July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-117


                ஜபம்-பதிவு-609
          (அறிய வேண்டியவை-117)

“பல பேர்
முன்னிலையில்
ஒரு பெண்ணை
யார் அவமானப்
படுத்தினாரோ
அவரும்
அவருடன் சேர்ந்து
அந்த அக்கிரமச்
செயலுக்கு துணை
போனவர்களும்
அந்த அக்கிரமச்
செயலைத்
தடுக்காமல்
இருந்தவர்களும்
அழிந்து
போவார்கள்
என்பதை - இந்த
உலகம் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்ற
காரணத்திற்காக
ஏற்பட்டது தான்
குருஷேத்திரப் போர்”

“எவ்வளவு பெரிய
உயர்ந்த
பதவியில்
இருந்தாலும்
அதிகப்படியான
அதிகாரத்தை
தன்னிடம்
வைத்திருந்தாலும்
யாராலும்
வீழ்த்த முடியாத
பெரிய வீரனாக
இருந்தாலும்
எவ்வளவு
வித்தைகளைக் கற்று
வைத்திருந்தாலும்
ஒரு பெண்ணை
அவமானப்படுத்தினால்
அழிந்து
போவார்கள்
என்பதை
இந்த உலகம்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ஏற்பட்டது தான்
குருஷேத்திரப் போர்”

“வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
உள்ள எந்த ஒரு
பெண்ணையும்
அவமானப்படுத்த
வேண்டும்
என்ற
எண்ணமே
ஒருவருக்கும்
ஏற்படக்கூடாது
என்ற
நிலையை
இந்த
சமுதாயத்தில்
உருவாக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ஏற்பட்டது தான்
குருஷேத்திரப் போர்”

“துரியோதனா நீ
நினைப்பதுபோல்
குருஷேத்திரப் போர்
யார் பூமியை
அரசாட்சி செய்ய
வேண்டும்
என்ற
காரணத்திற்காக
நடத்தப்பட்ட போர்
கிடையாது
குருஷேத்திரப் போர்
ஒரு பெண்ணுக்கு
ஏற்பட்ட
அவமானத்தை
துடைப்பதற்காக
நடத்தப்பட்ட போர்”

துரியோதனன் :
“அப்படி என்றால்
பிதாமகர் பீஷ்மரை
ஏன் அதர்மச்
செயல் புரிந்து
காயப்படுத்தினீர்கள்”

“குரு துரோணரை ஏன்
அதர்மச் செயல்
புரிந்து கொன்றீர்கள்”

“கர்ணனை ஏன்
அதர்மச் செயல்
புரிந்து கொன்றீர்கள்”

கிருஷ்ணன்  :
“துரியோதனா
நீ சொன்னவர்கள்
அனைவரையும்
நான்
கொல்லவில்லை
நான்
அதர்மச் செயல்
புரிந்து
கொள்ளவில்லை
அவர்கள்
செய்த
அதர்மமே
அவர்களைக்
கொன்றது”

“பாஞ்சாலி
கௌரவர்கள்
அவையில்
அவமானப்
படுத்தப்பட்ட போது
அஸ்தினாபுரத்தை
பாதுகாப்பேன்
என்று சபதம்
மேற்கொண்டிருந்ததால்
அஸ்தினாபுரத்தின்
நாற்காலியுடன்
இணைக்கப்
பட்டிருந்ததால்
பாஞ்சாலிக்கு
நடந்த
கொடுமையை
தடுக்க
முடியாமல்
அதர்மச் செயலுக்கு
துணை போன
காரணத்தினால்
பீஷ்மர்
காயப்படுத்தப் பட்டு
அம்பு படுக்கையில்
படுக்க
வைக்கப்பட்டிருக்கிறார்”

“பாஞ்சாலி
கௌரவர்கள்
அவையில்
அவமானப்
படுத்தப்பட்ட போது
தன்னுடைய மகன்
அஸ்வத்தாமன்
துரியோதனனான
உன்னுடன்
நட்பு கொண்டு
நடந்து தவறுக்கு
துணை
போனதால்
பாஞ்சாலிக்கு
நடந்த
கொடுமையை
தடுக்க
முடியாமல்
துரோணர்
அதர்மச் செயலுக்கு
துணை போன
காரணத்தினால்
துரோணர் தலை
வெட்டப் பட்டு
கொல்லப்பட்டார் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment