ஜபம்-பதிவு-780
(சாவேயில்லாத
சிகண்டி-114)
(பாஞ்சால மன்னன்
துருபதன்
பீஷ்மரிடம் கொண்ட
பகையினால்
யாராலும்
கொல்ல முடியாத
பீஷ்மரைக்
கொல்வதற்கு
தனக்கு ஒரு
மகன் வேண்டும்
என்று சிவனை
நோக்கி தவம்
செய்தான்
பாஞ்சால மன்னன்
துருபதன் செய்த
தவத்தில் மகிழ்ந்து
போன சிவபெருமான்
துருபதன் முன்னால்
காட்சியளித்து
பேசத் தொடங்கினார்)
சிவன் :
துருபதா
நீ கேட்கும்
வரம் எளிதில்
கிடைக்கக்கூடியதல்ல
என்பது உனக்குத்
தெரியுமா
துருபதன் :
எளிதில்
கிடைக்க வேண்டும்
என்பதற்காகத் தான்
தங்களை நோக்கித்
தவம் இருந்தேன்
இறைவா
சிவன் :
கடவுளை நோக்கி
தவம் இருந்தாலும்
கடவுளால் என்ன
கொடுக்க முடியுமோ
அதைத் தானே
கடவுளால்
கொடுக்க முடியும்
யாருக்கு என்ன
கிடைக்க வேண்டுமோ
அது தானே
கிடைக்கும்
விதிப்படி என்ன
நடக்க வேண்டுமோ
அது தானே நடக்கும்
துருபதன் :
இறைவா
விதியையே
மாற்றக் கூடியவர்
நீங்கள்
காலமே தங்களின்
கட்டளைக்கு
அடிபணிந்து தானே
நடக்கிறது
உங்களால்
முடியாதது என்று
எதுவும் இல்லை
நீங்கள் நினைத்தால்
எதையும் செய்யலாம்
கிடைக்காததையும்
கிடைக்கச் செய்யும்
வல்லமை
உங்களுக்கு உண்டு
அதனால் தான்
எனக்குத்
தேவையானதைக்
கேட்டு தங்களை
நோக்கி தவம்
இருந்தேன்
சிவன் :
துருபதா
நீ கேட்டதில்
மூன்று விஷயங்கள்
அடங்கி இருக்கிறது
துருபதன் :
என்ன விஷயங்கள்
இறைவா
சிவன் :
முடிந்தது
தொடங்க வேண்டும்
புதியது
தொடங்க வேண்டும்
தொடங்கியது
முடிய வேண்டும்
துருபதன் :
புரியவில்லை
இறைவா
சிவன் :
மனிதனால் புரிந்து
கொள்ள முடியாத
விஷயங்களில் தான்
பிரபஞ்ச ரகசியங்களே
அடங்கி இருக்கிறது
துருபதன் :
பிரபஞ்ச ரகசியங்களை
தெரிந்து கொள்ளும்
அளவிற்கு எனக்கு
சக்தி இல்லை
சிவன் :
மனிதனுக்கு
எதுவும் தெரியாது
தெரியாததை
தெரிந்து கொள்ள
வேண்டும் என்று
முயற்சி
செய்ய மாட்டான்
ஆனால்
அனைத்தையும்
தெரிந்து
கொண்டவன் போல்
ஆட்டம் மட்டும்
போடுவான்
கடவுள் படைத்த
படைப்புகளை
வைத்துக்
கொண்டு தான்
மனிதனால் எந்த
ஒன்றையும் உருவாக்க
முடியுமே தவிர
கடவுள் படைத்த
படைப்புகளைத்
தவிர்த்து
மனிதனால் எந்த
ஒன்றையும்
உருவாக்க முடியாது
-----ஜபம் இன்னும்
வரும்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----18-06-2022
-----சனிக்கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment