ஜபம்-பதிவு-607
(அறிய
வேண்டியவை-115)
“பார்வையற்றவர்
என்ற
காரணத்தினால்
என்னுடைய
தந்தைக்கு
மறுக்கப்பட்ட
அரசாட்சி
பார்வையற்றவரான
திருதராஷ்டிரருடைய
மகன்
துரியோதனன்
என்ற
காரணத்தினால்
எனக்கும்
அஸ்தினாபுரத்தை
ஆட்சி
செய்யும்
உரிமை
இல்லை
என்று
என்னுடைய
உரிமையைப்
பறித்து
நான்
அரசாட்சி
செய்யக்கூடாது
என்று
அதர்மச்
செயலைப்
புரிந்தது
யார்?”
“பார்வையற்ற
அண்ணனுடைய
வாரிசான
துரியோதனனுக்கு
அரசாட்சி
செய்யும்
உரிமை
இல்லை
என்று
சொல்லி
விட்டு
பார்வையுள்ள
தம்பியின்
பிள்ளையான
யுதிஷ்டிரனுக்குத்
தான்
அரசாட்சி
செய்யும்
உரிமை
இருக்கிறது
என்று
சொல்லி
யுதிஷ்டிரனுக்கு
இளவரசர்
பட்டம்
சூட்டி
அதர்மச்
செயலைப்
புரிந்தது
யார்?”
“அண்ணன்
பார்வையற்றவராக
இருந்தாலும்
அண்ணனுடைய
பிள்ளையான
துரியோதனன்
பார்வையுடையவனாக
இருக்கிறான்
அவனுக்கு
கிடைக்க
வேண்டிய
நீதியை
வழங்க
வேண்டும்
என்று
யாரும்
சொல்லாமல்
தம்பியின்
பிள்ளைகள்
தான்
நாட்டை
ஆள
வேண்டும்
என்று
அதர்மச்
செயலைப்
புரிந்து
கொண்டிருப்பவர்
யார்?”
“எனக்கு
இழைக்கப்பட்ட
அநீதியை
எதிர்த்து
நான்
கேள்வி கேட்டால்
எனக்கு
மறுக்கப்பட்ட
நீதி
எனக்கு
கிடைக்க
வேண்டும்
என்று
நான்
கேள்வி கேட்டால்
எனக்கு
கிடைக்க
வேண்டிய
உரிமை
எனக்கு
கிடைக்க
வேண்டும்
என்று
நான்
கேள்வி கேட்டால்
என்னை
கெட்டவன்
நிலத்தின்
மேல்
ஆசையுள்ளவன்
என்று
சொல்கிறீர்கள்”
“எனக்குத்
தான்
நிலத்தின்
மேல்
உள்ள
ஆசையின்
காரணமாக
குருஷேத்திரப்
போரை
நடத்தினேன்
என்றால்
நிலத்தின்
மேல்
ஆசையில்லாமலா
பாண்டவர்கள்
போர்
செய்தார்கள்”
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
பிதாமகர்
பீஷ்மரை
பாண்டவர்கள்
காயப்படுத்தி
அம்புப்
படுக்கையில்
படுக்க
வைத்திருக்கிறார்கள்”
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
பாண்டவர்கள்
குரு
துரோணாச்சாரியாரை
கொன்றிருக்கிறார்கள்”
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
என்னுடைய
தம்பியர்கள்
99
பேரையும்
பாண்டவர்கள்
கொன்றிருக்கிறார்கள்”
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
பாண்டவர்களில்
ஒருவனான
பீமன்
என்னுடைய
தொடை
எலும்பை
உடைத்து
என்னைக்
காயப்படுத்தி
என்னை
தரையில்
படுக்க
வைத்திருக்கிறார்கள்”
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
பாண்டவர்கள்
குருஷேத்திரப்
போரில்
பல
பேரை
கொன்றிருக்கிறார்கள்”
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
பாண்டவர்கள்
குருஷேத்திரப்
போரில்
உறவினர்களைக்
கொன்றிருக்கிறார்கள்
“
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
பாண்டவர்கள்
குருஷேத்திரப்
போரில்
போரிட்டிருக்கிறார்கள்”
“நிலத்தின்
மேல்
ஆசையில்லாமல்
தானா
பாண்டவர்கள்
இந்த
செயல்களை
எல்லாம்
செய்திருக்கிறார்கள்”
“பாண்டவர்கள்
அரசாட்சி
செய்ய
வேண்டும்
என்று
எத்தகைய
சதிச்
செயலைச்
செய்தாலும்
அவர்கள்
தர்மவான்கள்
தர்மத்தின்படி
நடப்பவர்கள்
ஆனால்
நாங்களும்
அரசாட்சி
செய்வதற்காக
பாண்டவர்கள்
செய்த
செயல்களையே
நாங்களும்
செய்தால்
கௌரவர்கள்
கெட்டவர்கள்
அதர்மச்
செயலைப்
புரிபவர்கள்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
22-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment