ஜபம்-பதிவு-610
(அறிய
வேண்டியவை-118)
“பாஞ்சாலி
கௌரவர்கள்
அவையில்
அவமானப்
படுத்தப்பட்ட
போது
பாஞ்சாலியை
தவறான
வார்த்தைகளைப்
பேசியும்
தவறான
செயல்களைச்
செய்தும்
பாஞ்சாலியை
நீ
அவமானப்
படுத்தியபோது
கர்ணன்
அதை
தடுக்காமல்
தானும்
சேர்ந்து
அந்த
அதர்மச்செயலுக்கு
துணை
போனதால்
கர்ணன்
கொல்லப்பட்டான்”
“சகோதரியாக
நினைக்க
வேண்டிய
பாஞ்சாலியை
ஜயத்ரதன்
காட்டில்
கவர்ந்த
அதர்மச்
செயலை
புரிந்த
காரணத்தினால்
ஜயத்ரதன்
கொல்லப்பட்டான்”
“பாஞ்சாலியை
கௌரவர்கள்
அவையில்
அவமானப்
படுத்தி
பாஞ்சாலியை
தகாத
வார்த்தைகளால்
பேசி
அவளுடைய
ஆடையை
துச்சாதனன்
கொண்டு
அவிழ்க்கச்
செய்யச்
சொன்னாயே
நீ
செய்த
அதர்மச்
செயல்
உன்னை
காயப்படுத்தி
உன்னை
படுக்க
வைத்திருக்கிறது”
“நீ
சொன்னவர்கள்
அனைவரையும்
நான்
காயப்படுத்தவில்லை
கொல்லவில்லை
அவர்கள்
செய்த
அதர்மச்
செயலும்
அதர்மத்திற்கு
துணை
போன
செயலும்
அவர்களை
காயப்படுத்தியது
கொன்றது”
“அதர்மத்தைச்
செய்தவர்களும்
அதர்மத்திற்கு
துணை
போனவர்களும்
அழிந்து
போவார்கள்
என்பதை
கௌரவர்கள்
வரலாறு
வருங்காலத்தில்
அனைவருக்கும்
ஒரு
பாடமாக
இருக்கும்”
துரியோதனன்
:
“கிருஷ்ணா
நானும்
முறைப்படி
கல்வி
கற்றிருக்கிறேன்
முறைப்படி
அனைத்து
கலைகளிலும்
தேர்ச்சி
பெற்றிருக்கிறேன்
வித்தைகளில்
விளையாடுவதில்
வல்லவனாக
இருந்திருக்கிறேன்
நிறைய
தானங்களைச்
செய்திருக்கிறேன்
உலகம்
அனைத்தையும்
ஒரு
குடையின்
கீழ்
ஆட்சி
செய்திருக்கிறேன்
எல்லா
சுகங்களையும்
அனுபவித்திருக்கிறேன்
ஒரு
குறையும்
இல்லாமல்
வாழ்ந்திருக்கிறேன்
வீர
சஷத்திரியனுக்குரிய
வீர
மரணத்தை
அடைய
இருக்கிறேன்
தேவர்களுக்கு
உரியவைகளும்
அரசர்களால்
அடைய
முடியாதவையுமான
மனிதனுடைய
போகங்களும்
உத்தமமான
சகல
ஐசுவரியங்களும்
என்னால்
அடையப்பட்டன
என்னைவிட
எவன்
சிறந்த
முடிவை
அடைவான்”
“பீமன்
என்னுடைய
தலையின்
மேல்
காலை
வைத்ததை
நான்
அவமானமாகக்
கருதவில்லை
ஏன்
என்றால்
இன்னும்
சில
விநாடிகளில்
காக்கைகளோ
கழுகுகளோ
பருந்துகளோ
என்னுடைய
உடலைக்
கொத்தி
அழிக்க
இருக்கின்றன
“
“நண்பர்களோடும்
உறவினர்களோடும்
சேர்ந்து
நான்
சுவர்க்கம்
செல்லப்
போகிறேன்
நீங்கள்
துயரத்துடனும்
மனவருத்துத்துடனும்
இந்த
உலகத்தில்
வாழ்ந்து
கொண்டிருக்கப்
போகிறீர்கள்
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
22-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment