ந்து திரட்டிய சக்தியை ஏதாவது ஒரு             ஆயுதத்தின் மீதோ அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீதோ இறக்க வேண்டும்.

 

அப்படி உருவாக்கப்படும் எந்த ஒரு ஆயுதமும் பிரம்மாஸ்திரமாக மாறும்.

 

எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த பிரம்மாஸ்திரத்தை உருவாக்கி பயன்படுத்தலாம்.

 

எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்குள் இருக்கும் ஆன்ம சக்தி என்று சொல்லப்படக்கூடிய பிரம்மத்தை உணரக்கூடிய சக்தியையும், உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களையும் செயல்பாட்டுக் கொண்டு வந்து உடம்பையும், மனதையும் இணைத்து சக்தியை யாரால் பிறப்பிக்க முடிகிறதோ அவரால் மட்டுமே இந்த பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்க முடியும்.

 

பிரம்மாஸ்திரம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆன்ம சக்தியைப் பொறுத்துத் தான் பிரம்மாஸ்திரம் செயல்படும். பிரம்மாஸ்திரம் என்பது அதைப் பயன்படுத்துபவரின் ஆன்ம சக்தியைப் பொறுத்து மாறுபடும்.

 

அர்ஜுனன் விட்டால் அதற்கு ஒரு சக்தி இருக்கும், யுதிஷ்டிரன் விட்டால் அதற்கு ஒரு சக்தி இருக்கும், சிவன் விட்டால் அதற்கு ஒரு சக்தி இருக்கும். இவ்வாறு பிரம்மாஸ்திரம் அதை விடுபவரின் ஆன்ம சக்தியைப் பொறுத்து சக்தியில் வேறுபடும்.

 

இதனை பிரயோகித்த உடனேயே மிகக் கொடிய நச்சுத் தன்மை கொண்ட கதிர்வீச்சுக்கள் வெளிப்படும்.

 

பிரயோகம் செய்த இடத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு புல், பூண்டுகள் கூட முளைக்காது.

 

பிரம்மாஸ்திரத்தைப் பலகீனமானவர்கள் மீது பிரயோகம் செய்யக்கூடாது.

 

பிரம்மாஸ்திரத்தின் உயர்ந்த நிலை ஒன்று இருக்கிறது அது தான் பிரம்மசிரா. மும்மூர்த்திகளின் சக்தியின் ஒரு பகுதி தான் பிரம்மாஸ்திரம். மும்மூர்த்திகளின் பெரும் பகுதி சக்திளைத் தன்னுள் கொண்டதுதான் பிரம்மசிரா.

 

பிரம்ம சீராவை ஏவினால் உலகம் அழியும்

 

பிரம்மாஸ்திரம், பிரம்ம சீரா இந்த இரண்டையும் விட சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது அது தான் பிரம்ம பானம்

 

இந்த அஸ்திரத்துக்கு இணையாக எந்த ஒரு அஸ்திரமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

 

இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு அஸ்திரத்தாலேயும் எந்த ஒரு படையை அழிக்க முடியவில்லையோ அந்த படையின் மீது மட்டும் தான் இந்த பிரம்மபானத்தை பிரயோகிக்க முடியும்.

 

இவ்வாறு பல்வேறு படிநிலைகளைத் தன்னுள் கொண்டது தான் பிரம்மாஸ்திரம்

 

இப்போது தெரிந்ததா பிரம்மாஸ்திரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்று

அதை கற்றுக்க கொள்ள அமைதி பொறுமை நிதானம் தேவை என்று

 

மற்ற அஸ்திரங்களை விட பிரம்மாஸ்திரம் வித்தியாசம் கொண்டது என்று

அறிந்து கொண்டாயா

 

பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கும் வித்தையை உனக்கு சொல்லித் தருகிறேன்

 

அஸ்வத்தாமன்: மீதி பாதி என்று எதைச் சொல்கிறீர்கள்?

 

பிரம்மாஸ்திரத்தை திருப்பி வரவழைக்கும் மந்திரத்தைத் தான் மீதி பாதி என்கிறேன்.

 

இப்போது நான் உனக்கு பிரம்மாஸ்திரத்தை திருப்பி வரவழைக்கும் மந்திரத்தை உனக்கு சொல்லித் தரப்போவதில்லை,

 

ஏற்கனவே நான் சொல்லியபடி அமைதி, பொறுமை, நிதானம் கொண்டவனாக நீ மாறிய பிறகு, உன் நடத்தையில் நல்லவைகள் வெளிப்பட்ட பிறகு மீதி பிரம்மாஸ்திரத்தைச் சொல்லித் தருகிறேன்.

 

 துரோணர்:  நீங்கள் பிரம்மாஸ்திரத்தைச் சொல்லித் தருகிறேன் என்று சொன்னதே பெரிய விஷயம். பாதி கற்றுக் கொள்வதில் எனக்கு வருத்தம் இல்லை. மீதி பாதியை விரைவிலேயே கற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

தாங்கள் எனக்கு பிரம்மாஸ்திரத்தைக் கற்றுத் தாருங்கள். நான் கற்றுக் கொள்கிறேன்.

 

(துரோணர் பிரம்மாஸ்திரத்தை எப்படி பிரயோகம் செய்வது என்பதை கற்றுக் கொடுக்கிறார். அஸ்வத்தாமனும் அதை கற்றுக் கொள்கிறான். பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கும் முறையைக் கற்றுக் கொள்கிறான். எப்படி திரும்ப அழைப்பது என்பது அவனுக்கும் தெரியாது. )

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-954 மரணமற்ற அஸ்வத்தாமன்-86 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-954

மரணமற்ற அஸ்வத்தாமன்-86

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

துரோணர் : பிரம்மாஸ்திரம் சாதாரண விஷயம் கிடையாது

 

அஸ்வத்தாமன் : அதனால் தான் உங்களைப் போன்ற சக்தி படைத்தவர்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்

 

துரோணர் : பிரம்மாஸ்திரம் கற்றுக் கொள்வதற்கு அமைதி, பொறுமை, நிதானம் தேவை, உன்னைப் போன்று கோபம் கொள்பவர்கள், எதிரியை அழிக்க நினைப்பவர்கள் கற்றுக் கொள்ள முடியாது.

 

அஸ்வத்தாமன் : அர்ஜுனனுக்கு எப்படி கற்றுக் கொடுத்தீர்கள்?

 

துரோணர் : அவன் கோபப்பட மாட்டான்.

 

அஸ்வத்தாமன்: துரியோதனன் மேல் பகையாக இருக்கும் அர்ஜுனன் கோபப்பட மாட்டான் என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.

 

எனக்கு பிரம்மாஸ்திரம் கற்றுக் கொடுக்க மாட்டேன் என்பதை சுற்றி வளைத்துச் சொல்கிறீர்கள்.

 

குரு என்ற முறையில் எனக்கு கற்றுக் கொடுக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் மகன் என்ற முறையில் கற்றுக் கொள்வதற்காக வந்தேன்.

 

துரோணர் : கற்றுக் கொடுக்கவில்லை என்றால்

 

அஸ்வத்தாமன்:  பிரம்மாஸ்திரம் தெரிந்த வேறு ஒருவரிடம் சென்று கற்பேன்

 

துரோணர் : இது என்னை இழிவு படுத்தும் செயல் அல்லவா?

 

அஸ்வத்தாமன்: குரு என்ற முறையில் சீடனுக்கு கற்றுக் கொடுக்காமல் இருப்பது தங்களுக்கு இழிவாகத் தெரியவில்லை.

 

தந்தை என்ற முறையில் மகனுக்கு கற்றுக் கொடுக்காமல் இருப்பது தங்களுக்கு இழிவாகத் தெரியவில்லை.

 

நான் வெளியே சென்று கற்பது தான் தங்களுக்கு இழிவாகத் தெரிகிறது

 

துரோணர்: பிரம்மாஸ்திரம் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது தெரியுமா?

 

அஸ்வத்தாமன்: அதனால் தான் மகத்துவம் நிறைந்த பிரம்மாஸ்திரத்தை, மகத்துவம் நிறைந்த தங்களிடம் கற்றுக் கொள்வதற்காக வந்தேன்.

 

துரோணர்: வற்புறுத்தி எந்த ஒன்றையும் பெற்று விட முடியாது

 

 

அஸ்வத்தாமன்: நான் வற்புறுத்தவில்லை மகன் என்ற முறையில் கேட்டேன். தந்தை என்ற முறையில் நீங்கள் தான் இன்னும் பதில் சொல்லவில்லை. எனக்கு பிரம்மாஸ்திரத்தை கற்றுத் தருவீர்களா மாட்டீர்களா? எனக்கு இறுதியாக ஒரு முடிவைச் சொல்லுங்கள்.

 

துரோணர்: இது தான் கர்மா என்றால் அதை மாற்ற முடியாது. நான் பிரம்மாஸ்திரம் சொல்லித் தருகிறேன். ஆனால் ஒன்று பிரம்மாஸ்திரத்தை பாதி தான் சொல்லித் தருவேன்

 

அமைதி, பொறுமை, நிதானம் கொண்டவனாக நீ மாறிய பிறகு, உன் நடத்தையில் நல்லவைகள் வெளிப்பட்ட பிறகு மீதி பிரம்மாஸ்திரத்தைச் சொல்லித் தருவேன்

 

இதற்கு சம்மதம் என்றால் நான் உனக்கு பிரம்மாஸ்திரம் சொல்லித் தருகிறேன்

 

அஸ்வத்தாமன்: நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.

 

துரோணர்: பொதுவாக ஒரு தெய்வீக அஸ்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு நான்கு வழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

அஸ்திரத்தை வரவழைக்கும் மந்திரம்

அஸ்திரத்தை செலுத்தும் மந்திரம்

அஸ்திரத்தை திருப்பி வரவழைக்கும் மந்திரம்

அஸ்திரத்தை மறைய வைக்கும் மந்திரம்

ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.

 

ஆனால், பிரம்மாஸ்திரம் இதிலிருந்து மாறுபட்டது

 

பிரம்மாஸ்திரம் இது பிரம்மாவினுடைய அஸ்திரம். இது பிரம்மாவினுடைய அஸ்திரமாக இருந்தாலும், இதில் மும்மூர்த்திகளுடைய சக்தியின் ஒரு பகுதி அடங்கி இருக்கிறது.

 

பிரம்மாஸ்திரம் அம்பாகவோ, வேலாகவோ, ஈட்டியாகவோ எந்த ஒரு வடிவத்திலும் இருக்காது. இதற்கு தனிப்பட்ட வடிவம் என்ற ஒன்று கிடையாது. எந்த ஒரு சாதாரணப் பொருளையும் பிரம்மாஸ்திரமாக மாற்ற முடியும்

 

பிரம்மாஸ்திரத்தை பிரயோகிப்பதற்கு என்று தனிப்பட்ட ஒரு முறை இருக்கிறது. பிரயோகிக்கும் முறையைத் தெரிந்து கொண்டால் தான் அவர் பிரம்மாஸ்திரத்தை கற்றுக் கொண்டதாக அர்த்தம். அதனால் முதலில் அதை பிரயோகிக்கும் முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

பிரயோகிக்கும் முறையை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லித் தர முடியாது. கற்றுக் கொடுக்க முடியாது.

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////