ஜபம்-பதிவு-601
(அறிய
வேண்டியவை-109)
(துரியோதனன்
தலை
மேல்
கால்
வைத்து பீமன்
பேசத்
தொடங்கினான்)
பீமன்
:
“துரியோதனா
எத்தகைய
அக்கிரமச்
செயல்களை
எல்லாம்
செய்யக்
கூடாதோ
அத்தகைய
அக்கிரமச்
செயல்களை
எல்லாம்
செய்திருக்கிறாய்
நியாயத்தை
அழித்து
அநியாயத்தை
நிலைநாட்டி
இருக்கிறாய்
குரு
வம்சத்தையே
களங்கப்
படுத்தி
இருக்கிறாய்
தர்மத்தை
அழித்து
அதர்மத்தைக்
கடைபிடித்து
இருக்கிறாய்
யாரையும்
மதிக்காமல்
தலை
கால்
புரியாமல்
ஆணவத்தில்
ஆடியிருக்கிறாய்
உன்னுடைய
தவறுகளை
உணர்ந்து
நீ
திருந்த
வேண்டும்
என்பதற்காக
உனக்குக்
கொடுக்கப்பட்ட
வாய்ப்புகளை
எல்லாம்
அலட்சியம்
செய்து
விட்டு
அதனை
பின்பற்றாமல்
வாழ்ந்திருக்கிறாய்
வாழ்க்கையை
எப்படி
எல்லாம்
வாழக்கூடாதோ
அப்படி
எல்லாம்
வாழ்ந்திருக்கிறாய்
இப்போது
வாழ்வின்
இறுதிக்
கட்டத்தை
நெருங்கிக்
கொண்டிருக்கிறாய்
மரணம்
உன்னை
தழுவக்
காத்துக்
கொண்டிருக்கிறது”
“நீ
இறப்பதால்
யாருக்கும்
எந்தவிதமான
இழப்பும்
ஏற்படப்
போவதில்லை
யாரும்
அழப்
போவதில்லை
உன்னைக்
கொன்றதால்
எனக்கு
எந்தப்
பாவமும்
பிடிக்கப்
போவதில்லை
“
(என்று
துரியோதனன்
தலையின்
மீது
காலை
வைத்து
பீமன்
அழுத்தினான்
இக்
காட்சியைக்
கண்ட
தர்மர்
ஓடி
வந்து
பீமனைத்
தடுத்தார்)
தர்மர் :
“பீமா
என்ன
காரியம்
செய்யத்
துணிந்தாய்
உன்னுடைய
செயலை
உடனடியாக
நிறுத்து
காயம்
பட்டுக்
கிடக்கும்
எதிரியை
அவமானப்
படுத்துவது
தவறானதாகும் “
“அதுவும்
காயம்
பட்டுக்
கிடக்கும்
துரியோதனன்
இளவரசனாக
இருந்தவன்
அரசனாக
வாழ்ந்தவன்
11
அக்ரோணி
சேனைகளை
ஏற்று
வழிநடத்தியவன்
அத்தகையவன்
தலையின்
மீது
உன்னுடைய
கால்களை
வைக்கக்
கூடாது
அது
துரியோதனனை
இழிவு
படுத்தும்
விதத்தில்
அமைந்து
விடும்
சாவு
துரியோதனனை
நெருங்கிக்
கொண்டிருக்கிறது
இனி
நடக்க
வேண்டியவைகளை
காலம்
பார்த்துக்
கொள்ளும்
வா”
(என்று
தர்மர்
பீமனை
அழைத்தார்
துரியோதனனுடைய
தலையில்
வைத்திருந்த
காலை
பீமன்
எடுத்து
விட்டு
பீமன்
தர்மருடன்
நடந்து
சென்று
கொண்டிருந்தான்)
(இந்நிகழ்ச்சியைக்
கண்டு
கொதித்துப்
போன
பலராமர்
கோபம்
கொண்டு
எழுந்து
பீமனை
நோக்கி
ஓடி
வந்து
ஆவேசம்
பொங்க
பேச
ஆரம்பித்தார் )
பலராமர்
:
“பீமா
என்ன
காரியம்
செய்து
விட்டாய்
கதாயுதச்
சண்டையில்
ஒ‘ருவரை
தொடைக்கு
கீழே
அடிக்கக்
கூடாது
என்பது
விதி
அந்த
விதியை
நீ
மீறி விட்டாய்
யாராலும்
மன்னிக்க
முடியாத
மிகப்பெரிய
தவறை
செய்து
விட்டாய்
“நீ
வீரனாக
இருந்தால்
இத்தகைய
ஒரு
தவறை
செய்திருக்க
மாட்டாய்
நீ
ஒரு
கோழை
என்பதை
நிரூபித்து
விட்டாய்
பீமா”
“கோழையான
நீ
இனி
இந்த
உலகத்தில்
உயிரோடு
இருக்கவே
கூடாது
உயிரோடு
வாழ்வதற்கு
தகுதி
அற்றவன் நீ”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
22-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment